ஏ.ஆர் முருகதாஸின் திரைத்துறை வாழ்க்கை

தமிழ் திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிக் கொண்டிருந்த ஏ.ஆர் முருகதாஸ் தனது முதல் பட வேலைகளை தொடங்கி பல்வேறு தயாரிப்பாளர்களையும் நடிகர்களையும் சந்தித்து வந்துள்ளார்.

ரட்சகன், குஷி போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி கொண்டிருந்த ஏ.ஆர்.முருகதாஸ் முதன் முதலில் இயக்குனராக அறிமுகமானது தீனா என்ற படத்தில்தான். அஜித், லைலா, சுரேஷ் கோபி என பலரும் நடித்துள்ள இந்த படம் ஏ. ஆர் முருகதாஸுக்கு மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது மட்டுமல்லாமல் திரையரங்குகளில் பல நாட்கள் வெற்றிகரமாக தொடர்ந்து ஓடியது.

சமீபத்தில் ஏ.ஆர் முருகதாஸ் நடிகர் மனோபாலா தொகுத்து வழங்கிய பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு தனது முதல் படமான தீனா பட வாய்ப்பை பற்றிய சுவாரசியமான தகவலை பகிர்ந்து கொண்டார். அதில் தான் உதவி இயக்குநராக இருந்தபோது முதல் படத்தை இயக்க வாய்ப்பு தேடி கொண்டிருந்ததாகவும் அதற்காக பல நடிகர்களையும் பல தயாரிப்பாளர்களையும் சந்தித்து வந்ததாகும்.

ஒருநாள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பொழுது அஜித் அனுப்பியதாக ஒரு நபர் வந்து தூங்கிக்கொண்டிருந்த தன்னை கூட்டிக்கொண்டு போய் சென்னையில் பிரபல ஹோட்டலில் அஜீத்துடன் தீனா படத்தின் கதை விவாதிக்க பட்டதாகும். அவ்வாறு எதிர்பார்க்காமல் தல அஜித் கூப்பிட்டு கதை கேட்டு அந்தக் கதை பிடித்துப் போனதால் அதே இடத்தில் ஆயிரத்தி ஒரு ரூபாய் முன்பணம் கொடுத்து இந்த படத்தை கண்டிப்பாக நாம் பண்ணலாம் என்றார்.

ஆனால் நாட்கள் குறைவாக உள்ளதால் ஒரு வாரத்திலேயே படப்பிடிப்புகள் தொடங்கி விடலாம் என அஜித் கூறியதாகவும், அதனால் முதல் படமான தீனா திரைப்படத்தை ஒரு வாரத்திற்குள்ளாகவே அனைத்து நடிகர்களையும் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களையும் தயார் செய்து அஜித் சொன்ன ஒரு வாரத்திலேயே படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இவ்வாறு தனது முதல் படமான தீனா படத்தில் நடந்த சுவாரசியமான நிகழ்வுகள் அந்தப் பேட்டியின் மூலம் பகிர்ந்து கொண்டார்.

தனது முதல் படமே நடிகர் அஜித்தை வைத்து இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது கஜினி, துப்பாக்கி, கத்தி, சர்கார் என பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி இந்திய அளவில் அனைவரும் உற்றுநோக்கும் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருகிறார்

Share this
தொடர்புடையவை:  லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீனா திட்டமிட்டே தாக்குதல் நடத்தியது: ஜெய்சங்கர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *