கொரோனா சமூக பரவலாக மாறிவிட்டதற்கான அறிகுறி தெரிகிறது இந்திய மருத்துவர்  சங்கம் எச்சரிக்கை

கொரோனா தொற்று நாடு முழுவதும் சமூக பரவலாக மாறிவிட்டதற்கான மோசமான அறிகுறி ஏற்பட்டிருப்பதாக இந்திய மருத்துவர்  சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவில் இதுவரை  10,77, 618 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 26,816 பேர் உயிரிழந்துள்ளனர்.3,73, 379 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 6,77, 423 பேர் குணமடைந்துள்ளனர்.

இதுவரை நகரங்களில் அதிகரித்து வந்த கொரோனா தொற்று தற்போது கிராமப்புறங்களில் பரவத் தொடங்கி உள்ளது. இது சமூகப் பரவல் தொடங்கிவிட்டதற்கான மோசமான அறிகுறி என அகில இந்திய மருத்துவர் சங்கத்தின் பிரிவான இந்திய மருத்துவமனை வாரியத்தின் தலைவர் டாக்டர் வி.க.மோங்கா தெரிவித்துள்ளார்.

இது தொர்பாக அவர் கூறியிருப்பதாவது:

கொரோனா பரவல் மடங்குகளில் அதிகரிக்க காரணங்கள் பல உள்ளன. ஆனால்  கிராமப்புறங்களுக்கும் பரவியிருப்பது மிக தொற்றுப் பரவலின் மோசமான நிலையையே காட்டுகிறது.

நாள்தோறும் 30 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவது சமூக பரவல்  தொடங்கியிருப்பதையே காட்டுகிறது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு 10 லட்சத்து  38 ஆயிரத்து 816 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 3 லட்சத்து 58 ஆயிரத்து 629 பேர்  மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதும், 26 ஆயிரத்து 273 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பதும்  கொரோனா தாக்கம்  உச்சம் அடைந்திருப்பதற்கான ஆதாரம்.

நகரங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தப்பட்டு, அதே நேரத்தில் புதிய நோய் பரவல் மண்டலங்களாக  கிராமங்கள் உருவாகிவிட்டால் அதிலிருந்து மீள்வது மிகவும் சிரமமாகிவிடும். எனவே  மாநில அரசுகள் கொரோனா தடுப்பு பரவல் நடவடிக்கையில் தீவிரம் காட்ட வேண்டும். அதற்காக மத்திய  அரசின் உதவியை நாடலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Share this
தொடர்புடையவை:  சென்னை கடலில் மூழ்கும் அபாயம்: ஐ.நா எச்சரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *