சென்னையில்.. மீண்டும் கூட்ட நெரிசல்!

சென்னையில் 17 நாட்களுக்குப்பின் நேற்று மீண்டும் தளர்வுகள் அளிக்கப்பட்டதால், பிரதான சாலைகளான அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, கோயம்பேடு 100 அடி சாலை, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, பெரம்பூர் பேரக்ஸ் ரோடு, அண்ணா நகர் சாலைகள் என அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

இதுவரை வீடுகளில் முடங்கி கிடந்த சொகுசு கார்கள் மற்றும் விலை உயர்ந்த ஆடம்பர சொகுசு கார்கள், ஆட்டோக்கள், கால் டாக்சிகள் என கார்கள் சாலைகளில் சீறிப் பாய்ந்தன. பொது போக்குவரத்து வாகனங்களை தவிற பிற வாகனங்கள் சாலைகளில் வலம் வந்தன.

இவ்வாறு சாலைகளில் வாகனங்கள் அலைமோதியதை பார்க்கும்போது, சென்னை நகரமே இயல்பு நிலை திரும்பியது போன்ற உணர்வே ஏற்பட்டது.

Share this
தொடர்புடையவை:  தீபாவளிக்கு 150 கோடி ரூபாய்க்கு ஆவின் பொருட்கள் விற்பனை செய்ய இலக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *