தன்முனைக்கவிதைகள்

 1. எறியப்பட்ட குப்பை/
  எரிக்குழியில் விழுந்தது/
  பூவோடு சேர்ந்த நாராக/
  புவியோடு புதிய விதையானது//
 2. மடக்கி எழுதினால்/
  கவிதை பிறக்கும்/
  மடக்கி உழுதால்/
  புதிய பயிர் உருவாகும்//
 3. புடைக்கப்பட்ட அரிசி/
  சோறாக்கப்பட்டது/
  முற்றத்தில் சிந்திய குருணை/
  குருவிக்கு உணவானது//
 4. குடும்பமே உழைத்தால்/
  கூலி மிச்சமாகும்/
  கடமையாற்றினால்/
  காரியம் கைகூடும்//
 5. கணினியின் மாற்றம்/
  கையளவில் உலகம்/
  விழித்திரையில் வருங்காலம்/
  விண்ணளவில் உலகாளும்//

ஹ.ரெங்கபார்வதி

Share this
தொடர்புடையவை:  பேரறிஞர் அண்ணா

2 Comments

 • பாத்திமா

  வாழ்த்துகள், வாழ்க உன் புகழ், வாழ்க நம் தமிழ், வளர்க உன் கலைப்பயணம். 💕💕💕👍👍👍👍💐💐💐💖💖👏👏👏💙💙💙💙

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *