தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் கண்ட ஆர்ப்பாட்டம்!

தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் தஞ்சாவூர், நாகப்பட்டிணம் ,திருவாரூர், மயிலாடுதுறை கும்பகோணம், உள்ளிட்ட இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

திருவாரூரில் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி கிளை முன் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அப்போது அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது..

கூட்டுறவு வங்கிகளை முடக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு தமிழக அரசு துணை போவது ஜெயலலிதாவிற்கு செய்யும் துரோகம்
பி.ஆர்.பாண்டியன்., .

மத்திய அரசு கூட்டுறவு வங்கிகளை முடக்கும் நடவடிக்கைக்கு தமிழக அரசு துணை போவதை வன்மையாக கண்டிக்கிறேன். தமிழக கூட்டுறவுத் துறை பதிவாளர் கடந்த 27ம் தேதி தொடக்க வேளாண் வங்கிகளுக்கு கடன் வழங்கும் அதிகாரத்தை ரத்து செய்தும், மத்திய கூட்டுறவு வங்கிகளில் சேமிப்பு கணக்கு (மிரர் அக்கவுண்ட்) துவங்கி கடன் பெற்றுக் கொள்ள உத்திரவிட்ட பின் பணி மாறுதலில் சென்றுள்ளார். அவர் போட்ட உத்திரவால் குறுவைக்கான காப்பீடு செய்வதற்கு கூட கால அவகாசம் இன்றோடு (31.07.2020) முடிவு பெறும் நிலையில் பிரீமியம் செலுத்த முடியாமல் விவசாயிகள் பரிதவிக்கிறார்கள்.

இதுவரையில் எந்தவொரு விவசாயிக்கும் கடன் கொடுக்கவும் முன் வராமல் தொடக்க கூட்டுறவு வங்கிகள் முடக்கப்பட்டுள்ளது.
இது குறித்து முதலமைச்சர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

இதேபோல் கடந்த 2013 ல் மத்திய அரசு சட்டம் கொண்டு வந்த போது அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் கூட்டுறவு வங்கிகள் தமிழகத்தில் செயல்படுவதை மத்திய அரசு சட்டம் போட்டு தடுக்க முடியாது எனவும், தொடர்ந்து செயல்படும் என கொள்கை முடிவு எடுத்து செயல் படுத்தி காட்டினார். அவர் வழியை பின்பற்றி ஆட்சி நடத்தும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தடுக்க அச்சப்படுவது ஜெயலலிதாவிற்கு செயகிற துரோகம் என்பதை உணர வேண்டும்.

உடனடியாக நிபந்தனையின்றி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மூலம் வேளாண் கடன் வழங்க முன் வரவேண்டும்.

2019-20ல் சம்பா காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை உடன் பெற்றுத் தர வேண்டும்.

காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் தலைமையிலான குழு கர்நாடகா, தமிழக அணைகளை நேரில் பார்வை எட்டு கருகும் குருவை பயிரை காப்பாற்றவும், சம்பா சாகுபடியை துவங்கிடவும் கர்நாடகாவிடமிருந்து தமிழகத்திற்கு உரிய தண்ணீரை பெற முதலமைச்சர் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்க்கொள்ள முன் வரவேண்டும் என்றார்.

மாநில துணை தலைவர் ஜி.வரதராஜன், மாநில துணை செயலாளர் எம்.செந்தில்குமார், மாவட்ட தலைவர் எம்.சுப்பையன், மாவட்ட பொருளாளர் நடராஜன், மாவட்ட துணை தலைவர் எம்.கோவிந்தராஜ திருவா௹ர் ஒன்றிய செயலாளர் அகஸ்ட்டின் உட்பட அனைத்து ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

தொடர்புடையவை:  ஈ.பி.எஃப் மீதான வட்டி விகிதம் குறித்த அறிவிப்பு விரைவில்..!

இவன் : என்.மணிமாறன்,
செய்தி தொடர்பாளர்

Share this

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *