திருமண நடைமுறை குறித்து தமிழக அரசு அறிவிப்பு

திருமணங்கள் செய்வதற்கான நடைமுறைகள் குறித்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது தமிழக அரசு.

கொரோனா பாதிப்பினால் இதுவரை 6 கட்ட ஊரடங்குகள் அமலில் உள்ள நிலையில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு இன்றோடு (ஜூலை 31) முடிவடைகிறது.

இந்நிலையில் ஆகஸ்டு இறுதி வரை ஊரடங்கு தொடரும் என முதல்வர் பழனிச்சாமி நேற்று அறிவித்தார். கடந்த முறை அறிவிக்கப்பட்ட அதே தளர்வுகளும் கட்டுபாடுகளும் தான் இந்த முறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் திருமணங்கள் செய்வதற்கான நடைமுறைகள் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

எனவே, இதற்கு தற்போது பதில் அளித்துள்ளது தமிழக அரசு, அதன் படி , திருமணங்களுக்கு ஏற்கனவே உள்ள நடைமுறை தொடரும்.

50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். தனிமனித இடைவெளி அனைவரும் முக கவசம் அணிந்து இருக்க வேண்டும்.

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வோர் கட்டாயம் இ பாஸ் பெற்றுவிட்டு தான் செல்ல வேண்டும், திருமண அழைப்பிதழில் பெயர் உள்ளவர்களுக்கு மட்டுமே இ பாஸ் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் போது சம்பந்தப்பட்ட கிராம் நிர்வாக அலுவலர் சான்றிதழ் இணைக்கப்பட்டால் மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this
தொடர்புடையவை:  தமிழகத்தில் இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரயில்களை செப்டம்பர் 15-ஆம் தேதி வரை ரத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *