நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது சம்பளத்தினை 50 சதவீதமாகக் குறைத்துக்கொண்டுள்ளார்

நெருக்கடி சூழ்நிலையில் வனிக ரீதியாக பெருமளவில் நஷ்டங்களை சந்தித்துவரும் தயாரிப்பாளர்களுக்கு உதவும் முயற்சியாக,பல நடிகர் நடிகைகள் சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள முன்வந்து ஒப்புதல் அளித்துள்ல நிலையில், தற்போது நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது சம்பளத்தினை 50 சதவீதமாகக் குறைத்துக்கொண்டுள்ளார். அது கிட்டதட்ட ரூ. 75 லட்சம் எனக் கூறப்படுகிறது.

ரகுல் தற்போது சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனின் ‘இந்தியன்-2′ மற்றும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘அயலான்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சமூக ஊடகங்களில் மிகவும் ஆக்டிவாக இயங்கிவரும் அவர் தனது உடற்பயிற்சி, யோகா, தம்பியுடனான விளையாட்டு, சமூகவலைதள சவால்கள் என வழக்கமாக வீடியோக்களையும் புகைப்படங்களையும் பதிவிட்டு, ரசிகர்களுடன் இணைப்பிலேயே இருக்கிறார்.

Share this
தொடர்புடையவை:  டிவிட்டரில் டிரெண்டாடும் அஜித்தின் செயல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *