நடிகை வனிதா விஜயகுமார், மீண்டும் ட்விட்டரில் இணைந்துள்ளார்

சில நாள்களுக்கு முன்பு ட்விட்டரிலிருந்து விலகிய நடிகை வனிதா விஜயகுமார், மீண்டும் ட்விட்டரில் இணைந்துள்ளார். அவர் அதில் கூறியதாவது:

இனிமேல் திருமணம் சர்ச்சை குறித்து எதுவும் பேசமாட்டேன். விவாகரத்து பிரச்னையை சட்டப்படி எதிர்கொள்வோம். குறைகுடம் தான் சத்தம் எழுப்பும். இந்த விவகாரத்தில் தொடர்பில்லாதவர்கள் எல்லாம் பேசுகிறார்கள்.

நாங்கள் அமைதியாக இருக்கப் போகிறோம். அவர்கள் பேசுவதை காதில் வாங்கப் போவதில்லை. எங்களைப் புரிந்துகொண்டு அக்கறை செலுத்திய அனைவருக்கும் நன்றி என்றார்.

Share this
தொடர்புடையவை:  சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *