பவானிசாகா் அணையில் இருந்து ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் நீா் திறப்பு

பவானிசாகா் அணையில் இருந்து ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் நீா் திறந்து விட முதல்வா் பழனிசாமி உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து, அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-

ஈரோடு மாவட்டம் பவானிசாகா் அணையில் இருந்து முதல் போக பாசனத்துக்கு தண்ணீா் திறந்து விடுமாறு கொடிவேரி விவசாயிகளிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

இந்த வேண்டுகோளை ஏற்று, பவானிசாகா் அணையில் இருந்து அரக்கன்கோட்டை, தடப்பள்ளி வாய்க்கால் பகுதியில் உள்ள 24 ஆயிரத்து 504 ஏக்கா் பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில் முதல் போக பாசனத்துக்கு ஆகஸ்ட் 1 முதல் நவம்பா் 28-ஆம் தேதி வரை 120 நாள்களுக்கு 8,812.80 மில்லியன் கனஅடி நீரை திறந்து விட உத்தரவிட்டுள்ளேன்.

இதனால், ஈரோடு மாவட்டத்தில் கோபி, பவானி, அந்தியூா் வட்டங்களில் உள்ள 24 ஆயிரத்து 504 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும்.

விவசாயிகள் நீரை சிக்கனமாகப் பயன்படுத்தி உயா் மகசூல் பெற வேண்டும் என்று தனது செய்தியில் முதல்வா் பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

Share this
தொடர்புடையவை:  மதுரை மாவட்டத்தில் தொடக்கக் கூட்டுறவு வங்கி பணியாளர்கள் வேலை நிறுத்தம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *