பாரதிதாசனின் மகன் மன்னர் மன்னன் காலமானார்

புரட்சிக்கவிஞர் என அழைக்கப்படும் பாரதிதாசனின் மகன் மன்னர் மன்னன் தனது 92-வது வயதில் காலமானார்.

அவருக்கு வயது 92 . கடந்த சில ஆண்டுகளாக வயது மூப்பின் காரணமாக உடல் நலம் குன்றி இருந்தார். புதுச்சேரி வானொலி நிலையத்தில் ஆசிரியராகப் பணியாற்றிய மன்னர் மன்னன் ஏறத்தாழ 50 நூல்கள் எழுதியுள்ளார். புதுவைத்தமிழ்ச்சங்கத்தில் தலைவராகப் பல ஆண்டுகள் பொறுப்பில் இருந்து அதற்கு சொந்தக்கட்டடம் கட்டித்தந்தார். தமிழக அரசின் திரு.வி.க விருது, கலைமாமணி விருது, புதுச்சேரி அரசின் தமிழ்மாமணி, கலைமாமணி விருது உள்ளிட்ட பல விருதுகள் பெற்றுள்ளார்.

பாரதிதாசனின் வாழ்க்கை வரலாற்றை முதன்முதலில் எழுதி வெளியிட்டார். இவர் மனைவி சாவித்திரி 30 ஆண்டுகளுக்கு முன்பே காலமானார். இவருக்கு செல்வம், தென்னவன், கவிஞர் பாரதி ஆகிய மகன்களும் அமுதவல்லி என்ற மகளும் உள்ளனர்.

மன்னர்மன்னனின் உடலுக்கு, நாளை மாலை 4 மணியளில் இறுதி நிகழ்வுகள் நடைபெறுகிறது.

Share this
தொடர்புடையவை:  அயோத்தி வழக்கு தீர்ப்பைத் தொடர்ந்து மேலும் 4 முக்கிய வழக்குகளின் தீர்ப்பு விரைவில்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *