புதிய கல்விக்கொள்கை குறித்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கருத்து

மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை குறித்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறியதாவது:-

தற்போது வெளியிடப்பட்டுள்ள தேசிய கல்வி கொள்கையில் 5-ம் வகுப்புவரை தாய்மொழி அல்லது மாநில மொழி பயிற்றுமொழியாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 8-ம் வகுப்பு வரை தாய்மொழி அல்லது மாநில மொழி பயிற்றுமொழியாக நீட்டிப்பது விரும்பத்தக்கது என்றும் கூறப்பட்டு இருக்கிறது.

இந்த கல்வி கொள்கையில் இந்தியாவில் உள்ள அனைத்து வகையான பள்ளிகளிலும் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை தாய்மொழியே பயிற்றுமொழியாக இருக்கும் என்ற வகையில் திட்டவட்ட அறிவிப்பு இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Share this
தொடர்புடையவை:  நாடு முழுவதும் புதிதாக தொடங்க உள்ள 31 மருத்துவக் கல்லூரிகளின் பட்டியல் முடிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *