வறுமையை ஒழித்திடுவோம்…. வளம்தனை பெருக்கிடுவோம்_ சீனாவின் புரட்சி பயணம்!


வறுமை ஒரு குடும்பத்தில் மட்டுமல்ல நாட்டிலும் இருக்க கூடாது என்பதுதான் எல்லோரும் விரும்ப கூடிய ஒன்று. வறுமையை ஒழித்து, செல்வச் செழிப்புடன் தன் குடும்பமும் குழந்தைகளும் வாழ வேண்டும் என்று ஒவ்வொரு குடும்பத்தலைவனும் நினைப்பது போலவே நாட்டின் தலைவனும் நினைத்தால் அந்த நாடு நிச்சயம் வளமிக்க நாடாக இருக்கும். அந்த வகையில் சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங் தன் குடிமக்கள் ஒவ்வொருவருமே செல்வச் செழிப்புடன் வாழ வேண்டும் என்ற விருப்பத்தில் வறுமை ஒழிப்பு பணிக்கான திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்.


2020 ஆம் ஆண்டிற்குள் நாட்டில் முற்றிலுமாக வறுமையை ஒழித்து குறிப்பிட்ட அளவிலான வசதியான சமூகத்தை உருவாக்க திட்டமிட்டுள்ல சீன அரசு, அதற்கேற்ப வெவ்வேறு வகையிலான வறுமை ஒழிப்பு பணிகளை நடைமுறைப் படுத்தி வருகிறது. இதற்கிடையில் நாட்டில் கொரோனா வைரஸ் பரவல், வெள்ளப்பெருக்கு போன்ற சிக்கல்கள் எழுந்த போதிலும், இந்த ஆண்டுக்குள் நாட்டில் முற்றிலும் வறுமையை ஒழிக்க வேண்டும் என்ற முனைப்போடு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.


வறுமை ஒழிப்புக்கு சீன அரசு கையில் எடுத்துள்ள திட்டங்களில் மிக முக்கியமான திட்டம், கிராமப்புறங்களில் வேளாண் உற்பத்தியை பெருக்குவது, தொழில் மேம்பாடு, மற்றும் சுற்றுலா வளர்ச்சி, இணைய வர்த்தகம் போன்ற துறைகளின் வளர்ச்சியை அனைத்துக் கிராமங்களிலும் விரிவுபடுத்துவது போன்றவையாகும். அதன்படி, சீனாவின் கோடைகால தானிய உற்பத்தி இந்த ஆண்டு வரலாற்று காணாத அளவில் 142.81 மில்லியன் டன்களை எட்டியுள்ளது, இது கடந்த ஆண்டை விட 0.9 சதவீதம் அதிகரித்துள்ளது என்று தேசிய புள்ளிவிவர பணியகம் (என்.பி.எஸ்) தெரிவித்துள்ளது.


கொரோனா தொற்று நோய் பரவல் இருந்த போதிலும், வேளாண் உற்பத்தியில் சீனா பெரும் சாதனை படித்துள்ளது. சீனாவின் மொத்த தானிய உற்பத்தி மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. தொடர்ச்சியாக 16 ஆண்டுகளாக தானிய உற்பத்தியை அதிகரித்து வந்த சீனா உலகின் தலைசிறந்த உணவு உற்பத்தியாளர் மற்றும் நுகர்வோர் என்ற நிலையில், கடந்த ஆண்டு 664 மில்லியன் டன்கள் தானிய உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்தியாவின் முதுகெலும்பு கிராமங்களில் உள்ளது என்று அந்நாளில் மகாத்மா காந்தி குறிப்பிட்டார். அந்த சொல்லுக்கு ஏற்ப சீன அதிபர் ஷிச்சின்பிங் கிராமங்களின் வளர்ச்சிக்காகவும், வறுமை ஒழிப்புக்காகவும் போராடிவருகிறார் என்றால் அது மிகைஇல்லை. சீன அரசின் தலைமையில் அனைத்து வழிகளிலும் கிராமங்கள் புத்துயிர் பெறுவதற்கு வலுவான அடித்தளத்தை உருவாக்கும் முயற்சியில், பல நடவடிக்கைககள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த 40 ஆண்டுகளில் சுமார் 853 மில்லியனுக்கும் அதிகமான கிராம மக்களை சீனா வறுமையிலிருந்து மீட்டுள்ளது.

தொடர்புடையவை:  21-ம் தேதி அமெரிக்க செனட் சபையில் டிரம்ப் மீதான தீர்மானம் குறித்து விசாரணை


உலக அளவில் 2030 ஆம் ஆண்டுக்குள் பசி மற்றும் ஊட்டச் சத்து குறைப்பாட்டை போக்கும் நடவடிக்கையில் ஐ.நா. ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றுநோய் காரணமாக, இந்த ஆண்டு இறுதிக்குள் உலகி அளவில் பசியில் வாடுபவர்களின் எண்ணிக்கை 130 மில்லியனாக அதிகரிக்கக்கூடும் என்று ஒர் அறிக்கை தெரிவிக்கிறது.
இந்நிலையில் சீனாவின் வறுமை ஒழிப்புப் பணி உலக அளவிலான இந்த எண்ணைக்கையை குறைக்கும் காரணிகளில் ஒன்றாக இருக்கும் என்று கூறப்படுகிறது.


மானுட இனம் எத்தனையோ சாதனைகளை படைத்திருந்தாலும், இந்த உலகில் இன்னமும், வறுமையும் பசியும், பட்டினியும், இருக்கிறது என்பதை நினைகும் போது.. மகாகவியின் பாடல் வரிதான். நினைவுக்கு வருகிறது.
“தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்..” என்றான் அந்த பாரதி. அவன் கோபப் பார்வையை கொஞ்சம் மாற்றி வறுமையை ஒழித்திடுவோம் என்று வீறு கொண்டு புறப்பட்டிருக்கும் சீன அதிபரின் செயல்பாடு வரவேற்கத்தக்கது என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.

Share this

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *