வேளாண் கூட்டுறவு வங்கிகளில் உறுப்பினர்களாக உள்ள விவசாயிகளுக்கு ஏடிஎம் கார்டு

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே வேளாண் கூட்டுறவு வங்கிகளில் உறுப்பினர்களாக உள்ள விவசாயிகளுக்கு ஏடிஎம் கார்டு எனப்படும் பணப்பரிவர்த்தனைக்கான அட்டைகள் வழங்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியின் கீழ் செயல்படும் வேளாண் கூட்டுறவு வங்கிகளில் உறுப்பினர்களாக உள்ள விவசாயிகளுக்கு ஏடிஎம் அட்டைகள் வழங்கும் புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.இதனை அனைத்து வங்களின் கீழ் செயல்படும் ஏடிஎம் மையங்களிலும் பயன்படுத்தி பணப்பரிவர்த்தனை செய்து கொள்ளலாம்.

இதன் அடிப்படையில் மருதூர் தெற்கு தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் உறுப்பினர்களாக விவசாயிகளுக்கு முதல் கட்டமாக உள்ள 160 பேருக்கு ஏடிம் அட்டைகள் வழங்கப்படுகிறது. இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் ப.சோமசுந்தரம் தலைமை வகித்தார்.

Share this
தொடர்புடையவை:  புதிய பாடத்தொகுப்புமுறை ரத்து!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *