74 சதவீதம் பேர் வீட்டில் இருந்தே வேலை செய்ய விரும்புவதாக ஆய்வில் தகவல்

புதுடில்லி: இந்தியாவில் குறைந்தது 74 சதவீதம் பேர் வீட்டில் இருந்தே வேலை செய்ய விரும்புவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இது குறித்து கம்ப்யூட்டர் தயாரிப்பு நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வு முடிவு குறித்து அவை தெரிவித்து இருப்பதாவது:

கொரோனா தொற்றுக்கு முன்பைவிட தற்போது வீட்டில் இருந்தே வேலை செய்ய விரும்புவதாக 74 சதவீதத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும் 62 சதவீதம் பேர் தொழில் நுட்பங்கள் தங்களின் வேலைகளை அகற்றி விட கூடும் என கவலை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த கொரோனா கால கட்டத்தில் மடி கணினி என்றழைக்கப்படும் லேப்டாப் கம்ப்யூட்டரை பயன்பாடு அதிகரித்துள்ளதாக 91 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். இது உலகளாவிய சராசரியான 85 சதவீதத்தை விட கூடுதலாகும். அதே நேரத்தில் 84 சதவீதம் பேர் சிறந்த தொழில் நுட்ப திறன்களை கொண்டிருந்தால் தங்கள் வேலையை சிறப்பாக செய்ய முடியும் என நினைக்கின்றனர். இவ்வாறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஆய்வுநடத்திய நிறுவனத்தின் இந்திய தலைமை நிர்வாகி கூறி இருப்பதாவது: இந்த கால கட்டங்களில் பணியாளர்கள் செயல்படும் விதத்தில் ஒரு அடிப்படை மாற்றத்தை குறிக்கிறது. அவற்றை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை எங்களால் முடிந்த அத்தனையும் நாங்கள் செய்கிறோம் என கூறினார்.

ஆய்வில் பங்கேற்ற பெரும்பாலோனோர் தொழில் நுட்பம் தங்களை திறமையாகவும், அதிக உற்பத்தி திறன் கொண்டவர்களாகவும் ஆக்குகிறது என கருத்தை பதிந்துள்ளனர்.

Share this
தொடர்புடையவை:  சீனாவின் வூஹான் நகரில் ஊரடங்கு தளர்வு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *