8 . ஏனாதிநாதர்

பெயர்:ஏனாதி நாத நாயனார்

குலம்:சான்றார்

பூசை நாள்:புரட்டாசி உத்திராடம்

அவதாரத்தலம்:ஏனநல்லூர்

முக்தித்தலம்:ஏனநல்லூர்

அவர்தம் வரலாறு

தமிழனின் வீரமே தரணிப் பாடுமே
தணியாத சிவத்தொண் டோடுதளிர் நடையாமே
தனிப்பெரும் வீரனாம் ஏனாதி ஆசானே
தனித்துவ போர்ப்பயிற்சி நல்கினான் வீரர்களுக்கு

படைத்தி ரண்டனர் அவரது பட்டறையில்
படைத்தனர் சாதனை வீரர்கள் பலரே
நடைபயிலும் காலமுதலே மூச்சாக சிவனாரையும்
தடையில்லா துதிருவெண் ணீறில் கண்டே

பக்தியில் திளைத்தும் பயிற்சியில் பொருளீட்ட
முக்தியாய் செய்தொழிலில் சித்திக் கிட்டியதே
சக்தியோடே பெருஞ்செல் வத்தையும் நல்வழியில்
புந்தியில் தோன்ற சிவத்தொண்டில் திளைத்தாரே

பத்தி எரிந்தது வயிறே ஒருசிலருக்கு
சித்தியி வனுக்கு மட்டுமே கொழிக்க
வத்தியது நமக்கு என்றே பொறுமினான்
பித்துப் போலே பிதற்றினான் அதிசூரன்

தாய்வழி உறவன் தணலான வீரனே
தாங்காப் பொறாமை ஏனாதியின் வளர்ச்சியில்
தாங்கும் வாட்படை சுத்தவீ ரரெனினும்
தாங்கவில்லை ஏனாதியின் பேறான பெருமையை

அதனாலே தன்வீரம் நிரூபிக்க அழைத்தான்
அவையோர் முன்னே “வாள்கொண்ட தாயம்
வலியாரே கொள்வது’ ” வருக எம்மோடு

போட்டிக்கு என்றே பொல்லாத காலனாய்
மாட்டிவிட அழைத்தான் களத்திற்கு ஏனாதியும்
காட்டி விடவேண் டுமென்ற எண்ணமில்லாது
காட்டினான் களங்காது தன்வீரத்தை அவனோடு

தேர்ந்த மாணாக் கர்களும் சுற்றத்தாரும்
சேர்ந்துப் போரிட தாங்காது ஓடினான்
சேரா நட்பாளன் அதிசூரன் பயந்தே
சோராத மனமோ செல்லரிக்க நொந்தான்

நொந்த நெஞ்சு நஞ்சாக மாறியது
நொந்துப் போரில் ஏனாதியை வெல்வது
நடவாது நரிபுத்திக் கொண்டே வெல்வோமென
கடவாது சிந்தித்தான் இரவு முழுவதும்

காலையில் உதிக்கும் செங்கதிரோன் போன்றே
காலைய வனுக்கு விடியலான திட்டம்
காளையான ஏனாதியை சாய்க்க அழைக்கத்
தூதுவிட் டான்யார்த் துணையில்லாது தனித்து

தனித்துவம் காட்ட தனியே ஓரிடம்
தனியாளாய் எம்மோடு போர்ப்புரிக என்றே
தனியொ ருவனிடம் சொல்லி அனுப்ப
தனித்தான் எவருமில்லாது விரைந்தான் அவ்விடம்

ஏனாதி கேடகமும் வாளுடன் அங்கே
எதிர்ப்பட் டானதிச் சூரன் வன்னெஞ்சில்
எதிர்முகம் மறைத்து கேடக வாளுடன்
எதிரியென கருதிய ஏனாதி நெருங்கும்

நேரத்தில் கேடகம் விலக்கி முகம்காட்ட
சோராமுகம் சோராது விரிந்தது திருநீறிட்ட
சோலைமுகம் கண்டு இதுகாறும் பாழ்நெற்றி
சோலையானது திருவெண்ணீறு பூசியெதிரில் அதிசூரன்

கெட்டேன் எந்தேவனுக்கு அடியவராகி விட்டாரே
வெட்டாமல் அவனுள்ளக் குறிப்பின் வழியே
தட்டாமல் முனைந்து
நிற்பேன்’ என்றே
வெறுங்கை கொண்ட வீரனை மாய்த்தால்
வீணான பாவம் அடியானுக்கு (அதிசூரனுக்கு) வருமென

வெட்டும் வாளும் கேடகமொடு சிலையாக
வெட்டுண்டான் அதிசூரன் கையாலே அக்கணமே
வெள்ளை பனியுறை ஈசனே ஆட்கொண்டான்
தம்மோடு அமரத்துவம் பெறுக ஏனாதி!

தொடர்புடையவை:  தமிழகம் முழுவதும் 3470 பழமையான கோயில்கள் அறநிலைத் துறைப் பட்டியலில் சேர்ப்பு

மாதவமாய் அசிரீரியில் மறைந்தார் ஏனாதி
மாபெருமான் கழலே போற்றி போற்றி
மாணிக்க ஒளியே நிலவே போற்றி
மாறாத சிவத்தொண்டரே ஏனாதித்தாள் போற்றி !

இரா.விஜயகல்யாணி

Share this

3 Comments

 • சிவக்குமார் வீராச்சாமி

  சேராத நட்பை விலக்கி
  சோராத குணம் கொண்டு
  மாறாத கொள்கையை தொடர்வது நன்று

 • Ravibharathi

  அருஞ்சொற் றொடரில்
  ஏனாதி நாதரின் வரலாறு
  அருமை.
  அடுத்தடுத்த தொடரில்
  சொல்வளம்,பொருள் வளம்
  மிகுதி காண்பது
  பாராட்டுக்குறியது.!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *