அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அதிமுகவினராலேயே சொல்ல முடியாது

அதிமுக முன்னாள் அமைச்சரான வி.எஸ்.விஜய் அதிமுகவிலிருந்து விலகி மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இதனால் அதிமுகவிற்குள் உட்கட்சி பூசல் அதிகமாகி வருகிறதா? அதிமுகவினர் மற்ற கட்சிகளுக்கு செல்ல தயாராகிறார்களா? என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

இந்நிலையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் ஆகியோரை அமைச்சர்கள் தனியாக சந்தித்து பேசி வருவது குறிப்பிடத்தக்கது.

அதிமுகவில் ஏற்பட்டுள்ள இந்த குளறுபடிகள் குறித்து பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன்

“அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அதிமுகவினராலேயே சொல்ல முடியாது. அதை பிரதமர் மோடிதான் முடிவு செய்வார். பாம்பின் வாயில் சிக்கி கொண்ட தவளை போல, பாஜகவிடம் அதிமுக சிக்கிக் கொண்டுள்ளது.

பாஜக தன்னை பலப்படுத்திக் கொள்ள திமுக உள்ளிட்ட கட்சிகளை பலவீனப்படுத்த முயற்சித்து வருகிறது” என்று கூறியுள்ளார்.

Share this
தொடர்புடையவை:  கொரோனா சமூக பரவலாக மாறிவிட்டதற்கான அறிகுறி தெரிகிறது இந்திய மருத்துவர்  சங்கம் எச்சரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *