அந்தமானின் அழகு

அலைகடல் தொடுவானம் நீலம்:
ஆழ்கடல் உலகில் பாறையோ செம்பவளம்..

அமைதியாய்
விலங்கினங்கள்.. ஆரவாரமாய் துள்ளும் மீன்கள்..

ஆளுயர தென்னையின் செழுமை..
அடைக்கப்பட்ட சிறையின் வெறுமை..

அருணனின்மறைவால் முந்நீரின் செம்மை..
எழுந்த சற்றெரி மலையின் புதுமை..

ஆர்ப்பரிக்கும் கடற்கரையில்.. ஆதவனின் ஒளி நாடி..
அரைகுறையாடையுடன் வெள்ளை மாந்தர்கள்
நாகரீக உலகத்தினராம்..

பகலவனும் நுழையா அடர் காட்டினுள்..
அரையுடை ஆதி மனிதர்கள் நாகரீகமற்ற காட்டு வாசிகளாம்..

விநோதங்களின் சேர்வை..
விசித்திரத்தின் கலவை..
வியப்பின் உச்சம்..
விந்தையின் சங்கமம்..

-பத்மாவதி முத்துக்குமார்
ஐதராபாத்

Share this
தொடர்புடையவை:  சங்கத்தமிழ் இலக்கியப் பூங்கா - மது

One Comment

  • SARADHA K. SANTOSH

    படமும்.. கவிதையும் மிக அருமை.. வாழ்த்துகள் எழுத்தாளர் பத்மாவதி அவர்களே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *