“அம்மா கோவிட் ஹோம் கேர் திட்டம்”

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, வீடுகளிலேயே மருத்துவ கண்காணிப்பில் உள்ளவர்களுக்காக, ‘அம்மா கோவிட் ஹோம் கேர்’ என்ற, சுகாதார திட்டம் இன்று துவக்கப்பட உள்ளது.

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில், கொரோனா தொற்று தீவிரமாக உள்ளது. மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறையை தவிர்க்க, குறைந்த பாதிப்பு மற்றும் அறிகுறிகள் உடைய நோயாளிகள், 14 நாட்கள் வீட்டு கண்காணிப்பில் உள்ளனர். சென்னையில் மட்டும், 5,000க்கும் மேற்பட்டோர் வீட்டு கண்காணிப்பில் உள்ளனர். அவர்களது உடல்நிலையை மாநகராட்சி மற்றும் பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் பரிசோதித்து வருகின்றனர்.

இவ்வாறு வீட்டு கண்காணிப்பில் உள்ள நோயாளிகளுக்காக, ‘அம்மா கோவிட் ஹோம் கேர்’ என்ற திட்டத்தை இன்று அரசு செயல்படுத்த உள்ளது.இத்திட்டத்தில், 2,500 ரூபாய் மதிப்புள்ள பரிசோதனை கருவிகள், மருந்து, மாத்திரைகள் அடங்கிய பெட்டகம் வழங்கப்படும்.

அதில் உடலில் உள்ள ஆக்சிஜன் அளவு மற்றும் இதய துடிப்பை கண்டறிவதற்கான பல்ஸ் ஆக்ஸி மீட்டர், வெப்பநிலையை அறியும் டிஜிட்டல் தெர்மல் மீட்டர் போன்ற உபகரணங்கள் இருக்கும்.

Share this
தொடர்புடையவை:  'கருணையில்லா ஆட்சி கடிந்தொழிக!'

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *