அறிவியல் தமிழமுது வினா விடை போட்டி

அனைவருக்கும் வணக்கம்
மணவை முஸ்தபா அறிவியல் தமிழ் அறக்கட்டளையின் ஓர் அங்கமான அறிவியல் தமிழ் மன்றம்
மற்றும்
சூப்பர் விங்ஸ் அறக்கட்டளை இணைந்து வழங்கும் அறிவியல் தமிழமுது வினா விடை போட்டிகள் மெய்நிகர் போட்டியாக சனிக்கிழமை 8:8:2020 இந்திய நேரம் ஏழு மணி அளவில்,
ஸூம் செயலி வழியாக நடைபெற்றது.
இதில் உலகத்தமிழர்கள் பங்கேற்று சிறப்பித்தார்கள். கடந்த வாரம் பத்தாவது சுற்றாக சிந்தை அள்ளும் சீறாப்புராணம் என்கிற தலைப்பில் போட்டி நடைபெற்றது. இந்த போட்டிக்கு சிறப்பு அழைப்பாளராக நகைச்சுவைப்பாவலர்
பேராசிரியர் திரு அப்துல் ரஹீம் அவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
இதுபோன்ற வினாவிடை நிகழ்ச்சி நடத்தி சிறுவர்களையும் பெரியவர்களையும் ஒருங்கிணைத்து அவர்களுக்கு நம்முடைய அருந்தமிழ் படைப்புகளையும், தலைவர்களையும் அறியச்செய்வதன்மூலம் மிகச்சிறந்த தமிழ் தொண்டாற்றி வரும் மருத்துவர் செம்மல் ஐயா மற்றும் இயக்குனர் பாரதி பத்மாவதி அவர்களை பாராட்டினார் மேலும் சீறாப்புராணம் மிகச் சிறப்பான ஒரு இஸ்லாமிய தமிழ் காப்பியம் என்றும் அதைப் பற்றி அறிய ஆவலாய் இருக்கும் பார்வையாளர்களையும் பாராட்டி வாழ்த்தினார்.
இதில் இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா மற்றும் அரபு நாடுகளிலிருந்து பலர் கலந்து கொண்டனர். இதில் சென்னை மறைமலை நகரைச் சேர்ந்த
திருமதி. தேவி அவர்கள் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு அறிவியல் தமிழ் மன்றம் பணப்பரிசை வழங்கியது. பள்ளியில் படித்த காப்பியங்களை பற்றி அறிந்தும் அறிந்திராத நிலையில் இருந்த எமக்கு இதுபோன்ற வினாவிடை போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது இதில் பங்கேற்பதே சிறப்பு அதிலும் நான் வெற்றி பெற்றது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. இது போன்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்த வேண்டும் என்றும் உலகத் தமிழர்கள் பலரும் பயன்பெற வேண்டும் என்று தன்னுடைய கருத்தினை பகிர்ந்து கொண்டார்,
மருத்துவர் செம்மல் அவர்கள் தன்னுடைய உரையில், திருவாசகத்திற்கு அடுத்தபடியாக தற்போது சீறாப்புராணத்தை அறிவியல் தமிழ் மன்றம் ஆய்வு மேற்கொண்டிருப்பதாக தெரிவித்தார். அறிஞர் பெருமக்களை ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை இந்த நிகழ்வில் வந்து கலந்துகொண்டு ஆய்வு செய்யும்படி கேட்டுக் கொண்டார்.
பங்கேற்பாளர் பலரும் தங்களுடைய கருத்தை முன்வைத்தனர்
தேர்வாளர் பாரதி பத்மாவதி அவர்கள் அடுத்த வார தலைப்பாக நற்றிணைஎன்று அறிவித்தார். நன்றியுரை நவின்றபின் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
10 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இதில் பங்கேற்கலாம் ஆகவே அனைவரும் கலந்து கொள்ளுங்கள்.

பாரதி பத்மாவதி

Share this
தொடர்புடையவை:  ‘கீழடி’ அகழாய்வு ஒரு வரலாற்றுப் பார்வை

4 Comments

  • பாரதி பத்மாவதி

    நம்மைச் சுற்றி நடக்கின்ற தமிழ் பணிகளை உடனுக்குடன் செய்திகளாகத் தருகின்ற புதிய திசைகளுக்கு மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
    பாரதி பத்மாவதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *