எல்லைப் பகுதியில் இந்தியாவின் செயலுக்கு
சீனா எதிர்ப்பு!

சீன-இந்திய எல்லைப் பிரதேச நிலைமை பற்றி
சீன மேற்குப் பகுதிப் போர் பிரதேசத்தின் செய்தித் தொடர்பாளர் சாங்ஷுய்லி 31ஆம் நாள் உரை நிகழ்த்தினார்.

இரு தரப்புகளுக்கிடையில்
பல நிலைப் பேச்சுவார்த்தைகளில் எட்டப்பட்டுள்ள பொது கருத்தை அன்று இந்திய இராணுவப்
படையினர்கள் சீர்குலைத்து, பாங்கோங் எல்லைக் கோட்டைக் கடந்து அத்துமீறியுள்ளனர்
என்று அவர் தெரிவித்தார்.

இந்தியாவின் இச்செயல், சீனாவின் உரிமைப் பிரதேசத்தின் இறையாண்மையை அத்துமீறியதாவும், எல்லைப் பிரதேசத்தின் அமைதியைச் சீர்குலைப்பதாகவும்
உள்ளது. இருதரப்பு நம்பிக்கையை கெடுக்கும்
வகையில் செயல்படும் இந்தியாவின் போக்கை சீனா கடுமையாக கண்டிக்கிறது.

சீன இராணுவப் படையினர்கள், தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, சீன உரிமைப் பிரதேசத்தின் இறையாண்மை
மற்றும் எல்லைப் பிரதேசத்தின் அமைதியை உறுதியாகப் பேணிக்காப்பர் என்றும் தெரிவித்தார்.

இந்தியாவும் சீனாவும் நீண்டகாலமாக நண்பர்களாக இருக்கின்றன. இந்திய-சீன நட்புறவு, மிகவும்
முக்கியமானது.

இந்தியாவும் சீனாவும் பேச்சுவார்த்தையை நடத்தி, எல்லைப் பகுதி சர்ச்சையை வெகுவிரைவில் தீர்க்க வேண்டும் என்பது இரு நாட்டு மக்களின் விருப்பமாகும்.

Share this
தொடர்புடையவை:  சர்வதேச அமைப்பை பாதிக்குமா சீனா-அமெரிக்கா இடையிலான மோதல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *