எல்லை பிரச்சினையை தீர்க்க இந்தியாவுடன் சேர்ந்து பணியாற்றத் தயார்: சீனா

எல்லை பிரச்சினையை தீர்க்கவும், பரஸ்பர நம்பிக்கையை வலுப்படுத்தவும் இந்தியாவுடன் சேர்ந்து பணியாற்றத் தயாராக உள்ளோம் என்று சீனா தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, சீன வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஜாவோ லிஜியான் கூறியதாவது:

பிரதமர் நரேந்திர மோடியின் உரையை நாங்கள் கவனித்தோம். நாம் இருவருமே நெருக்கமான அண்டை நாடுகள். நீண்டகால நலன் அடிப்படையில் இரு நாடுகளுமே பரஸ்பர மரியாதையையும், ஆதரவையும் கடைப்பிடிப்பதே சிறந்த வழி.

நமது பரஸ்பர அரசியல் நம்பிக்கையை வலுப்படுத்தவும், வேறுபாடுகளை களையவும், நடைமுறையில் ஒத்துழைப்பை மேம்படுத்தவும், நீண்டகால அடிப்படையில் இருதரப்பு உறவைப் பாதுகாக்கவும் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.

Share this
தொடர்புடையவை:  'கொரோனா' வைரஸால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை விறுவிறு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *