ஒரு விரக தாப பாடல்

ஆட்டோ ராஜா படத்தில் வரும் சங்கத்தில் காணாத கவிதை  மெட்டில்

பல்லவி

கண்ணீரில் ‘நான் கரையும்’ பொழுது..
சொர்க்கங்கள் கனவானதே..
மோகத்தால் தாங்காத அனலை
இதயத்தில் யார் தந்தது..

சரணம் 1.
உனையின்றி நான் எங்கு வாழ..
நீ சொன்னால் உயிர் வாழுமே..
எங்கெங்கும் உந்தன் நினைவலை..
என்றென்றும் நீ.. தானடி..

தேன் கொஞ்சம்.. அ.. ஆ..
விஷம் கொஞ்சம்.. அ.. ஆ..

மனம் கொன்று மலர்தூவ வந்தாய்..
மலர் மஞ்சம் தாராமல் சென்றாய்.. (கண்)

சரணம் 2.

பொன்மேனி தீண்டாத விரல்கள்..
தீக்கிரையானதே நரகத்திலே..
நான் என்ன பிழைகள் செய்தேன்..
சொர்க்கத்தை தழுவாமலே..

கஞ்சம் ஏன்..
வஞ்சம் ஏன்..

கேள்விக்கணைகள் என்னுள் மோதிட..
வேள்விப் பிழம்பாய் உருவானதே..(கண்)

சரணம் 3.

குளிர் மேகம் பரவுது கண்ணே..
‘தீ ‘உன்னை அணைத்திடவா..
மோகத்தீயில்.. எரியும் என்னுடல்..
நீராய் எனை அணைப்பாயடி..

தீயாக .. ஆ.. ஆ..
நீராக ஆ.. ஆ..

வேகத்தில் வளரும் காதலை..
தேகத்தில் நான் சேர்க்கவோ..

கண்ணீரில் நான் கரையும் பொழுது
சொர்க்கங்கள் கனவானதே..
மோகத்தால் தாங்காத அனலை
இதயத்தில் யார் தந்தது..

சாரதா க. சந்தோஷ்
ஐதராபாத்

Share this
தொடர்புடையவை:  பாரியும் கபிலரும்

8 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *