கத்ராவிலிருந்து, டெல்லிக்கு ஆறு மணி நேரத்தில் சென்றுவிட முடியும்

கத்ராவிலிருந்து, டெல்லிக்கு ஆறு மணி நேரத்தில் சென்றுவிட முடியும் என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

இதற்கான பணி கத்ராவில் தொடங்கப்பட்டுள்ளன. இந்த எக்ஸ்பிரஸ் சாலை வருகின்ற 2023- க்குள் தயாராக இருக்கும் என் கூறினார்.

டாக்டர் ஜிதேந்திர சிங் கருத்துப்படி, இந்த எக்ஸ்பிரஸ் சாலை செயல்பாட்டுக்கு வந்தவுடன், மக்கள் ரயில் அல்லது விமானம் மூலம் பயணத்தை மேற்கொள்வதற்கு பதிலாக சாலை வழியாக டெல்லிக்கு செல்ல விரும்புவார்கள். இந்த சாலை தனிச்சிறப்பு என்னவென்றால், இது புனித நகரங்களான கத்ரா மற்றும் அமிர்தசரஸை இணைக்கும்.

அதே நேரத்தில் இரு இடங்களுக்கிடையில் வேறு சில முக்கிய மத ஆலயங்களுக்கான இணைப்பைபும் இருக்கும் என்று அவர் கூறினார்.

Share this
தொடர்புடையவை:  'கருணையில்லா ஆட்சி கடிந்தொழிக!'

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *