தூத்துக்குடி மாவட்டம் முழுவதிலும் போலீஸார் வாகன தணிக்கை

தூத்துக்குடி மாவட்டம் முழுவதிலும் போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தூத்துக்குடி பழைய மாநகராட்சி முன்பு மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி., ஜெயகுமார், “தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முழு ஊரடங்கையொட்டி, 200 இடங்களில் வாகன தணிக்கை செய்யப்படுகிறது.

ஊரடங்கு விதிமீறல் தொடர்பாக இதுவரை பதிவு செய்யப்பட்ட 7,000 வழக்குகளில் 3,590 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதில், 3,400 வாகனங்கள் உரியவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது.

190 வாகனங்கள் மட்டுமே ஒப்படைக்க வேண்டியுள்ளது” என்றார்.

Share this
தொடர்புடையவை:  வணிக வளாகங்களை மூட கடலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *