முதல்வர் பழனிசாமி வீட்டில் 2வது முறையாக 6 அமைச்சர்கள் நடத்திய ஆலோசனை நிறைவு

முதல்வர் பழனிசாமி வீட்டில் 2வது முறையாக 6 அமைச்சர்கள் நடத்திய ஆலோசனை நிறைவு பெற்றுள்ளது. 2வது கட்டமாக ஈ.பி.எஸ் உடன் அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், தங்கமணி உள்ளிட்ட 6 பேர் ஆலோசனை நடத்திய ஆலோசனை நிறைவு பெற்றுள்ளது.

அடுத்த முதல்வர் வேட்பாளர் தொடர்பான பிரச்னை எழுந்த நிலையில் தொடர் ஆலோசனை நடைபெற்றது.
முதல்வர் பழனிசாமியுடன் ஆலோசனை நடத்திய பின் அமைச்சர்கள் மீண்டும் ஓ.பி.எஸ். இல்லத்திற்கு வந்துள்ளனர்.

ஓ.பி.எஸ்.ஸை சந்திக்க அமைச்சர்கள் ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், அமைச்சர் காமராஜ் சென்றனர். முதல்வருடன் ஆலோசனை நடத்திய பின் ஓ.பி.எஸ்.ஸிடம் சமரச கருத்துகளை தெரிவிக்க அமைச்சர்கள் முடிவு செய்துள்ளனர்

Share this
தொடர்புடையவை:  அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர ஆன்லைன் விண்ணப்ப பதிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *