யூடர்ன் – விமர்சனம்

கன்னடத்தில் பெரிய வெற்றியைக் கொடுத்த படம் யூடர்ன் அடித்துத் தமிழுக்கு வந்திருக்கிறது. பவன் குமாரின் இயக்கத்தில் வெளிவந்த ஒரு திரில்லர் படம்.


கதையின் துவக்கத்தில் ,டாம் அண்ட் ஜெர்ரி போல முறைத்துக் கொண்டிருக்கும் தாயும் மகளும் ஓர் ஆட்டோவில் பயணிக்கின்றனர்.
சமந்தா ஆட்டோக்காரரிடமும் வம்புக்கிழுக்கிறாள். தன் மகள் காதலிக்கிறாள் என்று தெரிந்ததும் அம்மாவின் பாசம் நச் எனப் புலப்படும் விதம் அருமை.


லேடி சூப்பர்ஸ்டார் வரிசையில் சமந்தாவும் ஆஜர்.
ஆரம்பம் முதல் இறுதி வரை படத்தை விறு விறுப்பாகக் கொண்டு செல்கிறார் இயக்குனர் பவன்.
ஓர் இளம் பத்திரிகை நிருபராகப் பணியாற்றும் சமந்தா கொலை வழக்கில் சிக்கித் தவிக்கிறார்.


வேளச்சேரி மாம்பாலத்தில் சாலையைக் கடக்கக் கூடாது என்ற விதியை மீறிக் கடப்பவர்களைத் தேர்வு செய்து அவர்களிடம் பேட்டி காணச் செல்கையில் அந்த நபர் மர்மமான முறையில் இறந்து விட
பழி சமந்தா மீது விழுகிறது. இந்த வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியான ஆதி, சமந்தாவிடம் கொலை பற்றி விசாரிக்க தான் அந்த கொலையை செய்யவில்லை என்றும், கொலைக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் கூறுகிறார்.

ஆனால் சமந்தா சென்ற நேரத்தில் தான் கொலை நடந்ததாக போலீசார் கூற, தான் ஒரு பத்திரிகை நிருபர் என்பதையும், அங்கு சென்றதற்கான காரணத்தையும் விளக்குகிறார்.
பத்திரிகை நிருபராகப் பணியாற்றும் சமந்தாவின் பயம் பார்ப்பவர்களுக்கு வியப்பை ஏற்படுத்தத் தவறவில்லை.
ஆனாலும், ஒரு பெண்ணை இரவு நேரத்தில் காவல் துறையினர் விசாரிப்பதால் உண்டான பயம்
என்று எடுத்துக் கொண்டு கதைக்குள் நுழைந்தால் சமந்தாவின் அட்டகாசமான நடிப்பை ரசிக்கலாம்.


ஈரம் படத்தில் பார்த்த ஆதி இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக. அவருக்கே என்று அளவெடுத்துத் தைத்தது போன்ற பாத்திரம். மனிதர் பின்னி எடுத்திருக்கிறார்.
வரிசையாகக் கொலைகள். அதன் காரணம்?பின்னணி என்ன ? என்பதை அழகாகக் கொண்டு கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர்.

குற்றவாளியைக் கண்டு பிடிக்கத் தன் உயிரையே சமந்தா பணயம் வைக்கும் காட்சியில் நடிப்பில் ஸ்கோர் செய்கிறார்
சமந்தாவைக் காதலிக்கும் ராகுலின் பாத்திரமும் ரசிக்கும்படி உள்ளது. பூமிகா, நரேன், ஆகியோர் தங்கள் பாத்திரத்தைச் சிறப்பாகச் செய்துள்ளனர்.

சமந்தா இல்லாத காட்சியைப் படத்தில் பார்ப்பது என்பது அரிது . வித்யாசமான ஆவிகளைப் படத்தில் காட்டிய இயக்குனருக்குப் பாராட்டுக்கள்.


படத்தின் இறுதிக் காட்சி இன்னும் சற்று வலுவாக இருந்திருக்கலாம்.


முனைவர் ஜெயந்தி நாகராஜன்

Share this
தொடர்புடையவை:  ஜெ.அன்பழகன் மறைவுக்கு அமமுக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் இரங்கல்

3 Comments

  • SARADHA K. SANTOSH

    தென்னிந்திய மொழிகளான.. தமிழ்.. தெலுங்கு.. கன்னடாவில் வெளி வந்து.. இரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற வெற்றி படம் யூடர்ன்..

    சற்று தாமதமாக வெளி வந்த விமர்சனம் என்றாலும்.. சிறப்பான விமர்சனம்.. வித்தியாசமான ஆவிகள்.. சமந்தா இல்லாமல் ஒரு காட்சியும் இல்லை.. இறுதிக் காட்சி இன்னும் சிறப்பாக்கியிருக்கலாம் போன்ற இடங்கள்.. இயல்பாகவும்.. இரசிக்கும் படி இருக்கின்றன.. வாழ்த்துகள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *