வைரஸ் பரவலுக்கு எதிரான கட்டுப்பாடுகளுக்கு ஜெர்மனி மக்கள் எதிர்ப்பு

வைரஸ் பரவலுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு ஜெர்மனி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளனர்.

தலைநகர் பெர்லினில் திரண்ட ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் , கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிரான வாசகங்கள் தாங்கிய பதாகைகளை ஏந்திய படி ஊர்வலமாக சென்றனர். கூட்டத்தில் ஒரு சிலர் தவிர யாரும் மாஸ்க் அணியவில்லை.

ஊர்வலத்தில் கலந்து கொண்ட சிலர் எங்கள் சுதந்திரம் பறிக்கப்படுகிறது என்று கூச்சலிட்டனர்.

ஜெர்மனியின் பல பகுதிகளில் இருந்தும் கூட்டம் கூட்டமாக வந்து பல்ரும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

மாஸ்க் அணிய வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகள் தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவதாக உள்ளது என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆதங்கப்பட்டனர். 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this
தொடர்புடையவை:  தெலுங்கானாவில் பஸ் ஊழியர்கள் போராட்டத்தில் வன்முறை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *