நீர்வரத்து அதிகரிப்பால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 95.10 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் ஒரே நாளில் மேட்டூர் அணை நீர்மட்டம் சுமார் 9 அடி அதிகரித்து 100 அடியை நெருங்குகிறது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1 லட்சத்து 30 ஆயிரம் கனஅடியில் இருந்து 80 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது. நீர்இருப்பு 58.67 டிஎம்சியாக உள்ள நிலையில் பாசனத்துக்காக 10 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

இதனிடையே கர்நாடக மாநிலத்தில் தீவிரமடைந்த பருவமழை தற்போது குறைந்துள்ளது. இதனால் கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவும் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து மீண்டும் குறைய வாய்ப்பு உள்ளது.

Share this
தொடர்புடையவை:  பாடகர் எஸ்.பி.பி.யின் உடல், அவரது பண்ணைத் தோட்டத்தில் அடக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *