அமெரிக்க விண்கலத்திற்கு கல்பனா சாவ்லா பெயர்

விண்வெளிக்குச் சென்ற முதல் பெண் கல்பனா சாவ்லாவை கௌரவிக்கும் விதமாக அமெரிக்க விண்கலத்திற்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

கல்பனா சாவ்லா விமானியாக மட்டுமின்றி, வானவூர்தி மற்றும் விமானம் தாங்கி கப்பல்களுக்கு பயிற்சியாளராகவும் தகுதி பெற்றார். அமெரிக்காவின் விமானம் ஓட்ட பயிற்சி அளிக்கும் ஆசிரியராகவும், அத்துறை ஆராய்ச்சியாளராகவும் விளங்கிய ஜீன் பியர்ரே ஹாரிசனை 1983-ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார்.

அமெரிக்காவின் குடியுரிமை பெற்ற பின், நாசாவில் நடந்த பல சுற்று நேர்முகத் தேர்வில் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1995-ல் நாசா விண்வெளி வீரர் பயிற்சிக் குழுவில் சேர்ந்தார். கொலம்பியா விண்வெளி ஊர்தியான எஸ்.டி.எஸ். 87-ல் பயணித்த ஆறு விண்வெளி வீரர்களில் கல் பனாவும் ஒருவராக, 1997-ல் ஆயத்தமானார். இரண்டு வல்லுநர்களில் ஒருவராகவும், ஒரே பெண்மணியாகவும் தனது முதல் பயண குழுவில் இடம் பெற்றிருந்தார்.

வெற்றிகரமான முதல் விண்வெளி பயணத்தில் 10.67 மில்லியன் கிலோ மீட்டர் பயணித்தார். 252 நாட்கள் விண்வெளியில் இருந்து கொண்டு பூமியை சுற்றியுள்ளார். இதற்குமுன், இந்தியரான ராகேஷ் சர்மா 1984-ல் சோவியத் விண்கலத்தில் பயணித்திருந்தார். அதனால், விண்வெளிக்குச் சென்ற முதல் இந்திய பெண்ணாகவும் இரண்டாவது இந்தியராகவும் கல்பனாவுக்கு இந்த பயணம் பெருமை தேடித்தந்தது.

அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் விண்வெளியில் அமைந்துள்ள சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பொருட்களைக் கொண்டுசெல்லும் கார்கோ விண்கலத்திற்கு கல்பனா சாவ்லாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Share this
தொடர்புடையவை:  ஆன்மீகத் தமிழை வளர்ப்போருக்குத் திருமூலர் விருது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *