ஆனந்தம் பரமானந்தம்

ஆனந்தம் பரமானந்தம் ஆதவன் அவனே
ஆயிலை உறையும் மாதவன் அவனே

வேதத்தில் விரவும் வேங்கடன் அவனே
பேதத்தில் மறையும்
வேணுவும் அவனே

கோபத்தில் சுடரும்
கோவிந்தன் அவனே
தாபத்தில் துளிரும்
தாமோதரன் அவனே

முக்தியை அளிக்கும்
சூட்சமும் அவனே
பக்தியை நல்கும்
பரமனும் அவனே

வாமன மூர்த்தியும்
வாராகமும் அவனே
கோதண்ட மூர்த்தியும்
கோதைமணாளனும் அவனே

கும்பிட்டோருக்கு நம்பிக்கை தும்பிக்கை அவனே
தண்டனிட்டே வணங்கித்
துதித்பாடுவோம் அவனை

கோவிந்தா ஹரே கோவிந்தா
மாதவ கேசவ நரசிம்மா

கோவிந்தா ஹரே கோவிந்தா

இரா.விஜயகல்யாணி

Share this
தொடர்புடையவை:  பட்டாம்பூச்சி..?!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *