கரோனா வந்து கவ்வினால் என்ன கொதறினால்தான் என்ன..?

உடைந்து போகும் ஊடக மனங்கள் கலையார்வம் காரணமாக மற்ற தொழில்களை அறியாமல் போனவர்களுக்கு கொரோனா தொற்றுக் காலகட்டம் எண்ணற்ற பிரச்சனைகளை தினம் தினம் சந்தித்து வருகின்றனர். சிறு வியாபாரிகள் முதல் சுற்றுலா வாகன ஓட்டிகள் வரை பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது போல்

சினிமா, சின்னத்திரை தயாரிப்பு நிறுவனங்கள்,அச்சு இதழ்கள், வானொலி, தொலைக்காட்சி சேனல்கள் உள்ளிட்ட அனைத்து ஊடகங்களிலும் சம்பளக்குறைப்பு, பணியாளர்கள் வேலை நீக்கம் என வாழ்வாதாரம் சீர்குலைந்து போய்கிடக்கிறது.

சட்டதிட்டங்கள் எதையும் மதிக்காமல்,மனிதாபிமானம் கொஞ்சமும் இல்லாமல் தம் ஊழியர்களை கஞ்சிக்கு அலைய வைத்த கோடிஸ்வர நிறுவனங்களை என்ன வென்று சொல்லுவது

பல பேர் மனப்போராட்டத்தில் உடல் நலத்தையும் இழந்துகொண்டிருக்கிறார்கள்.
உணவு, உடை, உறைவிடம் எல்லாவற்றுக்கும் சிக்கல் என்றால் இந்த உயிர் எதற்கு என்று அலர வைக்கிறது அல்லல் நிறைந்த வாழ்க்கை.

மேடைக் கலைஞர்களின் வாழ்வோ சொல்வே வேண்டாம், முற்றிலுமாக கையறு நிலைக்குள் தள்ளப்பட்டு விட்டார்கள்.

இளமையையும்,இரத்தத்தையும் உறிஞ்சிக் கொண்ட பெரிய நிறுவனங்களுக்கு எதிராக போராடக் கூட வாய்ப்பில்லாத சூழலில் அந்த பணியாளர்களின் குடும்பங்கள் எத்தனைப் பாடுபடும்?

இருட்டில் நடக்கும் அந்நியாயங்களை வெளிச்சம் போட்டு காண்பிக்க வேண்டிய ஊடகத்துறைகளிலேயே நியாயம் இருளுக்குள் தள்ளப்படும் அவலத்தை எங்கே போய் முறையிடுவது. மனிதாபிமானம் பூஜ்ஜியத்திற்கும் கீழே சென்றுவிட்டது.

நம்பர் ஒன் பத்திரிகை, நம்பர் ஒன் வானொலி என தங்களை விளம்பரப்படுத்திக் கொண்ட தனியார் ஊடகங்கள் இன்று தங்கள் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பவதிலும் நம்பர் ஒன்றாக இருப்பதுதான் வேதனையாக உள்ளது.

கேள்விக்குறியாக நிற்கும் கலைஞர்கள், வேலையிழந்த ஊடகத் துறையினர்களின் வாழ்க்கைக்கு மத்திய மாநில அரசுகள் என்ன செய்யப் போகின்றன. அறிவிக்கப்பட்ட வீட்டுக்கு ஒருகிலோ கொண்டைக் கடலை கூட வந்துசேராத போது எந்த திட்டங்கள் எம்மவர்கள் வாழ்வை மீட்கப் போகிறது.

விடியும் என்ற நம்பிக்கையில் எத்தனை இரவுகளை கழிப்பது. இருள் சூழ்ந்த வாழ்வை கரோனா வந்து கவ்வினால் என்ன கொதறினால்தான் என்ன..?

காரைக்கால் கே.பிரபாகரன்

Share this
தொடர்புடையவை:  மேலே போடு… கீழே அள்ளு..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *