கவிதாஞ்சலி -பாரதி பாமாலை

வணக்கம் நண்பர்களே!

திசைகள் இணைய வானொலியும் சங்கத் தமிழ் இலக்கியப்பூங்கா குழுமமும் இணைந்து நடத்தும் பாரதி பாமாலை. மகாகவி பாரதியின் நினைவு தின கவிதாஞ்சலி நமது திசைகள் இணைய வானொலியில் காலை 10 மணி முதல் தொடர்ச்சியாக சுமார் 9½ மணி நேரம் ஒலிக்க இருக்கிறது.இதன் மறு ஒலிபரப்பு 12/09/2020 அன்று இரவு 10 மணிக்கு ஒலிபரப்பாகும்

வணக்கம் நண்பர்களே!

திசைகள் இணைய வானொலியும் சங்கத் தமிழ் இலக்கியப்பூங்கா குழுமமும் இணைந்து நடத்தும் பாரதி பாமாலை. மகாகவி பாரதியின் நினைவு தின கவிதாஞ்சலி நமது திசைகள் இணைய வானொலியில் காலை 10 மணி முதல் தொடர்ச்சியாக சுமார் 9½ மணி நேரம் ஒலிக்க இருக்கிறது. இதன் மறு ஒலிபரப்பு 12/09/2020 அன்று இரவு பத்து மணிக்கு ஒலிபரப்பாகும்

அனைவரும் நிகழ்ச்சியை கேட்டு இணையதளத்தில் இந்த லிங்கிற்கு கீழே கருத்துக்களை பதிவிடவும்.

கவிதாஞ்சலி -பாரதி பாமாலை

செயலியை பதிவிறக்கம் செய்ய

https://play.google.com/store/apps/details?id=com.nesammedia.puthiyathisaigal

மற்றுமொரு லிங்க்..

http://play.google.com/store/apps/details?id=com.tamil.radios

Tamil Radio App download செய்து.. search ல் Thisaigal என்று தேடுங்கள்.

நிகழ்ச்சிகளை கேட்டு இரசித்து கருத்துரைக்குமாறு பேரன்புடன் கேட்டுக் கொள்கிறோம்..

இத்தகவலை நட்புறவுகளுக்கு பகிரவும்..

அனைவரும் நிகழ்ச்சியை கேட்டு இணையதளத்தில் இந்த லிங்கிற்கு கீழே கருத்துக்களை பதிவிடவும்.

செயலியை பதிவிறக்கம் செய்ய

https://play.google.com/store/apps/details?id=com.nesammedia.puthiyathisaigal

மற்றுமொரு லிங்க்..

http://play.google.com/store/apps/details?id=com.tamil.radios

Tamil Radio App download செய்து.. search ல் Thisaigal என்று தேடுங்கள்.

நிகழ்ச்சிகளை கேட்டு இரசித்து கருத்துரைக்குமாறு பேரன்புடன் கேட்டுக் கொள்கிறோம்..

Share this
தொடர்புடையவை:  பாரதியார் பதில்கள் நூறு

124 Comments

 • Saradha Santosh

  பங்கு பெறும் கவியுறவுகள் அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகள்..

  • கமலா பார்த்தசாரதி

   இந்நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடக்கின்றது. திரு.நீலகண்டன் ஐயாவுக்கு மனமார்ந்த நன்றிகள். இந்நிகழ்வும் பாரதியைப் போலவே காலத்தை வென்று நிற்கும்

 • தனலட்சுமி பரமசிவம்

  கவிதாஞ்சலி பங்கேற்கும் கவி உறவுகள் அனைவருக்கும் வாழ்த்துகள். எங்கள் பாமாலையை ஒலிபரப்ப உதவிய திசைகள் வானொலி நிர்வாகிகளுக்கும் எங்கள் சங்கத் தமிழ் இலக்கியப் பூங்கா ஒருங்கிணைப்பாளர் நீலகண்ட தமிழன் ஐயா அவர்களுக்கும் மிக்க நன்றியும் பாராட்டுகளும்.

  • மாலாமதிவாணன்

   சங்கத்தமிழ் இலக்கியப்
   பூங்கா ஒருங்கிணைப்பாளர்
   நீலகண்டத்தமிழன்
   ஐயா அவர்களுக்கும்
   உறுதுணையாய்
   பணியாற்றும்
   நட்பு கவிஞர் பெருமக்களுக்கும்
   பெருமிதத்துடன் கூடிய
   இனிய வணக்கம்
   செயற்கரிய செய்த
   செந்தமிழ்ச் செம்மல்
   எமக்குத்தொழில்கவிதை
   என வாழ்ந்தவனுக்கே
   கவிமாலைசூட்டி
   மகிழ்ந்தோம்
   மகிழ்வும்
   வாழ்த்தும்

   மாலாமதிவாணன்

   • வே.சண்முகதேவி

    *பாரதியார் நினைவு நூற்றாண்டு அஞ்சலி*
    **************************
    எட்டயபுர மண்ணில் பிறந்து எட்டா உயரம் எட்டியவன் நீ !
    அகவை ஏழில் அழகாக பாக்கள் தந்தாய்
    பாரில் உயர்ந்தாய்!
    சுப்பையா என்றொரு நாமமும்
    சுகமாய் பாரதி என்றானது
    பாரில் உந்தன் சிந்தனையும்
    தேரில் என்றும் பவனி வரும்
    சொல்லால் ஆயுதம்
    ஏந்தி வந்தாய்
    புல்லில் பனியாய் உறைந்து நிற்பாய்!
    நாடும் மொழியும் மூச் சென்றாய்
    கூடும் அன்பில் குழைந்து நின்றாய்
    மொழிகள் பலவும் அறிந்தவன் நீ !
    தமிழே உயர்வென்று ரைத்தவன் நீ!
    எழிலாய் சொற்கள்
    பல சேர்த்து
    பொலிவாய் பாக்கள் இயற்றி வந்தாய்.
    பாரதவிடுதலை
    வேள்வியிலே
    பாரதி நீதான் பெருநெருப்பு
    வாழ்வில் செல்லம்மாவைக் கைப் பிடித்தாய்
    பாவில் கண்ணம்மாவை வடித்தெடுத்தாய்
    நிற்பதும் நடப்பதும் சொப்பனமென்றாய் கருதுவதும் கேட்பதும் மாயை என்றாய்
    முண்டாசும் முறுக்கு மீசையும் அடையாளமாக்கி பாரில் தமிழுக்கு முகவரி பெற்றாய்
    உன் வயிற்றைப் பட்டினியாக்கி ஜகத்தின் பட்டினி போக்கியவன் நீ!
    காலனைக் காலால் உதைப்பேனென்றாய்
    களிரால் நீயும் மாண்டு விட்டாய்
    சிகையில் கூட வெள்ளையனிடம்
    பகையைக் காட்டி விரட்டி விட்டாய்
    உந்தன் திறமும் கவியழகும் உள்ளம் நிறைந்து வாழியவே!
    **************************
    கோவை வே.சண்முகதேவி

 • வி.தமிழ்செல்வன் புதுவை

  வி.தமிழ்ச்செல்வன் புதுவை

  சங்கத்தமிழிலக்கியப் பூங்கா நடத்தும்
  மகாகவி பாரதியின் நூற்றாண்டு நினைவு விழா கவியரங்கம்

  நிகழ்ச்சியில் பங்கேற்று கவிபடைக்கும் கவிஞர்களுக்கு
  வாழ்த்துகள்

  சங்கத்தமிழிலக்கியப் பூங்கா ஒருங்கிணைப்பாளர் ஐயா, திருநீலகண்டன் அவர்களுக்கும் மற்றும் அனைத்து நிர்வாகிகளுக்கும்,
  பாரதியின் பாமாலைையை ஒலிபரப்பும் திசைகள் வானொலிக்கும் மிக்க நன்றியுடன் வாழ்த்துகளையும் பாரட்டுக்களையும் உரித்தாக்குகிறேன்.

  • கமலா பார்த்தசாரதி

   மிகவும் அருமையான நிகழ்ச்சி. இதுவும் காலம் கடந்து நிற்கும்

 • க.மாணிக்கம்-தனலெட்சுமி

  மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு கவிதாஞ்சலி நிகழ்ச்சியில் பங்கு பெரும் அனைத்து கவிஞர் பெருமக்களுக்கும் சங்க தமிழ் இலக்கியப் பூங்கா ஒருங்கினைப்பாளர் அய்யா நீலகண்ட தமிழ் அவர்களுக்கும் திசைகள் வானொலி நிலையத்தாருக்கும் என் வாழ்த்துககளும் சிரம் தாமழ்ந்த வணக்கங்களும் தெரிவிப்பது உங்களில் ஒருவன்

 • கவிஞர்.மே.மு.மணிமாறன்

  மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு கவிதாஞ்சலி நிகழ்ச்சியில் பங்கு பெரும் அனைத்து கவிஞர் பெருமக்களுக்கும், அனைத்து பணிகளையும் தன் தோள் மீது சுமந்துள்ள சங்க தமிழ் இலக்கியப் பூங்கா ஒருங்கினைப்பாளர் அய்யா நீலகண்ட தமிழன் அவர்களுக்கும் திசைகள் வானொலி நிலையத்தாருக்கும் என் வாழ்த்துககளும் சிரம் தாழ்ந்த வணக்கங்களும் நன்றிகளும்

 • த.சரண்ராஜ்

  இதை பொறுப்பேற்று நடக்கும் சங்கத்தமிழ் இலக்கிய பூங்கா விற்கும் ஒருங்கிணைப்பாளர் ஐயா நீலகண்ட தமிழ் ஐயாவிற்கு நன்றி

  • Saradha Santosh

   பங்கு பெறும் கவியுறவுகள் அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகள்

   • வே.சண்முகதேவி

    *பாரதியார் நினைவு நூற்றாண்டு அஞ்சலி*
    **************************
    எட்டயபுர மண்ணில் பிறந்து எட்டா உயரம் எட்டியவன் நீ !
    அகவை ஏழில் அழகாக பாக்கள் தந்தாய்
    பாரில் உயர்ந்தாய்!
    சுப்பையா என்றொரு நாமமும்
    சுகமாய் பாரதி என்றானது
    பாரில் உந்தன் சிந்தனையும்
    தேரில் என்றும் பவனி வரும்
    சொல்லால் ஆயுதம்
    ஏந்தி வந்தாய்
    புல்லில் பனியாய் உறைந்து நிற்பாய்!
    நாடும் மொழியும் மூச் சென்றாய்
    கூடும் அன்பில் குழைந்து நின்றாய்
    மொழிகள் பலவும் அறிந்தவன் நீ !
    தமிழே உயர்வென்று ரைத்தவன் நீ!
    எழிலாய் சொற்கள்
    பல சேர்த்து
    பொலிவாய் பாக்கள் இயற்றி வந்தாய்.
    பாரதவிடுதலை
    வேள்வியிலே
    பாரதி நீதான் பெருநெருப்பு
    வாழ்வில் செல்லம்மாவைக் கைப் பிடித்தாய்
    பாவில் கண்ணம்மாவை வடித்தெடுத்தாய்
    நிற்பதும் நடப்பதும் சொப்பனமென்றாய் கருதுவதும் கேட்பதும் மாயை என்றாய்
    முண்டாசும் முறுக்கு மீசையும் அடையாளமாக்கி பாரில் தமிழுக்கு முகவரி பெற்றாய்
    உன் வயிற்றைப் பட்டினியாக்கி ஜகத்தின் பட்டினி போக்கியவன் நீ!
    காலனைக் காலால் உதைப்பேனென்றாய்
    களிரால் நீயும் மாண்டு விட்டாய்
    சிகையில் கூட வெள்ளையனிடம்
    பகையைக் காட்டி விரட்டி விட்டாய்
    உந்தன் திறமும் கவியழகும் உள்ளம் நிறைந்து வாழியவே!
    **************************
    வே.சண்முகதேவி
    ஆசிரியர்
    அரசு மேல்நிலைப் பள்ளி
    வெள்ளலூர்
    கோவை 641111
    9842572293
    (sanmugadevi1973@gmail.com)

 • மகாகவி பாரதி மறைந்த நூறாவது கவிதாஞ்சலி விழா சங்கத்தமிழ் இலக்கிய பூங்காவிற்கும் நீலகண்ட தமிழன் ஐயா நன்றி

  • Nappinnai babu @Nirupama seshadri

   நம் பாரதியின் புகழைப் பாடுவதும்
   அவரைப் பற்றி நாம் பேசுவதும்
   காது கொடுத்து கேட்பதுவும் கூட
   கொடுத்து வைத்திருக்க வேண்டும்
   அந்த விதத்தில் நாம் கொடுத்து
   வைத்தவர்கள்

   • பி.மீராபாய்

    வணக்கம் திண்டுக்கல்லில் இருந்து மீராபாய் பேசுகிறேன்

    பாரதியாருக்காக அவருடைய நூற்றாண்டு நினைவை போற்றும் வகையில் நூற்றுக்கணக்கான கவிஞர்களை கொண்டு நிகழ்ந்து கொண்டிருக்கின்ற கவிதாஞ்சலி நிகழ்ச்சியிலே நானும் ஒருமலராக இருந்து சிறப்பிப்பதில் மிகவும் நெகிழ்ச்சி அடைகிறேன்

    பாரதியும் நானும் என்கிற தலைப்பில் ஒரு கவிதையை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்… பாரதியின் பாதம் தொட்டு வணங்கி கவிதை விளங்கும் என் பெயர் திண்டுக்கல் மீராபாய்

    பாரதியும் நானும்

    அகண்ட பாரதத்தின்
    அகல தெருக்களில்

    ஆழ்கடலின் நடுவே தோணிகளின் ஊடே

    இளங்காலைப் பொழுதில் இமயமலைச் சாரலிலே

    ஈராராண்டு அகவையில் இணைந்தோம்
    க( வி) ரம் பற்றி

    என்மனக் கையொப்ப ஏட்டினில் நட்பாக எப்போதோ என்றோ உன்னிடம் வாங்கிய விடியல் புன்னகையின் வீர கையொப்பம் உந்தன் விழிகளில் வீரீய வேகத்தில் விழுந்தேன்

    காற்றில் மிதக்கும் இறகுகளாக உந்தன் காதல் பாடல்களால் மிதந்தது என்னுளம்

    புலனைந்தும் ஒன்றோடு
    ஒன்று பற்றி உயிர்த்தீயை எரிய விட்டது தேசபக்தி

    அச்சமற்ற நிந்தன் வார்த்தைகள் தினம் ஆலமர விழுதுகளாய் நெஞ்ச நிலத்தைக் கீறி இறங்குகிறது

    உள்நோக்கி சொற்களாய்
    அதைப் பற்றிப் படர்ந்து பரவசம் அடைகிறேன் பாக்களாய்

    இயற்கையின் ஒவ்வொரு காட்சியும் நிறைத்து இதயத்தில் படம் எடுத்துக் காட்டுகிறாய்

    காணி நிலம் இல்லாத கவிஞனே உந்தன் கற்பனைக்கோட்டை மற்றவற்றைத் தகர்த்ததே

    நாளொரு எண்ணம் நாளொரு பேச்சு என வாழும் மனிதருள்

    வீரமும் ஈரமும் சமமாய் உறவாடும் சத்தியத்தின் நித்தியமே

    மரணத்தையும் துச்சமாக மதித்த மாவீரனே

    நீ இல்லையென்றால் இந்தக் கவிதைகள் எல்லாம் என்னவாகியிருக்கும்

    கண்ணை விடுத்து கண்ணீர் புறப்படுவது போல்

    மண்ணை விடுத்து விண்ணோக்கி சென்றாய்

    புனிதனே… உன்னை புதைத்துக் கொண்டாளே பூமித்தாய்

    உன் போன்ற தங்கங்களும் வைரங்களும் புதைந்த காரணத்தாலோ இவை இன்றும் கிடைக்கிறது பூமியில் தோண்டத் தோண்ட…

    ஆனாலும் என்
    கரங்களிலிருந்து நழுவ விடேன் உன்னை…

    பூமியின் சுதந்திர தாகம் தீர்க்க
    பூவாகி உதிர்ந்தவனே
    என்றும்
    பாவாகி வளர்ந்தவனே…

    என் இதயத்தில் மிதக்கும் இன்பத் தோணியே
    என் கவிதைக்கு என்றும் நீதான் ஏணியே…

    நூற்றாண்டு நினைவு கவியரங்கில் கலந்து கொள்ள வாய்ப்பளித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி

    திண்டுக்கல் பி மீராபாய்

  • பி.மீராபாய்

   எட்டுத் திசையும் வந்திங்கு தேமதுரத் தமிழோசை உலகெங்கும் பரப்ப பாவலர்கள் பலராலே பாரதிக்கு நினைவஞ்சலி கவிஞர்கள் ஒவ்வொருவரும் பா என்ற பூக்களை பாரதியின் பாதம் செலுத்தினர் அத்தனை மலர்கள் அருமையோ அருமை அத்தனை மலர்களையும் இணைத்துக் கட்டி பூ மாலையாக்கி மகிழ்ந்த திரு நீலகண்ட தமிழன் ஐயாவை கண்டு வியப்பும் பெருமிதமும் ஒருங்கே அடைந்தேன் இப்படி ஒரு ஒருங்கிணைப்பாளரால்தான் பாரதிக்கும் பாரதியால் தமிழன்னைக்கும் சூட்ட இயலும் பல்வேறு நாடுகளில் இருப்போரும் பாரதிக்கு புகழ்மாலை சூட்டக் கூடியது அந்த அக்கினி குஞ்சின் அணையா நெருப்பு என்பதை அகிலத்திற்கு உணர்த்துகிறது நீலகண்ட தமிழன் ஐயாவால் திசைகள் வானொலி நிலையத்தால் எங்கள் கவிதைகள் இன்று பார் முழுக்க பரவியது இத்தகைய சிறப்பை எங்களுக்கு பெற்றுத்தந்த திசைகள் வானொலி நிலையத்திற்கும் அதற்கு முன்னோடியாக விளங்கும் நீலகண்ட தமிழன்ஐயா அவர்களுக்கும் அதற்கு உறுதுணையாக இருந்த நல் உள்ளங்களுக்கும் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறோம்

   அன்புடன் திண்டுக்கல் பி மீராபாய்

   • சொ.கோட்டீஸ்வரன்.

    வணக்கம்.
    சொ.கோட்டீஸ்வரன்.
    சென்னை 15.

    சங்கத் தமிழ் இலக்கியப் பூங்கா.

    பாரதியார் நூற்றாண்டு கவிதாஞ்சலி.

    தலைப்பு: பாரதியும் நானும்.

    வீர செறிவினிலே உள்ள உயர்வினிலே கோல தமிழ் அழகில் கொஞ்சி குலாவிடவே

    வந்த பாரதியே
    வாழும் வாழ்வினிலே
    எவர்க்கும் தாழும் தலையரியாய்.
    வஞ்சனை செய்தோரை நெஞ்சில் பஞ்சணை செய்யாமல்.

    அக்கினி குஞ்சு ஒன்றாய் அவர் தனை வீழ்த்திடுவாய்.

    வாழிய பாரதமே என்னும் மந்திரம் முழங்கிடவே.
    இமய முதல் குமரி வரை இருந்த வீர நெஞ்சமதில்.

    பார் அதி பாரதி தீ நீ
    பற்றியே எரிந்திட்டாய்.
    எட்டு திக்கும் எட்டிட பாட்டிசைத்தே பாமர நெஞ்சினிலும்
    சுதந்திர தாகத்தை ஏற்றி நின்றாய்.

    காதலி கண்ணம்மாவை இதயத்தில் கமலமாக்கி பெண் விடுதலை போற்றியே கவி வானில்
    வலம் வந்தாய்.

    பாரத தாயின் நீண்ட நெடுந்து உயர்ந்த பாவல அக்கினி குஞ்சு அவர்.

    சென்ற இடமெல்லாம் பற்றிடும் சுதந்திர வேள்வி அது நாவினில் பா எனும் தீ
    அதுவே பாரதி.

    வறுமை பழகிக் கொண்டார்.
    வாட்டிடும் தணலாம் சுதந்திரம் தமிழினில் ஏற்றி நின்றார்.

    தன்மானச் சிங்கமாய் கர்ஜித்தே வெள்ளையனை விரட்டிட பாட்டிசைத் தான்.

    கள்ளமில்லா உள்ளமவர்.
    உலை வைக்கும் முன் குருவிகளுக்கு இறை வைத்தே இருக்கும் தானியங்கள் இறைத்தே மகிழ்ந்திருப்பார்.

    சுதந்திர போராட்ட புரட்சி பாரதி யே
    மூச்சினிலும் பேச்சினிலும் முழுவதும் பாரத உயர்வதை எண்ணி எண்ணியே.

    சொல்லிட்டு சென்றாயே நதி யாவும் இணைத்திடவே.

    இன்னும் பல நூற்றாண்டுகள் சொல்லிடும் நின் பெருமைதனை.

    பாட்டுக்கு பாரதியே. நினை பாடியே களித்திடவே.
    மது உண்ட தேனீ யாக.
    மயங்கி கிறங்கி கொட்டுதையா தமிழ் மொழியும்.
    வார்த்தைகள் தடுமாற்றமில்லாது சரளமாய் கோர்க்குது பாமாலை உன் மார்பை அலங்கரிக்க.

    அத்துணை வாஞ்சையுடன் உன் அன்புக்கு பா மாலை தமிழ் அன்னை தந்திடுவாள்.
    தாழ்மையுடன் நான் தொடுக்க தரணி புகழ் கவி சக்கரவர்த்தி காலடி சமர்ப்பிப்பேன். நாவில் தேன் தடவிய நற்றமிழில் உனக்காக.

    வாழ்க பாரதியே
    வாழ்க தமிழ் அன்னை.
    வாழ்க பாரதமே

    நன்றி நவில்கின்றேன் நல்வாய்ப்பை எனக்களித்த சங்கத் தமிழ் இலக்கியப் பூங்காவிற்கே.

    நன்றி, வணக்கம்.

    சொ.கோட்டீஸ்வரன்.
    சென்னை 15.

 • Sripriya seshadri

  பங்குபெரும் அனைத்து உறவுகளுக்கும்
  வாழ்த்துக்கள்

  ஸ்ரீப்ரியா சேஷாத்திரி
  காவேரிப்பாக்கம்

 • ச. மங்கையர்க்கரசி

  மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு கவிதாஞ்சலி நிகழ்ச்சியில் பங்கு பெரும் அனைத்து கவிஞர் பெருமக்களுக்கும் சங்க தமிழ் இலக்கியப் பூங்கா ஒருங்கினைப்பாளர் அய்யா நீலகண்ட தமிழ் அவர்களுக்கும் திசைகள் வானொலி நிலையத்தாருக்கும் என் வாழ்த்துககளும் இதில் இந்தப் பாமாலையில் நானும் ஒரு சிறு மலராக இணைந்து இருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது என்பதை எனது நன்றியையும் பதிவு செய்து கொண்டு மீண்டும் நன்றி நவில்கிறேன்

 • சங்கீதா

  சிறப்பு நிகழ்ச்சியில் பப்கேற்க நான் பெரும் பாக்கியம் செய்தவள்

 • ச. மங்கையர்க்கரசி

  மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு கவிதாஞ்சலி நிகழ்ச்சியில் பங்கு பெரும் அனைத்து கவிஞர் பெருமக்களுக்கும் சங்க தமிழ் இலக்கியப் பூங்கா ஒருங்கினைப்பாளர் அய்யா நீலகண்ட தமிழ் அவர்களுக்கும் திசைகள் வானொலி நிலையத்தாருக்கும் என் வாழ்த்துககளும் நன்றியும் உரித்தாகுக. இப்பாமலையில் நானும் ஒரு சிறு மலராக இணைந்து இருப்பது எனக்கு பெருமகிழ்ச்சி அளிக்கிறது.

  மீண்டும் இப் பெருமுயற்சி பெரும் வெற்றி பெற வாழ்த்தும் முன்னெடுத்த அனைத்து நல்லிதயங்களுக்கும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன்

 • முத்துவேல் இராகி

  100 நிகழ்விலே முதல் நிகழ்வான பாரதியார் நினைவு கவிதாஞ்சலி
  இங்கே பாரதியார் உயிர்த்துவிட்டார்
  கவிஞர்களின் கவியில் பாரதியாரை காணமுடிந்தது
  மிகவும் அருமையான இந்நிகழ்வினை ஏற்பாடு செய்த ஐயா நீலகண்ட தமிழன் அவர்களுக்கும் இந்நிகழ்வு சிறப்புடன் அமைய அரும்பாடுபட்ட ஏனைய ஒருங்கிணைப்பாளர்கள் நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி
  மற்றும் கவிதைகளை உருவாக்கித் தந்து பாரதியை கண்முன்னே கருவாகிய கவிஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • வி.தமிழ்செல்வன் புதுவை

   வி.தமிச்செல்வன்
   புதுவை
   11-09-2020

   சங்கத்தமிழிலக்கியப் பூங்கா நடத்தும்

   மகாகவிபாரதி நூற்றாண்டு நினைவு விழா கவியரங்கம்

   மகாகவி பாரதி

   எட்டையபுரத்து பாட்டுக்காரன் உறவுக்கு பாட்டன்காரன்
   தட்டிப் பறித்த சுதந்திரத்தை – கட்டி
   இழுத்து அணைத்த செந்தமிழ் கவிராசன்
   பட்டிதொட்டி எங்கும் விதைத்தாய் – விடுதலை
   வேட்கையை தெள்ளியத் தமிழ்ப் பாட்டாலே
   அடிமை மோகத்தை மடிய வைத்தாயே

   அடைத்திடத் துடித்தான் பரங்கியன் சூழ்ச்சியாலே
   அடைந்தாய் தந்திரமாய் தஞ்சம் புதுவையிலே
   புதுவையும் புதுமையானது புரட்சிக் கவியாலே
   பதுமையும் உயிரானது தணல் விழியாலே
   நேசமுடன் முண்டாசே சுப்புவை வசமாக்கினாய்
   வாசமுடன் தாச னானார் பாரதிதாசனாக்கினாய்

   கவியாளும் பாரதியே தமிழாளும் மொழியே
   வில்லிருந்து புறப்படும் அம்பாய் – விளித்தாயே
   பன்மொழிவித்தகா…. தமிழொன்றே இனிதாவதெங்கும் என்றாயே
   உன்மொழிக்கு உயிரில்லையேயின்று! அரசும் தடம் மாறுதே
   திருநாளாய் ஒருநாளாம் கொண்டாடும் விழாவாய்
   நூற்றாண்டு நினைவை போற்றிடுதே பெருநாளாய்….

   அநீதியை கண்டு பொங்கிய மீசைக்காரா
   நீதியெங்கு என்று தேடித் தொலைகிறோம்
   காக்கைக் குருவி எங்கள் சாதியென்றாயே
   வீதிக்கொரு சாதியமைத்து சாக்கடையில் புரள்கிறோம்
   அச்சமில்லை அச்சமில்லை துச்சமென சொன்னாயே
   அச்சமே நாளும் தொற்றுநோயானதே எங்கும்

   நெஞ்சகலா கயமை ஒழித்திட கயிராகட்டும்
   உன் முண்டாசே தூக்குக் கயிராகட்டும்
   வெந்தணல் தெறிக்கும் விழிகள் இரண்டும்
   சுட்டழிக்கும் தோட்டாக் களாய் பாயட்டும்
   அறியாமை இருளகற்ற மூச்சடக்கா சக்தியாய்
   இந்நூற்றாண்டு நினைவில் நீயும்உயிர்த்திட வேண்டும்……

   வி.தமிழ்ச்செல்வன்
   புதுவை

  • முனைவர் ம.ரூபி அனன்ஸியா

   பாரதியார் நினைவு நூற்றாண்டு விழா கவிதைகள் அத்தனையும் சங்கத் தமிழிலக்கியப் பூங்காவென்னும் மாலையில் கோர்க்கப்பட்டு மணம் வீசும் மல்லிகைப்பூக்களின் குவியல். மனதோடு கவிபாட உறவோடு மகிழ்ந்தாட வழிகாட்டியாய் விளங்கும் சங்கத் தமிழிலக்கியப் பூங்கா தலைவர் தமிழ்த்தாயின் தவப்புதல்வர் நீலகண்ட தமிழன் ஐயா மற்றும் சங்கத் தமிழிலக்கியப் பூங்கா குழுப்பொறுப்பாளர்கள் மேலும் புதிய திசைகள் வானொலி நிலையத்தாருக்கும் என் மனமார்ந்த சிரம் தாழ்ந்த நன்றிகள்

 • சங்கீதா

  பாடல் பாடி நம் தேசக்கவியை எழுப்புவித்த அம்மாக்கு நன்றி 🙏🏻

 • வி.தமிழ்செல்வன் புதுவை

  வி.தமிச்செல்வன்
  புதுவை
  11-09-2020

  சங்கத்தமிழிலக்கியப் பூங்கா நடத்தும்

  மகாகவிபாரதி நூற்றாண்டு நினைவு விழா கவியரங்கம்

  மகாகவி பாரதி

  எட்டையபுரத்து பாட்டுக்காரன் உறவுக்கு பாட்டன்காரன்
  தட்டிப் பறித்த சுதந்திரத்தை – கட்டி
  இழுத்து அணைத்த செந்தமிழ் கவிராசன்
  பட்டிதொட்டி எங்கும் விதைத்தாய் – விடுதலை
  வேட்கையை தெள்ளியத் தமிழ்ப் பாட்டாலே
  அடிமை மோகத்தை மடிய வைத்தாயே

  அடைத்திடத் துடித்தான் பரங்கியன் சூழ்ச்சியாலே
  அடைந்தாய் தந்திரமாய் தஞ்சம் புதுவையிலே
  புதுவையும் புதுமையானது புரட்சிக் கவியாலே
  பதுமையும் உயிரானது தணல் விழியாலே
  நேசமுடன் முண்டாசே சுப்புவை வசமாக்கினாய்
  வாசமுடன் தாச னானார் பாரதிதாசனாக்கினாய்

  கவியாளும் பாரதியே தமிழாளும் மொழியே
  வில்லிருந்து புறப்படும் அம்பாய் – விளித்தாயே
  பன்மொழிவித்தகா…. தமிழொன்றே இனிதாவதெங்கும் என்றாயே
  உன்மொழிக்கு உயிரில்லையேயின்று! அரசும் தடம் மாறுதே
  திருநாளாய் ஒருநாளாம் கொண்டாடும் விழாவாய்
  நூற்றாண்டு நினைவை போற்றிடுதே பெருநாளாய்….

  அநீதியை கண்டு பொங்கிய மீசைக்காரா
  நீதியெங்கு என்று தேடித் தொலைகிறோம்
  காக்கைக் குருவி எங்கள் சாதியென்றாயே
  வீதிக்கொரு சாதியமைத்து சாக்கடையில் புரள்கிறோம்
  அச்சமில்லை அச்சமில்லை துச்சமென சொன்னாயே
  அச்சமே நாளும் தொற்றுநோயானதே எங்கும்

  நெஞ்சகலா கயமை ஒழித்திட கயிராகட்டும்
  உன் முண்டாசே தூக்குக் கயிராகட்டும்
  வெந்தணல் தெறிக்கும் விழிகள் இரண்டும்
  சுட்டழிக்கும் தோட்டாக் களாய் பாயட்டும்
  அறியாமை இருளகற்ற மூச்சடக்கா சக்தியாய்
  இந்நூற்றாண்டு நினைவில் நீயும்உயிர்த்திட வேண்டும்……

  வி.தமிழ்ச்செல்வன்
  புதுவை

 • தனலட்சுமி பரமசிவம்

  கவிதாஞ்சலி நிகழ்ச்சி சிறப்பான தொடக்கத்துடன் படைகளப் பாவலர் ஐயாவின் வலிமையான குரலில்.பிரான்ஸ் நாட்டு தமிழ்க்குயிலின் கவிதை வரிகள் அருமை

 • ச. மங்கையர்க்கரசி

  இந்தப் பாமாலையில் எனது பாமர வரிகள்:

  *பார் அதிபுகழும் பாரதி பார்*
  ***********************************
  காலடி மூலிகை மகிமை அறிவதில்லை என்பது
  வையத்தின் சாபம்!

  இல்லாமலா இனிய
  இளமனது கவிஞனை
  இன்னலுக்காளாக்கினோம்?

  ஆழாக்கு அரிசியை ஆக்கித
  தின்னாமல் அழகுச் சிட்டுக்கு ஆகாரமளித்து அடிவயிற்றில் ஈரத்துணி யிறுக்கி
  வயிற்றுத்தீயைத் தணித்து
  வாசல்முற்றப் புள்ளினம் காத்தான்!

  அக்காருண்யம் கருணை மனம்
  அந்தக் கவியரசர் தாண்டி
  யார் தான் பெறுவாரோ?
  ஊரார் தான் அறிவாரோ!

  இனியனவன் எண்ணம்
  வைத்தால் இலட்சியங்களை கைவிட்டு இலட்சங்களை
  எளிதாய் எட்டியிருக்கலாம்!

  வறுமைக்கு வறுமை தந்த
  வள்ளலவன்! தமிழுக்கே
  வாழ்வு தந்தான்! தரணியைத்
  தமிழால் ஆண்டான்! அச்சத்தை
  புறமுதுகிட்டான்!

  மாந்தர் தம் குலப்பாகுபாடு குப்பையெனத் தள்ளிக் காக்கை குருவிகளை சொந்தமென கொண்டாடியக் கோமான்!

  பசிப்பிணி வாட்டிய நாளில்
  கற்பனைத் தேரிலேறி
  அரசனாய்த் திளைத்துத்
  தமிழ் காதலினால்
  மக்கள் மனதில்
  பேரரசனானான்!
  பார் அதி புகழும பாரதி பார்!

  … . . மங்கையர்க்கரசி
  … . . தலைமைச் செயலகம்
  கைப்பேசி 9677171976

 • ச. மங்கையர்க்கரசி

  அனைவரது ஒலிபரப்பு ப் பதிவுகளும் மிகவும் அருமை.

  அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை பதிவு செய்கிறேன்.

  வாழ்க வளமுடன்
  வாழ்க வையகம்

 • படைக்களப் பாவலர் துரை. மூர்த்தி

  மகாகவி பாரதியார் நூறாவது நினைவு ஆண்டு…
  இந்த நாளில் பாரதியார் தம் புகழை நினைவு கூறும் வகையில் சங்கத் தமிழ் இலக்கியப் பூங்காவின் பாவலர் தம் எண்ணத்தின் வண்ணங்களை திசைகள் வானொலி நிலையம் ஒலிபரப்பி புகழாஞ்சலி செலுத்துவது மட்டற்ற மகிழ்ச்சி தருகிறது. இந்த இனிய நிகழ்வுக்காக முன் நின்ற சங்கத்தமிழ் இலக்கியப் பூங்கா இயக்குநர் தோழர் பாவலர் நீலகண்ட தமிழன் அவர்களுக்கும் உடன் இணைந்து ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் எம் நன்றியும் பாராட்டும் வாழ்த்தும்…..
  தங்கள் தமிழன்பன்,
  படைக்களப் பாவலர்

 • Vijayaramu61@mail. Com

  அருமை அருமை அத்தனை கவிதைகளும் அருமை. பெருமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் குழுவினரையே சாரும். சோலை பூக்களில் தேனீயாய் செயல் பட்டு தேன் எடுத்து திசைகள் வானொலி எனும் கோப்பையில் எடுத்து பருக படைத்தார் தமிழ்த்தேன் பருகி ஆனந்த பரவசம் அடைவோம். பாஞ்சாலி சபத பாவலன்
  பாரதியை பா ரதத்தில் ஏற்றி அஞ்சலி சபதம் எடுத்து செயல்பட்டுக்கொண்டிருக்கும் பாவலர் சொந்தங்களுக்கு பாராட்டுக்கள். திசைகாட்டும் திசைகள் வானொலி சிறக்க வாழ்த்துக்கள். !

  • பி.மீராபாய்

   எட்டுத் திசையும் வந்திங்கு தேமதுரத் தமிழோசை உலகெங்கும் பரப்ப பாவலர்கள் பலராலே பாரதிக்கு நினைவஞ்சலி கவிஞர்கள் ஒவ்வொருவரும் பா என்ற பூக்களை பாரதியின் பாதம் செலுத்தினர் அத்தனை மலர்கள் அருமையோ அருமை அத்தனை மலர்களையும் இணைத்துக் கட்டி பூ மாலையாக்கி மகிழ்ந்த திரு நீலகண்ட தமிழன் ஐயாவை கண்டு வியப்பும் பெருமிதமும் ஒருங்கே அடைந்தேன் இப்படி ஒரு ஒருங்கிணைப்பாளரால்தான் பாரதிக்கும் பாரதியால் தமிழன்னைக்கும் சூட்ட இயலும் பல்வேறு நாடுகளில் இருப்போரும் பாரதிக்கு புகழ்மாலை சூட்டக் கூடியது அந்த அக்கினி குஞ்சின் அணையா நெருப்பு என்பதை அகிலத்திற்கு உணர்த்துகிறது நீலகண்ட தமிழன் ஐயாவால் திசைகள் வானொலி நிலையத்தால் எங்கள் கவிதைகள் இன்று பார் முழுக்க பரவியது இத்தகைய சிறப்பை எங்களுக்கு பெற்றுத்தந்த திசைகள் வானொலி நிலையத்திற்கும் அதற்கு முன்னோடியாக விளங்கும் நீலகண்ட தமிழன்ஐயா அவர்களுக்கும் அதற்கு உறுதுணையாக இருந்த நல் உள்ளங்களுக்கும் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறோம்

   அன்புடன் திண்டுக்கல் பி மீராபாய்

 • தனலட்சுமி பரமசிவம்

  கவி உறவுகளின் படைப்புகளுக்கு கூடுதல் அலங்காரமாய் பாரதி பாடல்களின் ஒலிபரப்பு அருமை .திசைகள் வானொலி நிர்வாகிகளுக்கு மிக்க நன்றி

 • தஞ்சை த.இராமநாதன்

  சிறப்பு!

  அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

 • பொ.சியாமளா

  அழகான கவிகளின் எண்ணங்களில் நம் பாரதியார் வாழ்கிறார்…
  அனைவருக்கும் வாழ்த்துக்கள்…

  • வே.சண்முகதேவி

   *பாரதியார் நினைவு நூற்றாண்டு அஞ்சலி*
   **************************
   எட்டயபுர மண்ணில் பிறந்து எட்டா உயரம் எட்டியவன் நீ !
   அகவை ஏழில் அழகாக பாக்கள் தந்தாய்
   பாரில் உயர்ந்தாய்!
   சுப்பையா என்றொரு நாமமும்
   சுகமாய் பாரதி என்றானது
   பாரில் உந்தன் சிந்தனையும்
   தேரில் என்றும் பவனி வரும்
   சொல்லால் ஆயுதம்
   ஏந்தி வந்தாய்
   புல்லில் பனியாய் உறைந்து நிற்பாய்!
   நாடும் மொழியும் மூச் சென்றாய்
   கூடும் அன்பில் குழைந்து நின்றாய்
   மொழிகள் பலவும் அறிந்தவன் நீ !
   தமிழே உயர்வென்று ரைத்தவன் நீ!
   எழிலாய் சொற்கள்
   பல சேர்த்து
   பொலிவாய் பாக்கள் இயற்றி வந்தாய்.
   பாரதவிடுதலை
   வேள்வியிலே
   பாரதி நீதான் பெருநெருப்பு
   வாழ்வில் செல்லம்மாவைக் கைப் பிடித்தாய்
   பாவில் கண்ணம்மாவை வடித்தெடுத்தாய்
   நிற்பதும் நடப்பதும் சொப்பனமென்றாய் கருதுவதும் கேட்பதும் மாயை என்றாய்
   முண்டாசும் முறுக்கு மீசையும் அடையாளமாக்கி பாரில் தமிழுக்கு முகவரி பெற்றாய்
   உன் வயிற்றைப் பட்டினியாக்கி ஜகத்தின் பட்டினி போக்கியவன் நீ!
   காலனைக் காலால் உதைப்பேனென்றாய்
   களிரால் நீயும் மாண்டு விட்டாய்
   சிகையில் கூட வெள்ளையனிடம்
   பகையைக் காட்டி விரட்டி விட்டாய்
   உந்தன் திறமும் கவியழகும் உள்ளம் நிறைந்து வாழியவே!
   **************************
   கோவை வே.சண்முகதேவி

 • நீலகண்ட தமிழன்

  💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
  *சங்கத் தமிழ் இலக்கிய பூங்கா நடத்தும் மகாகவி பாரதியார் நூறாவது ஆண்டு நினைவேந்தல் கவிதாஞ்சலி நிகழ்ச்சி திசைகள் வானொலி வழியாக ஒலிபரப்பாகிறது!*

  *இந்த நிகழ்ச்சியை இப்போது மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் பெயர்த்தி*

  *தமிழ்த்திரு மீனாட்சி பாரதி அவர்களும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்*

  *இந்த செய்தியை நமக்குத் தெரிவித்தார்கள்!*

  *இதைவிட நமக்கு வேறு என்ன வரம் இருக்கிறது?*
  நீலகண்ட தமிழன் சங்கத் தமிழ் இலக்கியப் பூங்கா
  🙏🙏🙏💐💐💐🙏🙏🙏💐💐💐. 👍. 💐💐🙏🙏🙏🙏

 • நீலகண்ட தமிழன்

  மகாலட்சுமி உங்கள் சகோதரி தானே அவர்கள் கவிதை ஒலிபரப்பானது. எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி பாரதியைப் பற்றி அருமையாக பேசியிருந்தார். தலைமுறைகள் மாறலாம் நடைமுறைகள் மாறலாம் பாரதி என்ற மகத்தான கவிஞர் இவை எல்லாவற்றையும் கடந்து நிற்பான். அதனால்தான் அவன் மகாகவி

 • P Sivaraman

  பாரதி என்பவன் கவிதையின் சாரதி…

  பாரதம் வென்றிட கவிதைச் சங்கொலித்தவன்…

  பாட்டுத் திறத்தால் படைகளாய் மாற்றினார்…

  பாக்களைப் பூக்களாய் யாத்தவர்
  மத்தியில்…

  போர்க்களச் சங்கென விடுதலை முழங்கினான்..

  பார்த்தன் வென்றிட பாரதம் வென்றதா???

  பாஞ்சாலி சபதத்தால்
  பாரதமும் வென்றதா..???

  பாரதியின் பாஞ்சாலி சபதத்தால் பாரதம் வென்றதா…???

  பாரத அடிமைத் தளையினை உடைத்திட…

  பாஞ்சாலியாய் பாரதத்தை உவமைக் காட்டினான்..

  நெட்டை மரங்களென நின்றனர் என்றனன்..

  சொன்னது பாண்டவரை.. சுட்டியது நம் மக்களை..

  சொன்னது பாண்டவரை.. சுட்டியது நம் மக்களை..

  விடுதலை விடிந்திட
  பூபாளம் பாடினான்.

  விடிந்திட இசைத்திடும் குயில் எனக் கூவினான்..

  அச்சமில்லை அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

  உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே..

  எமக்குத் தொழில் கவிதை
  என்றான்..

  எழுத்தால் சுதந்திர யாகம் செய்தார்…

  ஏழை யென்றும் அடிமையென்றும் எவரும் இங்கு இல்லையே…

  இழிவு பெற்ற
  மனிதர் எங்கும் இந்தியாவில் இல்லையே என்று முழங்கினார்..

  சாதி அடையாளத்தை அறுத்து எறிந்தவன்…

  மனித ஜாதியின் மகத்துவம் அறிந்தவன்…

  காக்கை கருவி எங்கள் ஜாதி என்றவன்..

  காடும் மலையும் எங்கள் கூட்டம் என்று முழங்கியவன்..

  வாழ்ந்திடும்போது பித்தன் என்றனர்..

  புத்தன் ஏசு காந்திக்கும் இதுவே நடந்தது..

  கும்மியடித்தே
  கும்பினியரசை கலங்கிட செய்தவன்
  எங்கள் பாரதி …

  முண்டாசுக் கவிஞனுக்கு என் சிரம் தாழ்ந்த புகழ் வணக்கம்.

  தேடிச் சோறு நிதம் தின்று.
  பல சின்னஞ் சிறுகதைகள் பேசி… மனம் வாடித் துன்பமிக உழன்று…

  பிறர் வாடப் பல செயல்கள் செய்து..

  நரைகூடி கிழப் பருவம் எய்தி கொடும்கூற்றுக்கு இரையென பின் மாயும்..

  பலவேடிக்கை மனிதரை போலே நான்வீழ்வேனென்று நினைத்தாயோ என்று சொன்ன பாரதிக்கு என் புகழ் வணக்கம்…

  நன்றி

  பசி என்கிற
  ப சிவராமன்

 • மைசூர் இரா.கர்ணன்

  பாவலர் விருதை சசி
  அவர்களே..
  சிறப்பானக் கவிதைத் தந்து…சிந்தைக் கவர்ந்தீர்..
  💐💐💐💐🙏

  மைசூர் இரா.கர்ணன்

 • சொ.கோட்டீஸ்வரன்.

  வணக்கம்.
  சொ.கோட்டீஸ்வரன்.
  சென்னை 15.

  சங்கத் தமிழ் இலக்கியப் பூங்கா.

  பாரதியார் நூற்றாண்டு கவிதாஞ்சலி.

  தலைப்பு: பாரதியும் நானும்.

  வீர செறிவினிலே உள்ள உயர்வினிலே கோல தமிழ் அழகில் கொஞ்சி குலாவிடவே

  வந்த பாரதியே
  வாழும் வாழ்வினிலே
  எவர்க்கும் தாழும் தலையரியாய்.
  வஞ்சனை செய்தோரை நெஞ்சில் பஞ்சணை செய்யாமல்.

  அக்கினி குஞ்சு ஒன்றாய் அவர் தனை வீழ்த்திடுவாய்.

  வாழிய பாரதமே என்னும் மந்திரம் முழங்கிடவே.
  இமய முதல் குமரி வரை இருந்த வீர நெஞ்சமதில்.

  பார் அதி பாரதி தீ நீ
  பற்றியே எரிந்திட்டாய்.
  எட்டு திக்கும் எட்டிட பாட்டிசைத்தே பாமர நெஞ்சினிலும்
  சுதந்திர தாகத்தை ஏற்றி நின்றாய்.

  காதலி கண்ணம்மாவை இதயத்தில் கமலமாக்கி பெண் விடுதலை போற்றியே கவி வானில்
  வலம் வந்தாய்.

  பாரத தாயின் நீண்ட நெடுந்து உயர்ந்த பாவல அக்கினி குஞ்சு அவர்.

  சென்ற இடமெல்லாம் பற்றிடும் சுதந்திர வேள்வி அது நாவினில் பா எனும் தீ
  அதுவே பாரதி.

  வறுமை பழகிக் கொண்டார்.
  வாட்டிடும் தணலாம் சுதந்திரம் தமிழினில் ஏற்றி நின்றார்.

  தன்மானச் சிங்கமாய் கர்ஜித்தே வெள்ளையனை விரட்டிட பாட்டிசைத் தான்.

  கள்ளமில்லா உள்ளமவர்.
  உலை வைக்கும் முன் குருவிகளுக்கு இறை வைத்தே இருக்கும் தானியங்கள் இறைத்தே மகிழ்ந்திருப்பார்.

  சுதந்திர போராட்ட புரட்சி பாரதி யே
  மூச்சினிலும் பேச்சினிலும் முழுவதும் பாரத உயர்வதை எண்ணி எண்ணியே.

  சொல்லிட்டு சென்றாயே நதி யாவும் இணைத்திடவே.

  இன்னும் பல நூற்றாண்டுகள் சொல்லிடும் நின் பெருமைதனை.

  பாட்டுக்கு பாரதியே. நினை பாடியே களித்திடவே.
  மது உண்ட தேனீ யாக.
  மயங்கி கிறங்கி கொட்டுதையா தமிழ் மொழியும்.
  வார்த்தைகள் தடுமாற்றமில்லாது சரளமாய் கோர்க்குது பாமாலை உன் மார்பை அலங்கரிக்க.

  அத்துணை வாஞ்சையுடன் உன் அன்புக்கு பா மாலை தமிழ் அன்னை தந்திடுவாள்.
  தாழ்மையுடன் நான் தொடுக்க தரணி புகழ் கவி சக்கரவர்த்தி காலடி சமர்ப்பிப்பேன். நாவில் தேன் தடவிய நற்றமிழில் உனக்காக.

  வாழ்க பாரதியே
  வாழ்க தமிழ் அன்னை.
  வாழ்க பாரதமே

  நன்றி நவில்கின்றேன் நல்வாய்ப்பை எனக்களித்த சங்கத் தமிழ் இலக்கியப் பூங்காவிற்கே.

  நன்றி, வணக்கம்.

  சொ.கோட்டீஸ்வரன்.
  சென்னை 15.

 • karmegam Selvaraj

  *பாரதிப் பாட்டையன்*

  பாரதிப் பாட்டையா
  பாடினாலே பரவசமூட்டுது
  உன் பாட்டய்யா!

  மொழிப் பற்றை ஊரெங்கும்
  பாலூட்டும் தாய்போலப்
  புகட்டியது உன் பாட்டய்யா!

  தேசியப் பாடலெனத்
  தெருவெங்கும் விடுதலைத் தீ
  மூட்டியது உன் பாட்டய்யா! (பாரதி…..)

  ஒண்ட வந்த வெள்ளையரை
  ஊரைவிட்டு ஓடிடவே
  விரட்டியது உன் பாட்டய்யா!

  தேசிய ஒருமைப்பாடும்
  நதி நீர்ப் பங்கீடும்
  நாட்டிற்குத் தேவையெனச்
  சுட்டியதும் உன் பாட்டய்யா! (பாரதி….)

  சாதி வெறிபிடித்த
  சாத்திரங்கள் பதைபதைக்கச்
  சிறுவனுக்குப் பூநூலைச்
  சூட்டியவன் நீ பாட்டையா!

  அடிமைத் தளை உடைத்து
  மடமையைக் கொழுத்திட
  மாதருக்குப் பெண்ணுரிமை
  புகட்டியது உன் பாட்டய்யா! (பாரதி…..)

  வானொலி வருமுன்னே
  காசிப்புலவர் உரை கேட்கக்
  காஞ்சியில் கருவியெனக்
  கனாக் கண்ட என் பாட்டையா!

  பாரெங்கும் ஒலித்திடப்
  பாவலர்கள் பாடிடும்
  பாபுனைந்த பாமாலை
  அஞ்சலியைக் கேட்டாயா!

  கலி நீங்கிக் கிருதயுகம்
  எழுந்திட வழி செய்யும்
  வழியொன்றை வழங்கிடவே
  மீண்டும் இங்கு வாராயோ! (பாரதி…)

  நன்றியும் வணக்கமும்

  சங்கத் தமிழ் இலக்கியப் பூங்காவிற்காகக்
  கவிதை வழங்கியது

  *காரைக்குடி கார்மேகம் செல்வராசு*

 • மைசூர் இரா.கர்ணன்

  *வாழ்த்துக்கள்*
  இந்த மாபெரும் பாரதி நினைவு நூற்றாண்டு விழாவை சிறப்பான முறையில் எற்பாடு செய்து வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருக்கும் நம் சங்கத் தமிழ இலக்கியப் பூங்கா ஒருங்கிணைப்பாளர் தமிழ்த்திரு.தமிழன் அய்யா அவர்களுக்கும்..அய்யாவின் பணிகள் சிறக்க அவருக்கு ஒத்துழைத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும்,
  அனைத்து பாவலர்களுக்கும் .

  இவை அத்தனை கவிதைகளையும் ஒலிபரப்பு செய்யும் திசைகள் வானொலிக்கும்

  மனமார்ந்த வாழ்த்துக்களையும்
  பாராத்துக்களையும் த்தெரிவித்துக்
  கொள்கின்றேன்.
  💐💐💐💐💐🙏

  மைசூர் இரா.கர்ணன்.

 • karmegam Selvaraj

  திசைகள் வானொலியும் சங்கத் தமிழ் இலக்கியப் பூங்காவும் கரங்கோர்த்து
  நெடு நேரமாய் வழங்கிடும் புவியை வலம் வரும் அரியதொரு பாரதிப் பாமாலை
  மிகச் சிறப்பு

 • மைசூர் இரா.கர்ணன்

  [11/09, 13:50] Karunanithi: பாவலர் லெனின் அய்யா அவர்களின் கவிதை தேனமுதாய் இனித்தது…அருமை💐💐💐🙏
  [11/09, 17:16] Karunanithi: பாவலர் விருதை சசி
  அவர்களே..
  சிறப்பானக் கவிதைத் தந்து…சிந்தைக் கவர்ந்தீர்..
  💐💐💐💐🙏

  மைசூர் இரா.கர்ணன்

 • natarajanperumal

  சங்கத்தமிழிலக்கியப்பூங்கா மாமன்றத்தின் ஒப்பற்ற ஒரு நிகழ்வாக ஏற்பாடு செய்யப்பட்டு இனிதே நடைபெற்றுக் கொண்டிருக்கிற மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவாஞ்சலி நிகழ்ச்சியில், ஒரு தமிழ் ஆர்வலனாக நானும் பங்கு கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். பெருமதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய திருவாளர் நீலகண்ட தமிழன் ஐயா அவர்களுக்கும் அவரோடு இணைந்து இந்த நிகழ்வினை சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கிற குழு ஒருங்கிணைப்பாளர்கள் அனைவருக்கும் மற்றும் குழுவில் உள்ள அனைத்துக் கவி உள்ளங்களுக்கும் , நடராஜன் பெருமாள் ஆகிய எனது முதற்கண் தமிழ் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  நம் இந்தியத் திருநாடு சுதந்திரம் பெறுவதற்கும் இந்த சமூகத்தில் நடைமுறையில் இருந்த பல கேடுகளைக் களைவதற்கும் தனது தமிழ் எழுத்துகளால் பெரும் வேள்வியே நடத்திய மகாகவி பாரதியின் பெருமைகள் சொல்லில் அடங்காதது. அவரின் நினைவாஞ்சலி என்பது சொல் மட்டுமல்லாது செயலிலும் காட்ட வேண்டிய பல பணிகள் இன்றும் நம் கண் முன்னே ஏராளமாக இருக்கின்றன என்பதே நிதர்சனம்.
  அதற்கான ஒரு தூண்டுகோலாகவே இது போன்ற நிகழ்ச்சிகள் அவசியமாகிறது என்பது எனது எண்ணம். தான் எழுதிய காலம் முழுவதிலும் தமிழ்ப்பற்று நாட்டுப்பற்று தீண்டாமை எதிர்ப்பு பெண்ணடிமைத்தனம் ஒழிப்பு என்று தனது எழுத்திற்கும் வாழ்க்கைக்கும் வேறுபாடே காட்டத் தெரியாத எழுத்தாளனாகவே வாழ்ந்து மறைந்த ஒரு ஒப்பற்ற கவிஞன் பாரதி. வாழும் காலத்தில் போற்றப்படாத எழுத்தாளர்களின் கவிஞர்களின் பட்டியலில் அந்த மகாகவிக்கு முதலிடம் அளித்திருக்கிறோம் என்பதே உண்மை. காக்கைக் குருவி எங்கள் ஜாதி என்று அன்பு பாராட்டியவன், தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் உலகத்தையும் அழித்திடத் துணிந்த பெரும் கவிஞனின் வயிறு தன் வாழ்நாளின் பல நாட்களைப் பசியுடனேக் கழித்திருக்கிறது. வார்த்தைகளில் இருந்த சீற்றத்தை தன் உடலில் முழுதாக வெளிப்படுத்த முடியாத அளவுக்கு வறுமை அவரை வாட்டி எடுத்திருக்கிறது. மானுடம் போற்ற உலக மக்களுக்கு எல்லாம் வழிகாட்டிய கவிஞன், கட்டிய மனைவிக்கும் பெற்ற பிள்ளைக்கும் சோறிட முடியாத சூழ்நிலையில் வாழந்திருக்கிறான் என்பது எவ்வளவு பெரிய துயர் நிறைந்ததாக இருந்திருக்கும் என்பதை எண்ணிப் பார்க்கவே இயலவில்லை. அச்சமில்லை அச்சமில்லை என்று பாடியதெல்லாம் அவர்தம் துயர் கண்டு கலங்காதிருக்கவே முதலில் பயன்பட்டிருக்குமோ என்னவோ. நின்னைச் சரணடைந்தேன் என்று காதலில் உருகிக் கொண்டிருந்தபோது இந்த பாக்களுக்கு பதில் நாலு சோற்றுப் பருக்கைகள் இருந்தால் தேவலை என்று அவரைச் சுற்றி இருந்த பலர் சொல்லுமளவுக்கே ஒரு மகாகவியின் நிலை இருந்திருக்கிறது என்பது எண்ணிப்பார்ப்பதற்கே இயலாத ஒரு விசயமாக இருக்கிறது. ஒரு கலைஞனின் பார்வையில் உலக வாழ்க்கை என்பது அவனது எழுத்தின் திறமைக்கு உயரத்திற்கு முன்னால் மிக அற்பமாகவே இருந்தாலும், தன் உற்றாரின் தேவைக்கு முன் தனது எழுத்தின் செழுமை முழுதும், செல்லாக் காசாக மாறுவதென்பது என்றென்றும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. அவ்வாறு ஒரு எழுத்தாளனின் நிலை தள்ளப்பட்டதற்கு அவனைப் பற்றிப் புரிந்து கொள்ளாத நிலையில் இருந்த இந்த சமூகமும் காரணம் என்பது மிகவும் வேதனை தருவதாக இருக்கிறது. இந்த நிலை மாறியிருக்க வேண்டும். இனியாவது இது போன்றவை மாறுமோ என்பதும் ஒரு ஆழ்ந்த எதிர்பார்ப்பே. சுதந்திரம் பெறுவதற்கு முன்பே ஆனந்த சுதந்திரம் பற்றி எழுதிய கவிஞன், தேச ஒற்றுமையை வலியுறுத்த ஓயாமல் எழுதிக் கொண்டிருந்த கட்டுரையாளன், தானொரு நெருக்கடியான சூழலை ஆங்கிலேய அரசால் எதிர்கொண்ட போது எந்தவொரு பக்கபலமும் ஆதரவுமின்றி இந்த சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட ஒரு சமூக ஆர்வலனாகவே நம் கண்முன்னே காணக் கிடைப்பது சோகத்திலும் சோகமே. மகாகவி பாரதியார் இறந்த பிறகு அவரது எழுத்துப் பணிகளை புரிந்து கொண்டாலும், அவரது எழுத்துகளை நாட்டிலேயே முதன்முதலாக நாட்டுடைமை ஆக்கியதைப் பெருமையாகச் சொல்லிக் கொண்டாலும், தான் வாழ்ந்த காலத்தில் தனது எழுத்திற்கு நிகராக அவர் போற்றப்படவில்லை என்பதை நினைவில் கொண்டு, அவரது எழுத்துகளை எந்த அளவிற்கு மதிக்கிறோமோ அந்த அளவிற்கு அவற்றை செயலாக்கிக் காண்பிப்பது ஒன்றே , மகாகவி பாரதியார் என்ற அந்த தேசியக் கவிக்கு நாம் செய்யும் பெரும் நன்றிக்கடனாக அமையும் என்று சொல்லி, பேச வாய்ப்பளித்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி கூறி விடை பெறுவது

  கவிஞர் நடராஜன் பெருமாள்

  நன்றி வணக்கம்

 • சொ.கோட்டீஸ்வரன்.

  சங்கத் தமிழ் இலக்கியப் பூங்கா.

  பாரதியார் நூற்றாண்டு நினைவு விழா கவிதை.

  தலைப்பு: பாரதி பார்த்துக் கொண்டிருக்கிறார்.

  என் முதல் குழப்பம்.

  சாதிகள் இல்லையடி பாப்பா.
  சொல்லி தந்த தமிழாசிரியர் வீட்டு வாசல் பதாகையில் பெயருக்கு பின் சாதி.

  கேட்டும் விட்டேன்.
  ஐயாவின் முகம் இருண்டது.
  அவரின் அப்பா ஒரு சாதி கட்சி தலைவர் என்றார்.

  முடிவாய் மறுநாள் நாளிதழில் அவர் அப்பா கட்சி விட்டு விலகியதாக செய்தி.

  அனைவரும் என்னை தூற்றினார்கள்.

  ஐயாவின் காலடி பற்றி கதறினேன்.

  நான் செய்ய முடியாததை பாரதி உன் சொல் மூலம் செய்ததாய் வாரி அணைத்துக் கொண்டார்.

  சாதிகள் இல்லையடி பாப்பா.

  அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் – அதை
  அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
  வெந்து தணிந்தது காடு; தழல்
  வீரத்தில் குஞ்சென்னும் மூப்பென்றும் உண்டோ?
  தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்.

  சொ.கோட்டீஸ்வரன்.
  சென்னை 15.

 • மைசூர் இரா.கர்ணன்

  மதுரை மீனாட்சி என்றாலே
  முத்தமிழ் சங்கம் தோன்றிய மண்ணின் பெருமையன்றோ…
  கவியே உங்கள் தமிழ் படைப்பாம் கவிதை ..
  செம்மையம்மா💐💐💐🙏

  மைசூர் இரா.கர்ணன்

 • மைசூர் இரா.கர்ணன்

  பாவலர் புது டெல்லி
  ஜோதி பெருமாள்
  அவர்களே..!

  உங்கள் தமிழ் அருமை.
  கவிதை அருமை.
  கருத்துக்கள் புதுமை

  வாழ்த்துகின்றோம்
  பாராட்டுக்கள்.
  💐💐💐💐💐🙏

  மைசூர் இரா.கர்ணன்

 • மைசூர் இரா.கர்ணன்

  *பாரதி பாட்டையா*
  கவிதை வரிகள் அத்தனையுமே ஆய்வுக்குரிய அற்புதமான கருத்துக்கள்…

  இந்தக் கவிதை தரும்
  தமிழ மேகம் அற்புதம் நிறைந்தது..

  நம் கவி கார்மேகம் செல்வராஜ் அய்யா அவர்கள் இக் குழுவிற்கு கிடைத்த அற்புத மணிகளில் ஒன்று.

  வழ்த்துகின்றோம் அய்யா..மனம் மகிழ்ந்து.

  💐💐💐💐💐💐🙏

  மைசூர் இரா.கர்ணன்

 • மைசூர் இரா.கர்ணன்

  நம் குழுவின் அருமைகளில் ஒருவர் முனைவர் ரூபிஅனன்சியா அவர்களின்

  கவிதை கணீர் என்ற
  குரலில் சிறப்பு…
  💐🙏🙏🙏🙏

  மைசூர் இரா.கர்ணன்.

 • மைசூர் இரா.கர்ணன்

  *பாரெல்லாம் தமிழைச் செய்*

  கவிஞர்.அகஸ்தியப்பட்டி
  மாரியம்மாள் அவர்களே..

  சிறந்தக் கவிதை கண்டீர்..
  சிறப்படைந்தீர் பாரதி புகழ்பாடி…👍👏👏🙏

  மைசூர் இரா.கர்ணன்

 • மைசூர் இரா.கர்ணன்

  *எதிர்மறைக் காலத்தில் நேர்மறையாக சிந்தித்தவன் பாரதி*

  அருமை பாவலர்
  சி.பாலகுமார் அவர்களே…
  💐💐💐💐💐🙏

  மைசூர் இரா.கர்ணன்

 • vasuki n

  சிறப்பான நிகழ்ச்சி தொகுப்பு
  அருமை ஐயா.
  வாசுகி.பெங்களூர்

 • மைசூர் இரா.கர்ணன்

  *என் மனம் கவர்ந்த கவிதை* (மை.இரா.க)

  சங்கத்தமிழ் இலக்கியப் பூங்கா

  பாரதி நூற்றாண்டு நினைவுக் கவிதாஞ்சலி

  *பாரதிப் பாட்டையன்*

  பாரதிப் பாட்டையா
  பாடினாலே பரவசமூட்டுது
  உன் பாட்டய்யா!

  மொழிப் பற்றை ஊரெங்கும்
  பாலூட்டும் தாய்போலப்
  புகட்டியது உன் பாட்டய்யா!

  தேசியப் பாடலெனத்
  தெருவெங்கும் விடுதலைத் தீ
  மூட்டியது உன் பாட்டய்யா! (பாரதி…..)

  ஒண்ட வந்த வெள்ளையரை
  ஊரைவிட்டு ஓடிடவே
  விரட்டியது உன் பாட்டய்யா!

  தேசிய ஒருமைப்பாடும்
  நதி நீர்ப் பங்கீடும்
  நாட்டிற்குத் தேவையெனச்
  சுட்டியதும் உன் பாட்டய்யா! (பாரதி….)

  சாதி வெறிபிடித்த
  சாத்திரங்கள் பதைபதைக்கச்
  சிறுவனுக்குப் பூநூலைச்
  சூட்டியவன் நீ பாட்டையா!

  அடிமைத் தளை உடைத்து
  மடமையைக் கொழுத்திட
  மாதருக்குப் பெண்ணுரிமை
  புகட்டியது உன் பாட்டய்யா! (பாரதி…..)

  வானொலி வருமுன்னே
  காசிப்புலவர் உரை கேட்கக்
  காஞ்சியில் கருவியெனக்
  கனாக் கண்ட என் பாட்டையா!

  பாரெங்கும் ஒலித்திடப்
  பாவலர்கள் பாடிடும்
  பாபுனைந்த பாமாலை
  அஞ்சலியைக் கேட்டாயா!

  கலி நீங்கிக் கிருதயுகம்
  எழுந்திட வழி செய்யும்
  வழியொன்றை வழங்கிடவே
  மீண்டும் இங்கு வாராயோ! (பாரதி…)

  *காரைக்குடி கார்மேகம் செல்வராசு*

 • சொ.கோட்டீஸ்வரன்.

  மிகச் சிறந்த நிகழ்ச்சியாக பாரதியார் நூற்றாண்டு கவிதாஞ்சலி. காலை முதல் தமிழ் சொந்தங்களின் கவிதையும் இடையில் சிறந்த பாடலுடன்.
  தலைமை நீலக்கண்ட தமிழன் அவர்களுக்கும் அமைப்பாளர்களுக்கும் கவிச் சொந்தங்களுக்கும் நன்றிகளும் வாழ்த்துகளும்.

  சொ.கோட்டீஸ்வரன்.
  சென்னை 15.

 • மைசூர் இரா.கர்ணன்

  எட்டயபுரத்தின்
  எட்டா புகழ் நீ..

  தமிழே உயர்வென்று
  உரைத்தவன் நீ

  அருமை..பாவலர்
  கோவை.வே.சண்முகத் தேவி அவர்களே…
  வாழ்த்துக்கள்
  💐🙏

  மைசூர் இரா.கர்ணன்

 • மைசூர் இரா.கர்ணன்

  *சொல் பாரதி*
  இனிமையான
  தெளிவான
  குரல் வலிமை

  சாதிக் கொடுமைகள்
  முற்றிலும் மறைய பாரதியே
  சட்டுனு ஒரு கவிதை சொல்லு..

  அருமை அம்மா..
  (உங்கள் பெயரை சொல்லியிருந்தால் …சொல்லி வாழ்த்த ஏதுவாக இருந்திருக்கும்)

  வாழ்த்துக்கள் அம்மா
  💐💐💐💐💐🙏

  மைசூர் இரா.கர்ணன்

 • மைசூர் இரா.கர்ணன்

  பாரதி என் பிள்ளை

  தமிழன்னை அமுதூட்ட
  நீ வளர்ந்தாய்..

  கத்தும் குயிலுக்கும்
  கவி பாடினாய்..

  அருமை பாவலர்
  முத்துவேல் இராகி அவர்களே…
  சிறப்பையா..உம் கவிதைத் தமிழ்
  👏👏👏👏🙏

  மைசூர் இரா.கர்ணன்

 • மைசூர் இரா.கர்ணன்

  பாவலர்
  முனைவர் சுகுமாரி அருணகிரி அவர்களின் வர்கள் ஒவ்வொன்றுமே
  சிறப்பு…

  உன்னை மறந்தால் பெண் இனத்திற்கு மன்னிப்பே இல்லை..
  👍👍👍💐🙏

  மைசூர் இரா.கர்ணன்

 • மைசூர் இரா.கர்ணன்

  *பாவலர்க்கு வாய் நெறிமுறை*

  சிறந்தவரிகள்.
  பாவலர் ஜாக்குலின் மேரி அவர்களுக்கு
  *வாழ்த்துக்கள் .. பாராட்டுக்கள்*
  💐💐💐💐💐🙏

  மைசூர் இரா.கர்ணன்

 • Dr.வீ.ரமேஷ்பாபு, சிதம்பரம்

  வணக்கம் இன்று காலை தொடங்கிய கவியரங்க நிகழ்வு இப்பொழுது வரை முடிவில்லா தொடர்கதையாய் மிகவும் சீரோடும் சிறப்போடும் இடைவேளை எதுவுமின்றி நமது பாட்டன் தமிழ்த்தாயின் தலைமகன் பாரதிக்கு கவிதாஞ்சலி நடத்திக் கொண்டிருக்கின்றது சங்கத் தமிழ் இலக்கிய பூங்காவும் திசைகள் வானொலியும் இணைந்து.

  யாவும் சிறக்க சங்கத்தமிழ் இலக்கிய பூங்கா ஒருங்கிணைப்புக்குழு நெஞ்சார்ந்த நன்றிகளை வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது

 • கீதா குப்புசாமி

  பாரதி நூற்றாண்டு கவிதாஞ்சலி

  தலைப்பு :
  “பாரதி போல் வருமா ”

  ” எட்டயப்புரத்தில் எட்டாத உயரத்தில் இருக்கும் நிலவே !….
  பெண் விடுதலைக்கு உமக்கு நிகர் உண்டோ !…
  இல்லை இவ்வுலகிலே !….
  அச்சமில்லை ! அச்சமில்லை யென்று வீரமுழக்கமிட்ட அஞ்சாநெஞ்சரே !…..
  பெண்களின் அச்சத்தைப் போக்கியவரே !…..
  உமக்கு நிகர் உண்டோ !…
  இல்லை இவ்வுலகிலே !….
  மனிதரில் சாதி மத இனம் மொழியில் வேறுப்பட்டிருந்தாலும் …
  மனிதரில் அனைவரும் ஒன்றுதானென்று ஒற்றுமைக்கு முரசுக் கொட்டியவரே !…..
  உமக்கு நிகர் உண்டோ!….
  இல்லை இவ்வுலகிலே !…..
  தன் கணவன்மார்கள் சூதாட்டத்தில் தன்னை பனையம் வைத்தும் கவலைப் படாமல் மீண்டெழுந்த பாஞ்சாலியின் வீரத்தை எடுத்துரைத்த வீரரே !….
  உமக்கு நிகர் உண்டோ !…
  இல்லை இவ்வுலகிலே !….
  ஆயுதம் முதல் காகிதம் வரை ….
  ஆலைகள் முதல் கல்வி சாலைகள் வரை ….. அன்று கன்ட கனவு இன்று நிகழ்த்திய பாரதியே !….….
  உமக்கு நிகர் உண்டோ !….
  இல்லை இவ்வுலகிலே !…… பாரதிக்கு நிகர் பாரதியே !……..

  உங்களுடன் 🙏
  கீதா குப்புசாமி 🙏🙏
  ஈரோடு 🙏🙏🙏

 • மைசூர் இரா.கர்ணன்

  கவிஞர் கிருஷ்ணா கணேஷ் அவர்களே
  சிறப்பான *பா* தந்தீர்

  வாழ்க..💐🙏

 • Dr.வீ.ரமேஷ்பாபு, சிதம்பரம்

  வணக்கம் இன்று காலை தொடங்கிய கவியரங்க நிகழ்வு இப்பொழுது வரை முடிவில்லா தொடர்கதையாய் மிகவும் சீரோடும் சிறப்போடும் இடைவேளை எதுவுமின்றி நமது பாட்டன் தமிழ்த்தாயின் தலைமகன் பாரதிக்கு கவிதாஞ்சலி நடத்திக் கொண்டிருக்கின்றது சங்கத் தமிழ் இலக்கிய பூங்காவும் திசைகள் வானொலியும் இணைந்து.

  யாவும் சிறக்க சங்கத்தமிழ் இலக்கிய பூங்கா ஒருங்கிணைப்புக்குழு நெஞ்சார்ந்த நன்றிகளை வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது

 • மைசூர் இரா.கர்ணன்

  சிறுமதி படைத்தோருக்கும்
  பாரதத்தின் *தீ* நீ

  செப்பினீர்…சிறப்பாக

  வாழ்த்துக்கள் பாவலரே
  சு.கலையரசி அம்மையாரே..💐🙏

  மைசூர் இரா.கர்ணன்

 • மைசூர் இரா.கர்ணன்

  *ஏழு கடல் கடந்து வாழும் செம்மொழி எம்மொழி*

  இன்று நம் சங்கத் தமிழ் பூங்கா அதை நிரூபித்துக் காட்டுகின்றது.
  *பெருமை கொள்வோம்.*
  🙏🙏🙏🙏🙏🙏🙏

 • மைசூர் இரா.கர்ணன்

  நம் கவிஞர் அமிர்தலிங்கம் கங்காதரன் அய்யா அவர்கள் நம் குழுவிற்கு கிடைத்த விலை உயர்ந்த்த முத்துக்களில் ஒன்று…

  உம் தமிழ்
  நாங்கள் சுவைக்கும்
  அமுதம் அய்யா
  💐💐💐💐💐🙏

  மைசூர் இரா.கர்ணன்.

 • Dr.வீ.ரமேஷ்பாபு, சிதம்பரம்

  வணக்கம் இன்று காலை தொடங்கிய கவியரங்க நிகழ்வு இப்பொழுது வரை முடிவில்லா தொடர்கதையாய் மிகவும் சீரோடும் சிறப்போடும் இடைவேளை எதுவுமின்றி நமது பாட்டன் தமிழ்த்தாயின் தலைமகன் பாரதிக்கு கவிதாஞ்சலி நடத்திக் கொண்டிருக்கின்றது.
  யாவும் சிறக்க சங்கத்தமிழ் இலக்கிய பூங்கா ஒருங்கிணைப்புக்குழு நெஞ்சார்ந்த நன்றிகளை வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது

 • மைசூர் இரா.கர்ணன்

  பாவலர்
  மேனகா தேவன் அவர்களே..
  தமிழைக் காதலிக்கின்றேன்..
  உன் கவிதைகளால்.

  அருமை..அருமை
  💐💐💐🙏

  மைசூர் இரா.கர்ணன்

 • மைசூர் இரா.கர்ணன்

  சகோதரி
  பாவலர் ஆனந்தி சுப்பையா அவர்களே…
  உங்களை எண்ணி பெருமை அடைகின்றோம்..
  உங்கள் தமிழாற்றல் அறிந்து வியப்படைகின்றோம்..

  எத்தனை தமிழருமை
  உங்கள் வரிகள்..

  தமிழே..
  வாழ்த்துகின்றோம்
  💐💐🙏🙏🙏🙏
  மைசூர் இரா.கர்ணன்

 • Dr.வீ.ரமேஷ்பாபு, சிதம்பரம்

  யாவும் சிறக்க சங்கத்தமிழ் இலக்கிய பூங்கா ஒருங்கிணைப்புக்குழு நெஞ்சார்ந்த நன்றிகளை வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது

 • மைசூர் இரா.கர்ணன்

  சென்னை
  பாவலர் நடராஜன் பெரு மாள் அவர்களே..
  திருமிகு சிதம்பரம் நகர்
  செல்லும் ஆன்மீக பக்தர்களுக்கு நடராஜர் பெருமாள் தரிசனம் கிடைக்கும் திருப்தியைப் போல எங்களுக்கு உங்கள் கவிதை இனிமைத் தந்து..மகிழ்வையும் தந்தது…

  வாழ்க வளமுடன்
  💐💐💐🙏

  மைசூர் இரா.கர்ணன்

 • Dr.வீ.ரமேஷ்பாபு, சிதம்பரம்

  சங்கத் தமிழ் இலக்கிய பூங்காவின் சிறப்பான நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள்

 • மைசூர் இரா.கர்ணன்

  எங்கள் குழுவின் பெருமை பங்காளிகளில் ஒருவராக நாங்கள் மதிக்கும் பாவலர் பாரீஸ் மோரீஸ் அவர்களே… தேனிசையாக ..கவிதை தந்தீர்கள்..
  சுவைத்தோம்…
  அருமைத் தமிழை..

  வாழ்க..வாழ்க
  💐💐💐🙏
  மைசூர் இரா.கர்ணன்

 • மைசூர் இரா.கர்ணன்

  கவி சொந்தங்களே..
  இத்தனை தமிழமுதம்
  நாம் அடைவதற்கு மூல காரணங்களாக இருக்கும் அத்தனை உள்ளங்களையும் வணங்கி வாழ்த்துவோம்.
  💐💐💐🙏🙏🙏🙏

 • மைசூர் இரா.கர்ணன்

  *அன்னைத் தமிழ் பாரதி*

  கவிதைத் தந்த தங்கை வர்த்தினியே…

  பண்டைத் தமிழின் தலைமைப் பண்பை
  பகன்றது..உன கவிதைகள்..

  அருமை அம்மா
  உம் கவிதை தந்த வரிகள் அனைத்துமே மிகவும் அருமை.
  இனிய குரலால், தெள்ளுத் தமிழ் உரைத்தீர்… வாழ்க

  வாழ்த்துகள்.
  💐💐💐💐🙏
  மைசூர் இரா.கர்ணன்

 • மைசூர் இரா.கர்ணன்

  பெயரே
  கவியரசன்…
  பாவலரே..
  அருமை உம் கவிதை

  விதைத்த விதையெல்லாம்
  விருட்சமானதே..
  👏👏👏👏💐🙏

  மைசூர் இரா.கர்ணன்

 • மைசூர் இரா.கர்ணன்

  தங்கை..
  கவிஞர் பொள்ளாச்சி கோமதி அவர்களே..
  *பாரதி போல வருமா*
  அடுக்டுக்காக பெருமை உரைத்தீர்..
  நாட்டுடமை பாரதி படைப்புக்களே..முதன்மை….அருமை💐🙏
  மைசூர் இரா.கர்ணன்.

 • நீலகண்ட தமிழன்

  இன்றைய நிகழ்ச்சி மிகவும் அருமையாக இருந்து. வாய்ப்புக்கு நன்றி
  வே.உலகம்மாள்

 • மைசூர் இரா.கர்ணன்

  *எத்தனை மகிழ்ச்சி*
  கவியமுதம் பருகப் பருக
  உணவும் வேண்டாம் என்றே ஆகிவிட்டோம்..

  தமிழனாக பெற்றெடுத்த தாயே உனக்கே என் நன்றியெல்லாம் தாயே
  🙏🙏🙏🙏🙏🙏

 • மைசூர் இரா.கர்ணன்

  சங்கத் தமிழ் இலக்கியப் பூங்காவின் சிறந்த பாவலர் பெரு மக்களில் ஒருவரான தங்கை வாசுகியே..
  உம் கவிதை அருமை
  வழங்கிய விதமும்
  சொற்கள் பின்னி வழங்கிய முறையும் சிறப்பு அம்மா
  வாழ்த்துக்கள்
  பாராட்டுகள்
  💐💐💐💐💐🙏

  மைசூர் இரா.கர்ணன்

 • மைசூர் இரா.கர்ணன்

  நம் சங்கத் தமிழ் இலக்கியப் பூங்காவில் பெண் பாவலர்களின் கவிதை படைப்புகள் எண்ணிக்கையில் கூடுவது குழுவுக்கு சிறப்பைக் கூட்டுகின்றது..
  பாவலர் மங்கையற்கரசியின் கவிதை அருமை
  வாழ்த்துக்கள்அம்மா..💐🙏
  மைசூர் இரா.கர்ணன்

 • கா லெனின்

  வணக்கம்
  கா லெனின்

  பாரதி நினைவு நூற்றாண்டு கவிதாஞ்சலி
  நிகழ்வில் அனைவர்க்கும் வணக்கம்

  பாரதி

  பாரதத்தில் எரிந்த சுதந்திர வேள்வி தீ

  எரிமலையாய் வெடிப்பதற்கு
  நூறாண்டு முன்
  மண்ணில் புதை பட்டது

  புதைபட்ட தீ விதைகளாய்
  அங்கங்கே முளைத்து விட்டது
  விருட்சங்களாய் வளர்ந்து விட்டது

  அவை
  தீங்கனிகளாய் பழுத்து விட்டது

  இதோ எங்கள் சங்க தமிழ் இலக்கியப் பூங்காவின் பாரதிகள்
  இவர்கள் சொல்லின் கனல் தீயதை சுடும்
  அன்பை விதைகளாய் நடும்

  எம் வீரதிருமகன்
  பெருமுழக்கம் செய்துவிட்டு

  பேசாது கண்மறைந்தார்

  களிறு கால் பட்டு
  நலிவிழந்தார்

  உறுதி நெஞ்சம் குலையாது

  காலனை காலால் உதைத்தும்

  கானல் நீராய்
  கண்மறைத்தார்

  கான குயில்பாட்டும்
  கண்ணன் இசைப்பாட்டும்
  பாஞ்சாலி காவியமும்
  இயற்கை வளமும்
  மனித நலமும் எழுதி தந்து
  அச்சமில்லை அச்சமில்லை என்றே
  அடிமை தளையை உடைக்க
  உள்ளத்து உறுதி தந்த பெருமையவர்

  அவர் நினைவை துறப்பதில்லை
  சுதந்திர வேள்வியை மறப்பதில்லை
  அக்கினி குஞ்சுகளாய்
  அவதாரம் எடுத்தது பாரதி தான் பாரதி தான்
  பாரதியேதான்
  அவரின்
  நினைவு நாளில் சூளுரைப்போம்
  சுதந்திரத்தை பேணி
  காப்போம் என்று

  கூறி வாய்ப்பளித்த நல்லுள்ளங்களை வாழ்த்தி வணங்கும்

  கா லெனின்
  சென்னை

 • சங்கத் தமிழிலக் கியப்பூங்கா ஆற்றிடும்
  தங்கப் பணியோ நன்று நன்று
  எங்கும் புகழ்மணக்கும் நீலகண்ட
  தமிழன் வாழ்க வையத்தில் பல்லாண்டு
  சிங்கத் தமிழன் பாரதிக்குக் கண்ட
  பொங்கிசை நூற்றாண்டு நினைவு
  நாள்விழா அருமையினும் அருமை அன்றோ!
  இவண்: கெங்கை பாலதா
  சின்னகலையம்புத்தூர்
  பழனி(வழி)

 • மைசூர் இரா.கர்ணன்

  சங்கத் தமிழ் இலக்கியப் பூங்கா.

  பாரதி நூற்றாண்டு விழா கவியரங்கம்.

  மைசூர் இரா.கர்ணன்

  *புதுக்கவிதை நாயகன் பாரதி*

  நெஞ்சையள்ளும்
  பாரதியே..!

  கொஞ்சம் நின்னு
  கேட்பாயோ..

  மஞ்சமதில்
  நானிருக்க

  மனமெல்லாமோ
  உன் நினைப்பே..

  என்னதான்
  மந்திரத்தை

  இங்கு நீ
  செய்தாயப்பா..?

  அத்தனையும்
  உனை வாழ்த்த

  ஆனதுதான்
  எப்படியோ..!

  சாத்திரம்
  பேணுமக்கள்

  சகலரும்
  வெறுக்கின்ற

  அடர்மீசை
  முண்டாசுப் பாரதியே

  அவர்களும்
  விரும்புகின்ற

  பாத்திரமாய்
  ஆனாயே..!

  அதிசயமே
  எங்களுக்கு..

  கடவுளே
  இல்லையென்ற

  கருப்புச்சட்டை
  நாத்திகரும்

  வேண்டாமென்ற
  தெய்வங்களை

  விரும்பி நீ
  வாழ்ந்தாயே..

  அவர்களும்
  வணங்கி நிற்கும்

  அற்புதமாய்
  ஆனாயே…

  எப்படி அய்யா
  இதுவெல்லாம்

  எளிதானது
  உன்னால் மட்டும்..?

  அடக்குமுறை
  ஆண்டபோதே

  அடங்கவில்லை
  உன் வீரம்

  அடிமைத்தனம்
  ஒழித்திடவும்

  அரட்டியதே
  உன் விழிகள்..

  தீர்க்கதரிசியோ
  எட்டய மன்னன்..

  தெரிந்துதான்
  பெயர் வைத்தானோ

  பார்புகழும்
  பாரதி யென்று..

  பாமரனும்
  விரும்புகின்ற

  பாக்கள் தந்த
  பாரதியே

  புதுக்கவிதை
  புதையல் தன்னை

  பூமியெங்கும்
  மலரவைத்த

  புரட்சிக் கவி
  நீ தானே…

  பாரதத்தில்
  உன் படைப்பே

  நாட்டுடமை
  முதலானது..

  தமிழ்க் குலம்
  சிறக்க வைத்த

  தனி சிறப்பே
  எங்கள் பாரதி..

  தலைவணங்கி
  புகழுரைப்போம்

  தரைவாழ்
  நாளனைத்தும்.

  மைசூர் இரா.கர்ணன்.

 • கெங்கை பாலதா (வ.பாலகிஷ்ணன்)

  சங்கத் தமிழிலக்கிய பூங்காவும்
  மங்காப் புகழுடை திசைகள்இணைய
  வானொளியும் பாரதிக்கு நூற்றாண்டு நினைவுநாள் விழா
  கவியரங்கின் கவிதைகளின் வாசிப்புகள் அருமையினும் அருமை! அருந்தினோம் தமிழ்ப்பாலினை ஆவலாய்! வாழ்க திரு.நீலகண்ட தமிழன் வையமிசை
  பல்லாண்டே!

 • மா.வேல்முருகன்

  பாரதி நினைவு நூற்றாண்டு விழா
  கொண்டாட்டம் முன்னிட்டு
  கவியரங்க நிகழ்வு. கவிஞர்களின் கவிதைகள் அத்தனையும் அருமை.
  பாரதியின் வாழ்க்கை சித்தரிப்புகள்
  தற்கால நிலை என அனைத்தையும்
  உள்ளடக்கிய கவிதைகள் அருமை.
  நிகழ்வை தொடர்ந்து வழங்கும் புதிய திசைகள் வானொலி நிலையத்தாருக்கும், இதற்காக
  அரும்பாடுபட்ட ஒருங்கிணைப்பாளர் ஐயா, ஏனைய
  சான்றோர் அனைவருக்கும் நன்றிகள்.

 • N.jalanathan

  பாரதியார் நினைவு நூற்றாண்டு அஞ்சலி
  ———————————–
  வணக்கம்
  தக்கோலம்
  கங்கை மணாளன்
  N.ஜலநாதன்
  உத்திரமேரூர்
  தமிழே அமுதே
  வருவாய் நிறைவாய்
  தருவாய்
  பார்அதிரப் பாடியவன்
  *************************
  பாரதி
  ********
  பார்அதிரப் பாடியவன்
  பாரதி-நம்
  பாரதத்தில்
  பாட்டிசையின் சாரதி
  (பார்……)
  பறக்கின்ற
  இனங்களோடு
  பழகியவன்-
  நலமாய்
  பலவிலங்கி
  னங்களுக்கு
  தோழனவன்
  இறவாத பாடல்கள்
  படைத்தவன்-என்றும்
  இதயத்தில்
  நாட்டுணர்வை
  பதித்தவன்
  (பார்……)
  ஒற்றுமையின்
  உயர்வுதனை
  உணர்த்தியவன்-தன்
  உயிர் மூச்சாய்
  தேசத்தை
  எண்ணியவன்
  பொற்பதமாய்
  மனந்தன்னில்
  இருப்பவன்-நல்
  புகழ்தரும்
  மனிதத்தை
  வளர்த்தவன்
  (பார்…….)
  பாரதம் காப்போம்
  ********************
  (எழுசீர் விருத்தம்)
  தனியொரு
  வனுக்குணவில்
  லையென்றால்
  தரணியினை
  அழித்திடுவோம்
  என்று ரைத்த
  இனிய தமிழ்ப்
  புலவனினி
  தோன்றுவானா
  இதயத்தில்
  துணிவின்றிக்
  கிடந்த பேரின்
  மனித சக்தி
  தனைஉணர்த்த
  சங்கொலித்த
  மாகவிதான்
  மண்ணிலினி
  தோன்று வானா
  குனிந்தநிலை
  மாற்றுதற்குப்
  பாடுபட்ட
  குஞ்சரமாம்
  பாரதியைப்
  போற்று வோமே
  நீராமை
  நிலத்தாமை
  போலவாழ்ந்தால்
  நிலையாமை
  விளையாமை
  நாமிங் காவோம்
  பேராண்மை
  நல்வாய்மை
  தூய்மையற்றால்
  பெருந்தன்மை
  வளமைபல
  நன்றே காண்போம்
  வாராத
  துன்பமெல்லாம்
  வந்துற்ற போதும்
  வகையான
  ஒற்றுமையால்
  வெற்றிக் கொள்வோம்
  காராகக்
  கவி பாடும்
  தொண்டினாலே
  காசினியை
  வளர்த்திடுவோம்
  காலந் தோறும்

  :-தக்கோலம்
  கங்கை மணாளன்
  N.ஜலநாதன்
  உத்திரமேரூர்
  நன்றி

 • R. விஜயா

  சங்க தமிழ் இலக்கிய பூங்காவின் பாரதியார் நூற்றாண்டு
  நினைவு
  பாவரங்கில்
  பாரதியை பாட வந்துளேன்.
  இரா. விஜயா
  மயிலாடுதுறை

  பாவலர்கள்
  பலர்கூடி

  பாரதியை
  பக்தியுடன்

  பா ரதத்தில்
  அமர்த்தி

  பாரதத்தில்
  உலா வரும் விழா !

  பண் இசைத்து மண் அசைக்கும்

  விண் அதிரும்
  கண் பனிக்கும். !

  எட்டயபுரத்து ஏந்தல் !

  ஏட்டைபுரட்டிய
  காந்தள் !

  நூற்றாண்டு நினைவேந்தல் !

  பாராண்ட
  பா பந்தல் !

  தமிழால் தரணி ஆண்ட
  தங்கத்தமிழன் பாரதி !

  சுட்டெரிக்கும் சொல்லாலே ஆனான்

  சுதந்திர
  தேவியின்
  சாரதி !

  சிறுவயதிலே
  சீர் கண்டாய் !

  வறுமைக்கு வறுமை அளித்தாய் !

  சாதிக்கொடுமைக்கு
  சங்க நாதமே !

  பெண்விடுதலைக்கு
  உங்க கீதமே !

  பாப்பாவுக்கு பாடம் உன்
  பாட்டிலே !

  பறவைகளுக்கு
  இசை உன்
  சோலையிலே !

  கண்ணனை பாடிய
  வண்ணமே !

  கண்ணம்மா
  பாடிய
  திண்ணமே !

  சக்தி
  வணங்கிய
  சரித்திரமே !

  சாகசம்
  படைத்த
  வரித் திறமே !

  காணிநிலம்
  வேண்டிய
  காளமேகமே !

  வீரம்
  விதைத்த
  வேங்கையே !

  விவேகம்
  விரவிய
  வேந்தனே !

  சுதந்திர தீ
  சுடரவிட்ட
  சூரியனே !

  சிந்து நதியில்
  சிந்தை மகிழ்ந்தவனே !

  வெள்ளி
  பனிமலை
  பண்ணிசைத்த
  பாவலனே !

  குயில் பாட்டு
  பாடிய
  கவிக்குயிலே !

  அச்சம் இல்லை
  உன் காட்டில்

  உச்சம் அது
  உன்பாட்டில்

  துச்சம் அது
  உன் ஏட்டில்

  மிச்சம் அது
  உன் நாட்டில் !

  புதுமை பெண்
  போற்றிய
  பதுமையே !

  எங்கள் பாரதியே
  என்றும் எம்முடன்
  எங்கும் மணப்பாய்
  உன்
  பாக்களாலே !

  வாழ்க வளர்க உன்புகழ் !

  நன்றி.

  இரா.விஜயா
  மயிலாடுதுறை

 • மைசூர் இரா.கர்ணன்

  நம்.சங்கத் தமிழ் இலக்கியப் பூங்காவில் பயணிக்கும் கவிஞர் பெருமக்களே… என்னைப் போன்ற மூத்த வயதினர்கள் இளம் வயதினராக இருந்த போது திறமைகளை வெளிப்படுத்தக் கூடிய வாய்ப்புகள் அன்று மிகக் குறைவு…

  ஆனால்.. இன்று

  எத்தனை வாய்ப்புகள்..
  இன்று திரு.தமிழன் அய்யா செய்து வருகின்ற,,அவருடன் இணைந்து பணியாற்றுகின்ற நல்ல உள்ளங்கள் செய்து வருகின்ற சிறந்த சேவைகளினால்.
  நாட்டின் ,,,உலகத்தின் எங்கோ ஒரு மூலையில் இருக்கும்.. வெவ்வேறு இடங்களில், நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் ஒரே புலனத்தில் ஒன்று கூடி, கூடவைக்கப்பட்டு
  எவ்வளபவு பெரிய விழாவை நடத்திக் கொண்டிருக்கின்றோம்.

  நினைத்துப் பார்க்க எவ்வளவு வியப்பாக இருக்கின்றது.

  தன் நேரத்தை
  தன் சுயதேவைகளை
  தன் தூக்கத்தை

  தியாகம் செய்கின்ற சில நல்ல உள்ளங்களால் மட்டுமே இது சாத்தியம் ஆகின்றது…

  அந்த நல்ல
  தியாகங்கள்
  உள்ளங்கள்
  நீடூழிவாழ

  நாம் எல்லோரும்
  இறை வணங்கி,நன்றியுடன் அவர்களுக்கு
  துணை நிற்போம்.
  🙏🙏🙏🙏🙏🙏

  மைசூர் இரா.கர்ணன்

 • மைசூர் இரா.கர்ணன்

  எல்லா… பாவலர்களின் கவிதைகளுக்கும் பின்னூட்டம் வழங்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தும்… தவிர்க்க முடியாத சூழல்களால் இயலாமல் ஆகிவிட்டது. கவிபடைத்த பாவலர் அனைவர்க்கும் வாழ்த்துக்கள்.💐🙏

  மைசூர் இரா.கர்ணன்.

 • நீலகண்ட தமிழன்

  திசைகள் வானொலி இயக்குனர் ஐயா
  தமிழ்வணக்கம்

  தற்சமயம் பாரதியார் கவிதாஞ்சலி நிகழ்ச்சி திசைகள் வானொலியில் மிகச் சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது
  அருமையான பாடலகளுக்கு இடையில் கவிதைகள்

  கவிஞர்களின் உற்சாகம்

  பாரதி இருந்திருந்தால் உங்களை கட்டித்தழுவி முத்தமிட்டு இருப்பான்

  உங்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி

  இந்த நிகழ்ச்சியை முக்கியமான பலர கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதால் இது மிக மிக முக்கியமான நிகழ்ச்சி என்ற அந்தஸ்தை பெற்றுவிட்டது.

  அதில் ஒருவர்
  காலையிலிருந்து பாரதியாரின் பெயர்ச்த்தியும் பாரதியின் மகள் சகுந்தலா அவர்களின் மகளுமான திருமதி மீனாட்சி பாரதி அவர்கள் இந்த நிகழ்ச்சியை இடைவிடாமல் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறார்

  இதுவரை மூன்று முறை எனக்கு பதிவு போட்டிருக்கிறார்

  தங்களுக்கு இதை தெரிவிக்க வேண்டும் என்று தோன்றியது அதனால் தெரிவிததேன்

  மிக்க நன்றிகள் மகிழ்ச்சிகள்

 • தனலட்சுமி பரமசிவம்

  சங்கத் தமிழ் இலக்கியப் பூங்கா நடத்தும்

  பாரதியார் நினைவு நூற்றாண்டு விழா கவியரங்கில்
  பங்கேற்கும் கவிஉறவுகள் அனைவர்க்கும் வணக்கம்
  கூறுவது

  தனலட்சுமி பரமசிவம்
  திருப்பதிசாரம்

  இன்று நான் எடுத்து கொண்ட தலைப்பு

  பாரதி போல் யாங்கணுமே கண்டதில்லை

  தனியொருவனுக்கு உணவு இல்லையெனில்
  உலகை அழித்திட பொங்கிய மீசைக்காரனே!
  துயில் கொண்ட மக்கள் மனதுள்
  புயலாய் கிளப்பினாயே விடுதலை வேட்கையை!

  அடங்கி நலிந்த அடிமைக் காலத்தில்
  முடங்கி கிடந்த மக்கள் மனதை
  தட்டி எழுப்பினாயே எழுச்சி மிகுந்த
  உன் பாட்டின் புரட்சி வரிகளால்!

  விடுதலைக்குத் தடைபோட்ட ஆங்கிலேயரையும்
  தொடை நடுங்கி பதறச் செய்து,
  சொல்லி சென்றவர் மத்தியில்
  சொல்லியதைச் செய்துக்காட்டினாயே பாரதி!

  மாதரை இழிவுச் செய்யும் மடமை கொளுத்திடவும்,
  ஆணும் பெண்ணும் சமமாய் கருதிடவும்,
  பாட்டின் எழுச்சி வரிகளில்
  சாட்டையடிக் கொடுத்தாயே சமூகத்திற்கு!

  பல்லுயிர் காத்து மனிதம் வளர்த்திட
  காக்கைக் குருவி எங்கள் சாதி என்றாயே!
  சுதந்திரம் கிடைக்கும் முன்னே
  சுதந்திரம் கிடைத்ததாக பள்ளுப்பாடினாயே பாரதி!

  அறிந்த மொழிகளில் தாய்த்தமிழின் இனிமையைப்
  பாருலகமும் அறிய செய்த பன்மொழி வித்தகனே!

  தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவவும்
  திறமான புலமையெனில் வெளிநாட்டவரும்
  வணங்கிட செய்தல் வேண்டுமென
  தோள்தட்டி உரைத்து, குருதி சூடேற்றினாயே!

  வெள்ளத்தின் பெருக்கைப்போல்
  கலைப்பெருக்கும் கவிப்பெருக்கும் மேவிட
  தெள்ளுதமிழமுதின் சுவைகாண
  பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
  விழிபெற்றுப் பதவி கொள்வாரென பாடிய
  பாட்டுக்கோர் பாரதி போல் யாங்கணுமே கண்டதில்லை!

  வாய்ப்பளித்த திசைகள் வானொலி நிர்வாகிகளுக்கும் சங்கத் தமிழ் இலக்கியப் பூங்கா ஒருங்கிணைப்பாளர் நீலகண்ட தமிழன் ஐயா அவர்களுக்கும்
  நன்றி கூறி விடை பெறுவது

  தனலட்சுமி பரமசிவம்
  திருப்பதிசாரம்
  குமரி மண்டல ஒருங்கிணைப்பாளர்
  சங்கத் தமிழ் இலக்கியப் பூங்கா

  நன்றி வணக்கம்.

 • மைசூர் இரா.கர்ணன்

  நம்மையெல்லாம்
  சிறந்த ஆற்றல் உள்ளவர்களாக ஆக்கும் அரும்பணியை
  செய்துவரும் சங்கத் தமிழ் இலக்கியப் பூங்கா ஒருங்கிணைப்பாளர் தமிழ்த்திரு.தமிழன் அய்யா அவர்களுக்கும்..
  நிர்வாகிகளுக்கும், திசைகள் வானொலிக்கும் இதயபூர்வமான வாழ்த்துக்களையும்,
  நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.💐🙏

  மைசூர் இரா.கர்ணன்.
  கருநாடக மாநில பொறுப்பாளர்,
  சங்கத் தமிழ் இலக்கியப் பூங்கா.

 • N.jalanathan

  தமிழ்க் கவிதையால் தேசபக்திக் கனலைக் கொழுந்துவிட்டெரியச் செய்த மகாகவி சுப்ரமணிய பாரதியின் நினைவு நாள் இன்று – செப்டம்பர் 11
  ‘சிதையா நெஞ்சு கொள்’ எனும் சூத்திரமே பாரதியின் வாழ்க்கை நமக்கு வழங்கும் பாடம். வறுமையும் வெறுமையும் விடாது துரத்திய போதும் அஞ்சாமல் அக்கினிக்குஞ்சாய் வீறுகொண்டு எழுந்த மாகவிஞர் மகாகவி பாரதியார்.
  பதினாறு வயதிற்குள் பாரதியைப் போல் வாழ்க்கைப் புயலை எதிர்கொண்டவர் யாரும் இருக்க முடியாது. வறுமை எனும் உளியால் செதுக்கப் பட்ட கலைச் சிற்பம் பாரதியார். நெருப்பாற்றில் நீந்திக்கொண்டும் அவரால் அழகியல் கவிதைகளைத் தரமுடிந்தது.
  சிறு துன்பங்களுக்கும் விதியை
  நொந்துகொள்கிற நமக்கு மகா கவி பாரதியின் வாழ்க்கை கற்றுத்தரும் பாடம் ‘குன்றென நிமிர்ந்து நில்’ என்பதுதான்.
  நினைவு கூர்வோம் இந்தப் பெருங்கவிஞனை

 • N.jalanathan

  தமிழ்க் கவிதையால் தேசபக்திக் கனலைக் கொழுந்துவிட்டெரியச் செய்த மகாகவி சுப்ரமணிய பாரதியின் நினை beவு நாள் இன்று – செப்டம்பர் 11
  ‘சிதையா நெஞ்சு கொள்’ எனும் சூத்திரமே பாரதியின் வாழ்க்கை நமக்கு வழங்கும் பாடம். வறுமையும் வெறுமையும் விடாது துரத்திய போதும் அஞ்சாமல் அக்கினிக்குஞ்சாய் வீறுகொண்டு எழுந்த மாகவிஞர் மகாகவி பாரதியார்.
  பதினாறு வயதிற்குள் பாரதியைப் போல் வாழ்க்கைப் புயலை எதிர்கொண்டவர் யாரும் இருக்க முடியாது. வறுமை எனும் உளியால் செதுக்கப் பட்ட கலைச் சிற்பம் பாரதியார். நெருப்பாற்றில் நீந்திக்கொண்டும் அவரால் அழகியல் கவிதைகளைத் தரமுடிந்தது.
  சிறு துன்பங்களுக்கும் விதியை
  நொந்துகொள்கிற நமக்கு மகா கவி பாரதியின் வாழ்க்கை கற்றுத்தரும் பாடம் ‘குன்றென நிமிர்ந்து நில்’ என்பதுதான்.
  நினைவு கூர்வோம் இந்தப் பெருங்கவிஞனை

  அன்புடன்
  தக்கோலம் கங்கை மணாளன்
  N.ஜலநாதன்
  உத்திரமேரூர்

 • இரா.இராஜம் நன்னிலம்

  மகாகவி பாரதி நினைவு கவிதாஞ்சலியை நூற்றுக்கும் மேற்பட்ட கவிஞர் பெருமக்களைக் கொண்டு,வியத்தகு வகையில் பார் முழுதும் பறைசாற்றிய சங்கத் தமிழிலக்கியப் பூங்கா ஒருங்கிணைப்பானர் ஐயா அவர்களுக்கும்,ஆக்கத்திற்கு துணை புரிந்த இணை ஒருங்கிணைப்பாளர்களுக்கும்,மாவட்ட பொறுப்பாளர்களுக்கும்,திக்கெட்டும் ஒலி பரப்பிய திசைகள் வானொலி நிலையத்தாருக்கும்
  மனம் நிறைந்த நன்றிகள்.கவிதைகள் அனைத்துமே நல்முத்துக்களாய் ஒளிர்ந்தன.பங்கேற்று பாரதிக்கு பாமாலை சூட்டிய அனைத்து கவி சொந்தங்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

 • N.jalanathan

  பாரதியார் நினைவு நூற்றாண்டு அஞ்சலி
  அன்புடையீர்
  வணக்கம்
  ஒருங்கிணைப்பாளர்
  உள்பட அனைவரின் ஒத்துழைப்பால் செம்மாந்து சிறப்பாக வீறு நடை போடுகிறது
  அனைவருக்கும் எஞ்ஞான்றும் நன்றி கடப்பாடுடையேன்
  🙏💐🙏🌹🙏💐🌹🙏
  அன்புடன்
  தக்கோலம்
  கங்கை மணாளன்
  N.ஜலநாதன்
  உத்திரமேரூர்

  • வெ. வசந்தி

   பாரதியின் நூற்றாண்டு நினைவு நிகழ்வில் பங்கேற்க வாய்ப்பளித்த சங்கத் தமிழிலக்கியப் பூங்கா ஒருங்கிணைப்பாளர் மதிப்பிற்குரிய ஐயா கவிஞர் நீலகண்ட தமிழன் அவர்களுக்கும் திசைகள் வானொலிக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை உரிதாக்குகிறேன்.

   நிகழ்ச்சியின் போது அயராமல் பின்னூட்டம் வழங்கி மகிழ்வூட்டிய கவிஞர் பெருமக்களுக்கும் நன்றிகள் பல கோடி.

   நூற்றாண்டு விழாவில்
   நூற்றுக்கணக்கான கவிஞர்கள் பங்கேற்று சிறப்பித்ததே மாபெரும் வெற்றி நம் சங்கத் தமிழிலக்கியப் பூங்காவின் குடும்பத்திற்கு…

   அனைவருக்கும் வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்

 • கவிஞர்இரா.விஜயஸ்ரீ பாபு

  சங்கத் தமிழ் இலக்கியப் பூங்கா

  பாரதியார் நூற்றாண்டுவிழா கவிதை

  பாருக்கே அதிபதி
  எங்கள் பாரதி

  எட்டையபுரம் ஈன்றெடுத்த
  எளிமையின் சிகரமே

  அடிமைவாழ்வு அகற்ற
  அயராமல் உழைத்தவரே

  விடுதலைக்கு வித்திட்ட
  வீரக்கவியே

  தேனினும் இனிய கவிகளால்
  தேசப்பற்றை விதைத்தவரே

  எழுச்சிமிக்க கவிகளால்
  ஏற்றம் காண வைத்தவரே

  அந்நிய சக்திகளை ஒழிக்க
  அச்சமின்றிப் பாடிய பாவலரே

  சாதிக் கொடுமை ஒழிய
  சளைக்காமல் போராடியவரே

  பாட்டுக்கொரு புலவனாய்
  பாரினில் வலம் வந்தவரே

  அடுப்பூதும் பெண்களுக்குப்
  படிப்பளிக்கப் பாடுபட்டவரே

  ஆணுக்குப் பெண்
  இளைப்பில்லை எனப்
  பெண் உரிமை உணர்த்தியவரே

  பன்மொழிப் புலமை பாவலரே
  பல கலை பயின்ற வித்தகரே

  தமிழின் இனிமையை
  உலகறியச்செய்தவரே

  உயிர்களை நேசித்த உத்தமரே
  உரிமைக்குரல் கொடுத்த வித்தகரே

  நீ சில காலம் வாழ்ந்தாலும்
  உன் கவிதைகளால்
  நூற்றாண்டு கடந்தும் வாழ்கிறாய்
  எம்மை வாழ வைக்கிறாய்

  பெண்மை போற்றிய பாரதியே
  உம்மால் கல்வி பெற்று
  சிறந்தோம் யாம் இன்று

  உன் கனவை நனவாக்க
  என்றும் உன் பிள்ளைகளாய்
  நாங்கள்

  தமிழும் பாரதியும்
  வேறல்ல ஒன்றே

  தமிழன்னையின் தவப்புதல்வனாம்
  பாரதிக்குப் பாமாலை
  சூட்டுவதில் மட்டற்ற மகிழ்ச்சி

  வாழ்க தமிழ்
  வாழ்க பாரதி புகழ்

  இரா.விஜயஸ்ரீ பாபு
  தமிழாசிரியை
  சென்னை

 • முனைவர் கா.காமாட்சி

  மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவாஞ்சலி விழாவில் உலக நாடுகளில் உள்ள அனைவரும் கலந்து கொள்ளும் விதத்தில் ஒருங்கிணைப்பு செய்த ஐயாவிற்கு எனது சிரம் தாழ்ந்த பணிவான வணக்கங்களும், வாழ்த்துகளும். மிக்க நன்றி. வாழ்க உமது புகழ்! வளர்க உமது தொண்டு!

 • சொ.கோட்டீஸ்வரன்.

  சங்கத் தமிழ் இலக்கியப் பூங்கா.

  பாரதியார் நூற்றாண்டு நினைவு விழா கவிதை.

  தலைப்பு: பாரதி பார்த்துக் கொண்டிருக்கிறார்.

  என் முதல் குழப்பம்.

  சாதிகள் இல்லையடி பாப்பா.
  சொல்லி தந்த தமிழாசிரியர் வீட்டு வாசல் பதாகையில் பெயருக்கு பின் சாதி.

  கேட்டும் விட்டேன்.
  ஐயாவின் முகம் இருண்டது.
  அவரின் அப்பா ஒரு சாதி கட்சி தலைவர் என்றார்.

  முடிவாய் மறுநாள் நாளிதழில் அவர் அப்பா கட்சி விட்டு விலகியதாக செய்தி.

  அனைவரும் என்னை தூற்றினார்கள்.

  ஐயாவின் காலடி பற்றி கதறினேன்.

  நான் செய்ய முடியாததை பாரதி உன் சொல் மூலம் செய்ததாய் வாரி அணைத்துக் கொண்டார்.

  சாதிகள் இல்லையடி பாப்பா.

  அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் – அதை
  அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
  வெந்து தணிந்தது காடு; தழல்
  வீரத்தில் குஞ்சென்னும் மூப்பென்றும் உண்டோ?
  தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்.

  சொ.கோட்டீஸ்வரன்.
  சென்னை 15.

 • SRIDEVI.V.L

  வெ.லோ.ஸ்ரீதேவி கோயம்பேடு- சென்னை.

  பாக்களால் பரவசமூட்டும் பாரதியே!-
  உன்
  பாக்கள் என்றும் ரதியே!
  பாரதியே! நீ தீர்க்கதரிசி, ஆம்!
  ஆனந்த சுதந்திரம்
  அடைந்து விட்டோம்
  என்றாய்;
  சேதுவை மேடுறுத்தி
  வீதி சமைப்போம்
  என்றாய்;
  வங்கத்தில் ஓடிவரும்
  நீரின் மிகையால்
  மையத்து நாடுகளில்
  பயிர் செய்குவோம்
  என்றாய்;
  காசி நகர் புலவர்
  பேசும் முறை தான்
  காஞ்சியில் கேட்பதற்கோர்
  கருவி செய்வோம்
  என்றாய்;
  சந்திர மண்டலத்தியல்
  கண்டு தெளிவோம்
  என்றாய்;
  எட்டும் அறிவினில்
  ஆணுக்கிங்கே பெண்
  இளைப்பில்லை காண்
  என்றாய்;
  கற்பினை பொதுவில் வைப்போம்
  என்றாய்;
  நம்முள் சண்டை செய்தாலும் சகோதரர் அன்றோ!
  என்றாய்;
  தேமதுரத் தமிழோசை உலகெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும் என்றாய்;
  இன்னும்
  எத்தனையெத்தனை உன் பாக்கள்!
  என்னே, வியப்பு!
  உன் சிந்தனைக்கும் எழுத்துக்கும்
  வலிமையோ வலிமை.
  உன் பாக்களுக்கு
  உயிருண்டு, பாரதி!
  -ஆம்
  சாகாவரம் வேண்டும் என்றாயே!
  உன் பாக்களால்
  இன்றும்- என்றும்
  உயிரோடு வாழ்கின்றாய்!
  நீ பாடியவை எல்லாம்
  நிஜமாய் நிகழ்ந்தன.
  நற்றமிழ் புலவர்களை எல்லாம் உன் நா
  பாடி மகிழ்ந்தது.
  இன்று- நாங்கள்
  பா மலரைத் தொடுத்து
  பாமாலையாய்
  தீர்க்கதரிசியாம்
  பாரதி
  நினக்கு
  சூட்டி
  நன்றி பாராட்டி
  வணங்குகிறோம். ஏற்பாயாக!
  என் பா ரதியே!🙏🙏🙏.

 • மைசூர் இரா.கர்ணன்

  சங்கத்தமிழ் இலக்கியப் பூங்கா. 
  பாரதியார் நூற்றாண்டு விழாக் கவியாஞ்சலி
  கவிஞர்: திருமதி.  ஜோதி பெருமாள், புதுதில்லி 
  தலைப்பு: *மீண்டும் பிறந்து வா பாரதி*

  எட்டயபுரத்தில் உதித்த பாட்டுக் கனலே !
  எம் இதயத்தை நனைக்கும் பாட்டுப் புனலே 
  கொட்டும் அருவியாய் 
  கொட்டி வைத்த நட்சத்திரமாய் 
  எமக்குத் தந்தாய் எண்ணற்ற கவிதைகளை

  பேனா முனையால் 
  விடுதலை வேட்கையைத்  தந்தாய்
  மக்கள் மனங்களில் 
  விடுதலை வேள்வியை வளர்த்தாய் 

  வீரமுழக்கமெனும் விழிப்புணர்வால்
  அடிமைத்துயிலுக்கு விடுதலை தந்தாய் 
  இடியென இறங்கி வெடிச்சரமானாய் 

  வாடியிருந்த பயிருக்கு வான்மழை பொழிவதுபோல் 
  கோடிமக்கள் மனங்களின் சோர்வினையகற்றி
   நாடிநரம்புகளில்
  துடிப்பினை ஊற்றெடுக்க வைத்தாய் 
  காட்டுத் தீயாய் பரவவைத்தாய் நாட்டுப்பற்றினை 
  ஆங்கிலேயரின் அடிமைக் கடலைத்தாண்டிட
  ஒற்றுமைத் தோணியில் மக்களை ஏற்றினாய் 

  உன் பாட்டால் நாட்டுக்கு மட்டுமா விடுதலை ?
  ஓட்டுக்குள் ஒடுங்கியிருக்கும் நத்தைகளாய் 
  வீட்டுக்குள் முடங்கியிருந்த பெண்களுக்குமல்லவா விடுதலை 

  பட்டங்களை ஆளச்சொன்னாய் 
  பாரினில் அவரை சாதிக்க   வைத்தாய் 
  குன்றென நிமிரச் செய்தாய்
  கொடுமையை எதிர்க்க வைத்தாய்
  தையலை உயரச்செய்து 
  வையத்தில் வாழ்வாங்கு வாழச்செய்தாய் 

  சாதிகளை மறுத்து மதங்களை வெறுத்து
  காக்கை குருவியையும் 
  உன்னோடு இணைத்துக் கொண்டாய்

  வறுமையில் வாழ்ந்தாலும்-உன் பாட்டால் 
  நாட்டையே சொந்தமாக்கிக் கொண்டாய் 
  ஆனால் பாரதியே …
  நீ கர்ப்பம் தாங்கிய சுதந்திரக்குழந்தை
  மண்ணைத்தொடும்முன் மரித்துவிட்டாயே!

  நீ இயற்றாத பாவேது?
  உன் பாவினைச் சொல்லாத நாவேது?
  உனது பாடல் நுழையாத செவியேது?
  தனது கவிதைகளில் உனைத்தொடாத கவியேது?
  பூக்களைச் சுற்றிவரும் வரும் வண்டுகளாய்
  உனது பாக்களில் பங்குபெற 
  வார்த்தைகள் தவம் கிடந்தன 
  உனது கற்பனை வனத்தினில் 
  அழகும் வீரமும் நளினமாய் நடந்தன

  தமிழன்னையின் தவப்புதல்வன் நீ
  தமிழரின் மாற்றமுடியாத முகவரி நீ

  மீண்டும் பிறந்து வா பாரதி!
  அழியாத பாக்களை மீண்டும் படைத்திட 
  மானுட சமூகத்தின் மீதியிருக்கும்
  அழிக்கவியலாத தடைகளை உடைத்திட!!!

  —–கவிஞர் ஜோதி பெருமாள், புதுதில்லி 

 • SRIDEVI.V.L

  சங்கத் தமிழ் இலக்கிய பூங்கா ,இன்றைய பாரதியின் நூற்றாண்டு நினைவு விழாவை மிக சிறப்பாக அரங்கேற்றியது. திரு. நீலகண்ட ஐயா அவர்களும் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் கவிதை மழை பொழிந்த, கானமழை பொழிந்த திருமதி. விஜயா அம்மா அவர்களையும் மிகவும் பாராட்டி வாழ்த்தி நன்றி கூறி வணங்குகின்றோம். உங்கள் முயற்சியில்- அயராத உழைப்பும் ஆர்வமும் இல்லாவிடில் எங்களைப் போன்றோர் இந்நிகழ்ச்சியில் நிச்சயம் பங்கேற்று இருக்க இயலாது. குறிப்பாக ஆசிரியை என்ற முறையில் மாணவச் செல்வங்கள் கவிதை வழங்கியமைக்கு, என் மனமார்ந்த பாராட்டுகள். ஐயா அவர்களின் தமிழ்ப்பணி தொடரட்டும் .தேமதுரத் தமிழோசை உலகெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும் என்ற பாரதியின் கனவு இந்த நூற்றாண்டின் நினைவு விழாவில் சிறப்பாக அரங்கேறியது. நன்றி!👏👏🤝🤝🙏🙏

 • கிருஷ்ணா கணேஷ்

  வணக்கம் ,ஈரோட்டிலிருந்து கவிஞர். கிருஷ்ணா கணேஷ் .
  சங்கத் தமிழ் இலக்கியப் பூங்கா நடத்திக்கொண்டிருக்கும் மகாகவிபாரதியாரின் நூற்றாண்டு நினைவாஞ்சலி தினத்தில் அவரிடம் கவிதை யாசிக்க வந்திருக்கிறேன். *தலைப்பு – மீண்டும் வா பாரதி*
  *************************

  எட்டையாபுரம் ஈன்றெடுத்த பெருங்கவியே
  பதினோராம் அகவையிலேயே நீ பெற்றுவிட்டாய் பட்டம் அது *பாரதியே*

  என் காதல் கவிதைகளெலாம் என்மனைவிக்கு மட்டுமே என கண்ணம்மா வழி காதலித்த செல்லம்மாவின் காதலனே

  உரைநடைக்கு உயிர்கொடுத்து உலகமெல்லாம் புதுக்கவிதைத் தேர் ஓட்டிய தெள்ளுதமிழ் சாரதியே
  உயிர்த்தெழுந்து மீண்டும் எங்கள் கவி கேட்க வந்திடு பாரதியே

  கவிதைக்குள் கனல் தைத்து சுதந்திரத் தீ மூட்டிய அக்னிக் குஞ்சே
  தொலைந்து கொண்டிருக்கும் சுதந்திரத்தை மீட்டெடுக்க மீண்டும் வா நெஞ்சே

  பெற்றுவிட்டோம் பெண்கள் சுதந்திர மென ஆனந்தக் கும்மி கொட்டியவனே
  பெண் குட்டிக் குழந்தையும் தெருவினில் தனித்து நடந்திட பயமாய் இருக்குதையோ

  சாதிகள் இல்லையடி பாப்பாவென கவி சாட்டையால் சாதிப்பேய் ஓட்டிய சங்கத்தமிழவனே
  சாலைகள் தோறும் சங்கக் கடைகள் வைத்து சாதிகள் விற்பதைப் பார்

  பஞ்சமும் வஞ்சமும் கொலையும் கொள்ளையும்
  நிறைந்திடுதிங்கே நெஞ்சம் அன்புடை நிறை மாந்தர் படைத்திட வந்திடு பாரதியே

  நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மாந்தரைக் காண்கையிலே என்ற நெறியாளனே
  நீ இன்று இருந்திருந்தால் நெஞ்சு பிளந்திருப்பாய் நெறிகெட்ட மாக்களைக் கொன்று குவித்திருப்பாய்

  பார் அதிர்ந்திட பாக்கள் படைத்திட்ட பாரினில் உயர் கவியே
  பார் உன் விழியது தீயே உன் தீ விழியால் பா மூட்டி தீவினை அழித்திட வந்திடு பாரதியே
  மீண்டு வந்திடு பாரதியே மீண்டும் வந்திடு பாரதியே .
  **************************
  நன்றி

  கவிஞர்.கிருஷ்ணா கணேஷ் – ஈரோடு

 • கிருஷ்ணா கணேஷ்

  அனைவருக்கும் வணக்கம் அனைத்து கவிஞர்களையும் ஊக்குவித்து மாபெரும் சாதனை நிகழ்த்துவதற்கு காரணமான ஐயா நீலகண்டன் அவர்களுக்கும் அவருக்கு தோள் கொடுத்து அனைவருக்கும் என் நன்றிகள் உரித்தாகட்டும்.நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து கவிகளின் கவிதைகளும் இடியாய், மின்னலாய், சாரலாய், மழையாய் நம்மை நனைத்தது .இன்னும் இது போல் பல சாதனைகள் நிகழ்த்த வாழ்த்துக்கள் ஐயா.

 • முனைவர் கா.காமாட்சி

  [9/10, 12:41 AM] Kamatchi1976@gmail.com: கலைமகளின் ஆசிபெற்று தீந்தமிழில் கவிபடைத்த தமிழ்க்கவிஞன்! சிறு அகவையில் சீட்டுக்கவியெழுதிய சீர்மைமிகு எழுத்தாளன்! உலகமே கண்டு வாயார வியந்து போற்றும் உத்தம புத்திரன்! காக்கை குருவி எங்கள் ஜாதியென்றுரைத்த அன்பு நெறியாளன்! குலமரபிற்கு மாறுபட்டு பூநூலை அறுத்தெறிந்திட்ட புதுமை விரும்பி இவன்! பாரத தேசத்தைப் பண்படுத்த எண்ணிய பரிவுமிக்க பண்பாட்டாளன்! வீரசுதந்திரத்தை வீறுடன் விரும்பிய சுதந்திரப் போராளி! அடிமைத் தனத்திற்கு வெறுப்பு மூட்டிய விடுதலை வீரன்! தெய்வ பக்தியில் தேச பக்தியை ஏற்றிய முறுக்கு மீசைக்காரன்! இயற்கை காட்சியைக் கண்ணாரக் கண்டு இன்புற்ற இனியனவன்!படைத்த பல படைப்பினிலே இலக்கியத் தாக்கத்தை விதைத்திட்ட வித்தாரக் கவி! பெண் விடுதலையைப் பேணிக் காத்திட்ட பேராண்மை கொண்ட பெண்ணியவாதி! ஆணுக்கு நிகர் பெண்ணிங்கு இளைப்பில்லையென முழக்கமிட்ட புரட்சியாளன்! புதிய கல்விக் கொள்கைக்கு வித்திட்ட அறிவுமிக்க ஆளுமையாளன்! முன்னோர் மொழிபொருளை அனுதினமும் பொன்னேபோல் போற்றிய பேரறிவாளன்! கற்றோர்க்குக் கற்பித்தலினும் கல்லாதார்க்கும் கற்பித்த கட்டுரையாளன்! சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து, சொன்னபடி வாழ்ந்திட்ட சொற்பொழிவாளன்! அறமொன்றே மெய்யின்பம் நல்குமென்று நற்செயல்களையே நித்தமும் நாடியவன்!தன்னைப் பித்தனென்று இழித்துரைத்தோரைப் பொருட்படுத்தாத சீர்திருத்தவாதி திண்ணைப் பேச்சினையும், வேடிக்கைப் பேச்சினையும் புறந்தள்ளிய புதுமைப்பித்தன்! வள்ளுவனுக்கும், கம்பனுக்கும் விழாவெடுக்க முனைந்து செயலாற்றிய செயல்வீரன் ! பகவத்கீதையைத் தமிழ் மொழியினில் பெயர்த்திட்ட மொழிபெயர்ப்பாளன்! ஆண்பெண் பாகுபாடின்றி இதழ் நடாத்திய பண்பட்ட பத்திரிக்கையாளன்! மொத்தத்தில் தீர்க்கதரிசி என்றும் இவனே – என் சித்தத்தில் என்றும் தோழன் இவனே!
  [9/10, 12:58 AM] Kamatchi1976@gmail.com: நாட்டு மக்களின் நெஞ்சங்களில் நீங்காது நிலைத்திட்ட வித்தகன்! தமிழ் இலக்கியச் சுனையில் ஆழக்குளித்து முத்துக்களைக் கண்டெடுத்த உழைப்பாளன்! அகரம் முதலாய் னகர இறுவாய் நீதிக் கருத்துக்களை நிலைநாட்டிய நீதியாளன்! அடிப்படை ஒழுக்கவிதிகளைக் குழவிப் பருவத்தே பசுமரத்தாணிபோல பதியவைத்த பேரறிவாளன்! கற்புத் தன்மையைப் பொதுவில் உரைத்திட்ட பிறன்மனை நயவா பேராண்மையாளன்! அவனியில் இரந்து நிற்கும் இழிநிலை அகன்றிட போராடிய இலக்கியக் கொள்கையாளன்! வள்ளுவன் நெறிதனில் வாழ்ந்து காட்டிய பாரதியாரின் வழிதனைப் பின்பற்றி நாமும் வாழ்வோமாக!. வாழ்க பாரதி ; வளர்க வையகம். _______ முனைவர் கா.காமாட்சி, உதவிப் பேராசிரியர், சீதாலட்சுமி இராமசுவாமி கல்லூரி, திருச்சி -2.

 • மணியரசன்

  பாரதியார் நூற்றாண்டு
  நினைவு அஞ்சலி சிறப்பு

  சங்கத் தமிழ் இலக்கிய பூங்கா மற்றும் திசைகள் வானொலி இணைந்து தந்த பாரதியாரின் வெற்றி பாமாலை அருமை
  இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட
  கவிஞர் பெருமக்களுக்கும் ஒருங்கிணைப்பாளர் அய்யா மற்றும் திசைகள் வானொலி அனைவருக்கும்
  முதல் வணக்கம் இது போன்ற நிகழ்ச்சிகள் தமிழுக்கு பெருமை சேர்க்கும் தமிழ் மாமேதைகளுக்கு நன்றி செலுத்தும் வகையில் அமைந்துள்ளது மிகவும் சிறப்பு
  🙏 நன்றி வணக்கம் 🙏💐💐💐👍

  சேலம் மணியரசன்

 • மைசூர் இரா.கர்ணன்

  புது தில்லி முனைவர் கல்யாணி பிரபாகரன்

  பாரதி போல் வருமா?

  பாட்டுக்கொரு புலவன் என்று
  போற்றப்படும்
  மகாகவி பாரதி
  ஏழாம் அகவையிலே
  பாட்டெழுதும் திறன்
  கொண்டிருந்தவன்.

  பதினோறாம் அகவையிலே
  எட்டையபுரப் புலவர்களால்
  ’பாரதி’ என்ற பட்டப் பெயர்
  சூட்டப்பட்டவன்.

  நமக்குத் தொழில் கவிதை
  நாட்டிற்கு உழைத்தல்
  இமைப்பொழுதும் சோராதிருத்தல் என
  தனது வாழ்க்கையின் குறிக்கோளைத்
  தெளிவுறக் கூறியவன்

  அரசவைகளில் சிறைப்பட்டுக்கிடந்த
  தமிழ்க் கவிதையை
  பாமரனும் கேட்டுச்
  சுவைக்கச் செய்தவன்

  சுவை புதிது பொருள் புதிது வளம் புதிது
  சொற் புதிது சோதி மிக்க
  நவகவிதை எந்நாளும்
  அழியாத மாக்கவிதை என்று
  தனது கவிதை பற்றிய
  விமரிசனத்தைத் தானே முன் வைத்தவன்

  பக்தி மார்க்கத்தில் காணப்படும்
  திருப்பள்ளியெழுச்சியை
  பாரதமாதாவுக்குப்
  பாடிக் காட்டியவன்

  அன்புக்கு அழிவில்லை
  சினத்தை வென்றிடு
  கவலையற்றிருத்தலே முக்தி
  இன்று புதிதாய்ப் பிறந்ததாக எண்ணு
  என்பன போன்ற
  தனிமனிதக் கொள்கைகளை
  வகுத்துக் கொடுத்தவன்

  படிப்பு, பாட்டு இவற்றோடு
  மாலையில் விளையாடி
  தேகப் பயிற்சி பெறுவதும்
  பெண்களுக்கு அவசியமானது என்று
  குழந்தைகளுக்கு நீதி சொன்னவன்

  எண்ணுவது உயர்வு
  ஏறுபோல் நட என்று
  குழந்தை உள்ளத்தில்
  நல்ல சிந்தனைகளை வளர்க்க
  புதிய ஆத்திச்சூடி படைத்தவன்

  சொல்லில் உயர்வு
  தமிழ்ச் சொல் என்றும்
  தமிழ்த்திரு நாடு
  பெற்ற தாய் என்றும் கூறி
  அவற்றைப் போற்றி
  வணங்கச் சொன்னவன்

  காதலினால் மானுடர்க்கு
  கவிதை கானம் சிற்பம்
  முதலிய கலைகளுண்டு
  ஆதலால் காதல் செய்வீர் என
  காதலின் மகத்துவம் கூறியவன்

  வீணையடி நீ எனக்கு
  மேவும் விரல் நான் உனக்கு என்று
  காதலின் சுவையைப்
  பருக வைத்து நம்மைப்
  பரவசமடையச் செய்தவன்

  தேச விடுதலை
  பெண் விடுதலை
  ஆகியவற்றைப் பாடியபோது
  வீறு கொண்டெழுந்தவன்

  காதல் உணர்வைக்
  கவிதையாக்கும்போது
  பாலும் கசந்ததடி சகியே
  படுக்கை நொந்ததடி என்று
  மெல்லுணர்வுடன் பதிவிட்டவன்

  உழவுக்கும் தொழிலுக்கும்
  வந்தனை செய்யச் சொல்லி
  ஆனந்த சுதந்திரம்
  அடைந்துவிட்டோம் என்று
  தீர்க்கதரிசியாய்
  சுதந்திரப் பள்ளு இசைத்தவன்

  மொழியின் பெயரால்
  மனிதனை இணைத்து
  தமிழச்சாதி என்று
  பெயர் சூட்டியவன்

  காக்கை குருவி எங்கள் சாதி என்று
  அனைத்து உயிர்களிடத்தும்
  அன்பு பூண்டொழுகும்
  அறநெறி போதித்தவன்

  முப்பது கோடியும் வாழ்வோம் – வீழில்
  முப்பது கோடியும் வீழ்வோம் என்று
  சமதர்மக் கொள்கை பேசியவன்

  அசைவறு மதியையும்
  சுடர்தரும் உயிரையும்
  பராசக்தியிடம் வரமாகக் கேட்டவன்

  மாதர் தம்மை இழிவு செய்யும்
  மடமையைக் கொளுத்தச் சொல்லி
  முழக்கமிட்டவன்

  ஆணும் பெண்ணும்
  நிகரெனக் கொண்டு
  நிமிர்ந்த நன்னடை
  நேர்கொண்ட பார்வை
  நிம்ர்ந்த ஞானச் செறுக்கோடு
  புதுமைப் பெண்ணாய்
  விளங்கச் சொன்னவன்

  வயிரமுடைய நெஞ்சு வேணும்
  இதுவே வாழும் முறைமையடி என்று
  பெண்கள் மன உறுதியைக்
  கைக்கொள்ளச் சொன்னவன்

  பெண்ணுக்கு விடுதலை
  இல்லையென்றால்
  உலகினிலே வாழ்க்கையில்லை
  என்றதொரு
  அபாய அறிவிப்பையும்
  வெளியிட்டவன்

  பெண்ணைத் தெய்வமாக
  அறத்தின் பிறப்பிடமாக
  அறிவின் உறைவிடமாக
  வீரத்தின் விளைநிலமாக
  ஆற்றலின் தனியிடமாக
  அன்பின் நிலைக்களமாக
  பற்பல கோணங்களிலே கண்டு
  பெண்மையின் தனிச்சிறப்பை
  உலகறியச் செய்தவன்

  ஞானத்தில் பரமோனத்தில்- உயர்
  மானத்தில் அன்னதானத்தில்
  கானத்தில் கவிதையில்
  உயர்ந்த நாடு என
  பாரத நாட்டின்
  பழம்பெருமை பாடியவன்

  விழிப்புணர்வு பெற்றெழுந்து
  வீர சுதந்திரம் பெற்று
  வாழ்க்கையைச் சிறப்புற
  அமைத்துக் கொள்ள வேண்டும் என
  வற்புறுத்தியவன்.

  சீர்திருத்தச் செயல் வீரனாகத்
  திகழ்ந்த
  பாரதியைப் போல் வருமா? என்று
  புகழ்ந்து கொண்டாடி
  பாரதி நினைவு நூற்றாண்டு
  அஞ்சலி விழாக் காணும் இந்நாளில்
  வாழ்க செந்தமிழ்
  வாழ்க நற்றமிழர்
  வாழ்க பாரத மணித்திருநாடு என்றுகூறி
  பாரதியுடைய இலட்சியம்
  வெற்றி பெற உழைப்போம்.

  முனைவர் கல்யாணி பிரபாகரன்
  புது தில்லி

 • Dr. G. Kalyani Prabaharan

  புதிய திசைகள் வானொலியில் நடைபெற்ற பாரதி நினைவு நூற்றாண்டு அஞ்சலி விழாவில் சங்கத் தமிழ் இலக்கியப் பூங்கா குழுவில் உள்ள கவிஞர்களின் கவிதைகள் ஒலிபரப்பாக வேண்டி பல நாட்களாக ஓயாது உழைத்து கவிதைகளின் தட்டச்சு பதிவை வாசித்து, குரல் பதிவை கேட்டு செம்மைப்படுத்தி ஓர் அழகான பா மாலையை உருவாக்கி பாரதிக்குச் சூட்டியுள்ள குழு ஒருங்கிணைப்பாளர் திரு. நீலகண்டன் ஐயா அவர்களது பணி போற்றத்தக்கது. பாற்கடலைக் கடைந்தபோது கிடைத்த நஞ்சை தான் ஏற்றுக்கொண்டு பிரபஞ்சத்தைக் காத்த இறைவன் நீலகண்டனின் பெயரைக் கொண்டிருப்பவர் அல்லவா… அதனால்தான் சிரமங்கள் அனைத்தையும் நீங்கள் ஏற்றுக் கொண்டு கவிஞர்களுக்குப் பேரானந்தம் என்னும் அமிர்தத்தைத் தந்துள்ளீர். குழுவிலுள்ள அனைவரின் சார்பாக தங்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கமும் நன்றியும் ஐயா.
  🙏🏻🙏🏻
  முனைவர் கல்யாணி பிரபாகரன்
  புது தில்லி

  • Dr.V.RAMESH BABU

   சங்கத் தமிழ் இலக்கிய பூங்கா ஒருங்கிணைப்பாளர் திரு நீலகண்ட தமிழன் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்கள் மண்டல மாவட்ட பொறுப்பாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எமது மாலை வணக்கம்

   பாரதியின் நூற்றாண்டு நினைவு தொடக்க கவியரங்க இன்றைய நிகழ்ச்சி நமது குழுமத்தில் தொடங்கி திசைகள் வானொலியில் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை சுமார் 10 மணி நேரம் இடைவெளி இல்லாமல் தொடர் நிகழ்வாக நடந்தேறியது

   இது ஒரு சாதாரண நிகழ்வு அல்ல பாரதியின் மீது தமிழ் மக்கள் கொண்டுள்ள பற்றை வெளிப்படுத்தும் விதமாகவே இது அமைந்தது இதில் பங்கெடுத்த அத்துணை கவிஞர்களும் தங்களுடைய சிறப்பான படைப்புகளை வெளியிட்டார்கள் அந்த வகையில் இந்தப் புலனத்தில் பயணித்துக் கொண்டிருக்க கூடிய இளம் கவிஞர்களான பள்ளி கல்லூரி மாணவ படைப்பாளர்களுடைய கவிதையும் மிக நேர்த்தியாகவும் சிறப்பாகவும் கருத்து ஆழ மிக்கதாகவும் இருந்தன மேலும் பிரான்ஸ் அமெரிக்கா பாரிஸ் போன்ற அண்டை தேசத்திலிருந்து கவிதை வழங்கிய கவிஞர் பெருமக்களின் கவியும் பாடலும் மிகச் சிறப்பாக அமைந்தன.

   இன்றைய நிகழ்வில் பங்கெடுத்த புதுமுகங்களின் கைதேர்ந்த படைப்புகள் அற்புதமாக அமைந்தன நமது கவியரங்கில் கலந்து கொண்ட அனைத்து கவிஞர் பெருமக்களும் தனது மென்மையான படைப்புகளை வழங்கி சிறப்பித்தனர் அவ்வகையில் இன் நிகழ்வில் பங்கெடுத்த ஒவ்வொரு கவிஞர் பெருமக்களையும்

   நமது படைப்புகளை பாரதியின் மெல்லிசை பாடல்களோடு கவிதைகளையும் உரைகளையும் செவிக்கு இனிமையாய் தொகுத்து வழங்கிய திசைகள் வானொலிக்கும்

   சங்கத் தமிழ் இலக்கிய பூங்கா வாழ்த்தி தமது நெஞ்சம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றது

   இவண்
   முனைவர் வீ ரமேஷ்பாபு
   இணை ஒருங்கிணைப்பாளர் சங்கத் தமிழ் இலக்கியப் பூங்கா

   நன்றி வணக்கம்

 • Dr.V.RAMESH BABU

  சங்கத் தமிழ் இலக்கிய பூங்கா ஒருங்கிணைப்பாளர் திரு நீலகண்ட தமிழன் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்கள் மண்டல மாவட்ட பொறுப்பாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எமது மாலை வணக்கம்

  பாரதியின் நூற்றாண்டு நினைவு தொடக்க கவியரங்க இன்றைய நிகழ்ச்சி நமது குழுமத்தில் தொடங்கி திசைகள் வானொலியில் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை சுமார் 10 மணி நேரம் இடைவெளி இல்லாமல் தொடர் நிகழ்வாக நடந்தேறியது

  இது ஒரு சாதாரண நிகழ்வு அல்ல பாரதியின் மீது தமிழ் மக்கள் கொண்டுள்ள பற்றை வெளிப்படுத்தும் விதமாகவே இது அமைந்தது இதில் பங்கெடுத்த அத்துணை கவிஞர்களும் தங்களுடைய சிறப்பான படைப்புகளை வெளியிட்டார்கள் அந்த வகையில் இந்தப் புலனத்தில் பயணித்துக் கொண்டிருக்க கூடிய இளம் கவிஞர்களான பள்ளி கல்லூரி மாணவ படைப்பாளர்களுடைய கவிதையும் மிக நேர்த்தியாகவும் சிறப்பாகவும் கருத்து ஆழ மிக்கதாகவும் இருந்தன மேலும் பிரான்ஸ் அமெரிக்கா பாரிஸ் போன்ற அண்டை தேசத்திலிருந்து கவிதை வழங்கிய கவிஞர் பெருமக்களின் கவியும் பாடலும் மிகச் சிறப்பாக அமைந்தன.

  இன்றைய நிகழ்வில் பங்கெடுத்த புதுமுகங்களின் கைதேர்ந்த படைப்புகள் அற்புதமாக அமைந்தன நமது கவியரங்கில் கலந்து கொண்ட அனைத்து கவிஞர் பெருமக்களும் தனது மென்மையான படைப்புகளை வழங்கி சிறப்பித்தனர் அவ்வகையில் இன் நிகழ்வில் பங்கெடுத்த ஒவ்வொரு கவிஞர் பெருமக்களையும்

  நமது படைப்புகளை பாரதியின் மெல்லிசை பாடல்களோடு கவிதைகளையும் உரைகளையும் செவிக்கு இனிமையாய் தொகுத்து வழங்கிய திசைகள் வானொலிக்கும்

  சங்கத் தமிழ் இலக்கிய பூங்கா வாழ்த்தி தமது நெஞ்சம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றது

  இவண்
  முனைவர் வீ ரமேஷ்பாபு
  இணை ஒருங்கிணைப்பாளர் சங்கத் தமிழ் இலக்கியப் பூங்கா

  நன்றி வணக்கம்

 • தஞ்சை த.இராமநாதன்

  *பாரதியாகிப் பார்க்கின்றேன்* தஞ்சை த இராமநாதன்

  சாலைக்கும் சாதி வேலைக்கும் சாதி
  பாரதி கனவுக்கு எங்கே நீதி?
  சமயமும் சமயம் பார்த்து மாறும்
  சாதி வெறியோ சமயத்தையும் மீறும்!

  தனி ஒருவனுக்கு மட்டுமா இல்லை?
  ஜகத்தினர் பலருக்கும் இல்லை!
  அன்று கொண்டார் கடும் கோபம்
  இன்று இருந்தால் விடுவார் சாபம்!

  ஒளியான கண்ணுக்கும் பஞ்சம்
  உறுதியான நெஞ்சுக்கும் பஞ்சம்!
  போலிகள் எல்லாம் ஆடுது ஆட்டம்
  காலிகள் கூடி போடுது கூட்டம்!

  தமிழ்போல் இனிய மொழி இல்லை
  தமிழ் மறந்தால் வாழ வழியில்லை!
  விதி கெட்டு வீழ வேண்டாம்
  மதி கெட்டு தாழ வேண்டாம்!

  *தஞ்சை த இராமநாதன்* சிங்கப்பூர், 11 Aug 2020.

 • Nappinnai babu @Nirupama seshadri

  அனைவரையும் வணங்குவது
  காவேரி பாக்கத்திலிருந்து பத்தாம் வகுப்பு படிக்கும்
  நப்பின்னை பாபு என்கிற நிரூபமா சேஷாத்ரி…

  சங்கத் தமிழிலக்கியப்
  பூங்காவில் பாரதி கவிதாஞ்சலிகீதம்
  கேட்க வந்திருக்கும் அனைவருக்கும் முதற்கண் கவிவணக்கம்

  இன்று பாரதியும் நானும்
  என்ற தலைப்பில் மகாகவி பாரதியின் நூற்றாண்டு நினைவு விழாவில் கவிதை
  தர விழைந்துள்ளேன் .

  சங்கத் தமிழ் இலக்கியப் பூங்கா குழுவின் தலைவர் அய்யன் வள்ளுவரையும் செயலாளர் பாவேந்தர் பாரதிதாசனையும் வணங்கி
  ஒருங்கிணைப்பாளார்
  நீலகண்ட தமிழன் தாத்தா அவர்களுக்கும் ராஜ்குமார் அங்கிள் முத்துராஜா அங்கிள் கங்காதரன் தாத்தா இன்னும் இதுபோன்ற எண்ணற்ற என்னுடைய ஆண்டிகளுக்கும் உறவுகளுக்கும் என் சிரம்
  தாழ்ந்த வணக்கங்கள்.

  என் முண்டாசு கவி பாரதியைப் பற்றி பேச
  கூட நமக்குக் கொடுத்து வைத்திருக்க
  வேண்டும்.

  அப்படிப் பார்த்தால்
  இங்கு பேசும் அனைவரும்
  கொடுத்து வைத்தவர்கள் தான். கேட்பவர்களும் கொடுத்து வைத்தவர்கள் தான்….

  எட்டையபுரத்து பாரதியும்
  காவேரிப்பாக்கத்து நானும்

  புதுமை பெண்ணாய் இருக்க
  சொன்னார் எங்கள் பாரதி
  புதுமைப் பெண்கள் இன்று
  உள்ளனர்… எங்கள் பாரதி தான் எங்கு உள்ளார் ? தெரியவில்லை.

  நீர் பிறந்த மண்ணில் தான்
  நாங்களும் பிறந்துள்ளோம்
  சற்று கர்வம் கூட உண்டு எனக்கு… இதை சொல்லிக்
  கொள்வதில்

  பன்னிரண்டில் பிறந்தீர்
  பன்னிரண்டில் மறைந்தீர்
  என்ன மாயமோ புரியவில்லை.

  ஓ…
  ஆதியும்
  அந்தமும் ஒன்று

  புரிய வைக்க தானோ? நன்று…

  இன்று நீ இருந்திருந்தால்
  கண்ணம்மா காவியம்…
  பட்டொளி வீசி காப்பியமாய்
  மாறியிருக்கும்

  தமிழ் வாழும் வரை உந்தன்
  கவி என்னைப் போன்றோருக்கு உயிர் மூச்சு

  எட்டு திசைகளிலும் காற்றோடு
  காற்றாய் கலந்து

  தமிழரின்
  மூச்சோடு மூச்சாக நிறைந்து

  தென்றலாய்
  தவழ்ந்து உலா வந்திருக்கும்

  ஒவ்வொரு தமிழன் சுவாசத்திலும் .

  தேசிய கவிஞன் அல்லவா நீ?

  தமிழன் என்ன இந்தியர்
  அனைவரின் மனதிலும்
  உமக்கு தனியிடம் உள்ளதே.

  ஒவ்வொரு இந்தியனின்
  மனதிலும் நீ வாழ்ந்திருக்கிறாய்…

  அதற்கு
  எடுத்துக்காட்டு-ஒரு தெலுங்கு பாட்டு…

  பயமு லேது
  பயமு லேது
  பயமு லேது
  பயமு லேது ரா

  எங்கெங்கும் தேடித் தேடியே
  பார்த்தேன்…. அச்சமற்றவர் காணவில்லையே…

  ஆனால் இந்த யுகத்தில் எவரும் உம்மைப் போல்
  இல்லை பாரதி….

  ஆதலால்
  நீ கூறியபடி வாழப்
  போகிறேன். உன் கவிதைகளாக நான் மாறப் போகிறேன்…

  தமிழோடு உறவாடி
  ரௌத்திரம் பழகி
  புதுமைப் பெண்ணாய்
  வாழ்ந்துகாட்டி
  தன்மானத் தடம் பதிக்க
  ஆசைப் படுகிறேன்!!

  வாய்ப்பளித்த நல் உள்ளங்களுக்கு நன்றி!!

  காவேரி பாக்கத்திலிருந்து
  நப்பின்னை பாபு

  வணக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *