காஞ்சிபுரம் மாவட்டத்தில் விருது பெறும் நல்லாசிரியர்கள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் விருது பெறும் நல்லாசிரியர்களின் பெயர் பட்டியலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்தார்.

அதன்படிகாஞ்சிபுரம் மாவட்டத்தில் நாயகன்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எஸ்.ரமேஷ், பெருநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மா.மாலதி, கொளத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளி எம்.லாரன்ஸ், குன்னம் அரசு உயர்நிலைப்பள்ளி கோ.நண்பன், கீழம்பி அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி வே.ரமேஷ்குமார், கூத்திரம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி க.சங்கரி, மேற்கு ராஜவீதி சி.எஸ்.ஐ.நடுநிலைப்பள்ளி ஏ.ஜாக்குலின் மேரி ஆகிய 7 பேர் நல்லாசிரியர் விருது பெறுகிறார்கள். இவர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா அவர்களால் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது.

Share this
தொடர்புடையவை:  TNEA தரவரிசை பட்டியல் 2020 இன்று வெளியிடப்படும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *