காந்திகிராம பல்கலைக் கழகத்தில் இறுதியாண்டு மாணவர்களுக்கு பருவத் தேர்வு

திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக் கழகத்தில் இளங்கலை மற்றும் முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்கான பருவத் தேர்வு வருகிற 17-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. தேர்வு அட்டவணையை வெளியிட்டு பல்கலைக்கழக தேர்வு நெறியாளர் மணி விடுத்துள்ளார் அறிக்கையில் கூறியிருப்பதாவது

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கல்லூரி மாணவர்களுக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. இதற்கிடையே இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் தவிர மற்ற மாணவர்கள் அனைவரும் பருவத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மேலும் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு இந்த மாதம் 30ம் தேதிக்குள் தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு( யு.ஜி.சி) அறிவுறுத்தியுள்ளது.

இதையடுத்து காந்திகிராம பல்கலைக் கழகத்தில் இளங்கலை மற்றும் முதுகலை இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கான இறுதித் பருவத் தேர்வு வருகிற 17-ஆம் தேதி முதல் ஆஃப்லைன் முறையில் நடத்தப்பட உள்ளது. அதாவது வழக்கமான தேர்வு முறைகள் படியும் அரசு விதித்த கொரோனா தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றியும் தேர்வுகள் நடைபெறும்.

இதுதவிர தேர்வுகள் வழக்கமாக 3 மணி நேரம் நடைபெறும் ஆனால் தேர்வு நேரம் 2 மணிநேரமாக குறைக்கப்பட்டுள்ளது இறுதி பருவத் தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவருக்கும் தேர்வு கால அட்டவணையை மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. தேர்வு எழுத வரும் மாணவர்கள் அனைவரும் முககவசம் அணிவது கட்டாயம் என்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதவிர தேர்வு எழுத வரும் விடுதி மாணவர்கள் சமூக இடைவெளியுடன் விடுதியில் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன தேர்வுகள் நடக்கும் போது பரவலை தடுக்கும் வகையில் அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Share this
தொடர்புடையவை:  தமிழக பட்ஜெட்! மக்களுக்கு பயனுள்ள பல அதிரடி அறிவிப்புகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *