கேரளாவில் காற்றுடன் கன மழை

கேரளாவில் வரும் 14 – ந் தேதி வரை மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யக் கூடும்

கேரளாவில் காற்றுடன் கன மழை பெய்து வருகிறது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது

கேரளாவில் வரும் 14 – ந் தேதி வரை மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யக் கூடும் மலப்புரம் , கோழிக்கோடு, வயநாடு , கண்ணூர் காசர் கோடு ஆகிய 5 மாவட்டங்களில் வரும் 2 தினங்களில் பலத்த மழை பெய்யக் கூடும். இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

மற்ற மாவட்டங்களில் 14 – ந் தேதி வரை லேசானது முதல் கன மழை பெய்யும் இந்த மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. பலத்த மழை காரணமாக நகரபகுதிகளில் தாழ்வான இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங் களுக்கு செல்ல கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Share this
தொடர்புடையவை:  மின் கட்டணக் குழப்பம்;
மக்களைச் சுரண்டும் மின்சார வாரியம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *