ஜப்பானின் அடுத்த பிரதமர் யார்

உடல் நலக்குறைவு காரணமாக, பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய ஷின்சோ அபே முடிவு செய்துள்ளதால், ஜப்பானின் அடுத்த பிரதமர் யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஆளும் கட்சியான, ‘லிபரல்’ ஜனநாயக கட்சியின் பிரதிநிதிகள், வரும், 14ல் கூடி, அடுத்த பிரதமரை தேர்வு செய்யஉள்ளனர்.

பிரதமர் ஷின்சோ அபேயின் வலதுகரமாகவும், அரசு செய்தி தொடர்பாளராகவும் இருக்கும், யோஷிடி சுகா, 71, அடுத்த பிரதமராக தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக, ஜப்பான் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அபே தலைமையிலான அரசு சுமுகமாக இயங்குவதன் பின்னணியில், சுகா உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Share this
தொடர்புடையவை:  கொரோனா வைரஸ் இந்த ரத்த வகை கொண்டவர்களை எளிதில் தாக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *