தடுப்பு மருந்து பரிசோதனையில் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்

மாஸ்கோ,

இங்கிலாந்தில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ராஜெனேகா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி மருந்தை செலுத்தியவர்களில் ஒருவருக்கு எதிர்மறை விளைவுகள் ஏற்பட்டதை தொடர்ந்து, அந்த தடுப்பூசியின் 3-வது கட்ட பரிசோதனையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் அறிவித்து உள்ளது.

இதுபற்றி ரஷிய செய்தி நிறுவனம் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்துள்ள உலக சுகாதார அமைப்பு, தடுப்பு மருந்து பரிசோதனையில் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று கூறி உள்ளது. அத்துடன், மருத்துவ ரீதியிலான பரிசோதனை கட்டத்தில் ஒரு மருந்தின் சோதனையை நிறுத்தி வைப்பது வழக்கத்துக்கு மாறானது அல்ல என்றும் உலக சுகாதார அமைப்பு கூறி உள்ளது.

Share this
தொடர்புடையவை:  அமித் ஷா ஏன் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிக்கிச்சை எடுக்கவில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *