தன்முனைக் கவிதைகள்

*சங்கு பால் குடிப்பதற்கு
அடம் பிடிக்கிறது.
இறுதி காலத்தில்
அப்பாவின் உயிர்.

*அடுத்த கட்ட நகர்வினால்
நகர்ந்து செல்லும் மனிதா!
நல்ல நட்புகளையும்
உதறி செல்கிறாய்.

*உனது உயரம் கண்டு
உச்சி முகர்ந்து பார்க்கிறோம்
உதாசீனப் படுத்துகிறாய்
உன் வெட்டி கர்வத்தால்.

*வயதான மேனிபோல்
வறண்டு போன பூமி
வாழ்வதற்கு உணவில்லை
வந்து சேர் மாரியே.

*மடிமுட்டி பால் பருக
துடிக்கின்றது கன்று
வாய் கவசம் தடுக்கின்றது
பசியாரா கன்று.

– மணவை கார்ணிகன்

Share this
தொடர்புடையவை:  சுதந்தரக் காற்று

One Comment

  • கார்னிகன்

    திசைகள் நிறுவனருக்கு என் மனமார்ந்த நன்றிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *