திண்டுக்கல் அருகே வீட்டின் ஜன்னல் வழியே கதவை திறந்து 80 பவுன் நகை ரூ.1.5 லட்சம் கொள்ளை

திண்டுக்கல் அருகே வீட்டின் ஜன்னல் வழியே கதவை திறந்து 80 பவுன் நகை ரூ.1.5 லட்சம் கொள்ளை செம்பட்டி காவல்துறையினர் விசாரணை

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா சித்தையன்கோட்டை பேரூராட்சிக்குட்பட்ட சேடபட்டியில் வசித்து வருபவர் காட்டுராஜா
இவருக்கு உடல்நிலை சரியில்லை என நலம் விசாரிப்பதற்காக திண்டுக்கல் அரண்மனைகுளம் பகுதியில் வசிக்கும் இவரது மாமா சுப்பையா என்பவர் தனது குடும்பத்தாருடன் இரவு சேடபட்டி வந்ததாக கூறப்படுகிறது.

அப்போது திண்டுக்கல் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தோடு வருவதால் பாதுகாப்புக்காக அவர் வைத்திருந்த 80 பவுன் நகை மற்றும் ரூ.1.5 லட்சம் ரூபாய் பணத்தை பேக்கில் வைத்து எடுத்துவந்துள்ளார்.
இரவு நேரமாகியதால் காலையில் ஊருக்கு செல்வோம் என காட்டுராஜா வீட்டின் அருகில் உள்ள வீட்டில் சுப்பையா குடும்பத்தில் உள்ள மூன்று பெண்கள் மட்டும் தங்கியுள்ளனர்.

இரவு மர்மநபர்கள் அவர்கள் தங்கியுள்ள வீட்டின் அருகில் இருந்த ஜன்னல் வழியாக கதவை திறந்து சுப்பையா குடும்பத்தினர் பேக்கில் வைத்திருந்த நகை மற்றும் பணத்தை திருடி சென்று விட்டதாக கூறப்படுகிறது.

காலையில் எழுந்து பார்த்தபோது பேக்கை காணாதது கண்டு அதிர்ச்சியடைந்து செம்பட்டி காவல்நிலையத்தில் புகார் கொடுத்ததை தொடர்ந்து ஆய்வாளர் ராஜேந்திரன் தலைமையில் உதவி ஆய்வாளர் சரவணக்குமார் சிறப்பு உதவி ஆய்வாளர் முருகன் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர் மேலும்,
கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.

Share this
தொடர்புடையவை:  கொரோனா விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *