தூத்துக்குடி ஏரல் அருகே பெண் கொடூரக்கொலை

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகேயுள்ள சம்படி கிராமம் மேலத்தெருவைச் சேர்ந்தவர் கணேசன் மனைவி செங்கமலம் (வயது47). இவர்களுக்கு 2 மகள் ஒரு மகன் என 3 குழந்தைகள் உள்ளனர். கடந்த 8 வருடங்களுக்கு முன்னர் கணேசன் இறந்து விட்டார்.

பின்னர் அவரது தம்பி ஆண்டியப்பன் (வயது42) என்பவருடன் செங்கமலம் தனது 3 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று காலை அவரது வீட்டிலிருந்து சுமார் அரை கிமீ தொலைவில், முகம் சிதைக்கப்பட்டு நிர்வாண கோலமாக கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி, உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Share this
தொடர்புடையவை:  சீனாவின் ஆய்வகங்களில் இருந்து கொரோனா பரவியது எனும் குற்றச்சாட்டை ஏற்க முடியாது; சீனா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *