நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி காலமானார்

நகைச்சுவை நடிகர் வடிவேலு பாலாஜி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 42.

உடல்நலக்குறைவால் இரு வாரங்களுக்கு முன்பு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வடிவேல் பாலாஜி, சிகிச்சை பலனின்றி இன்று காலமாகியுள்ளார்.அவருக்கு மனைவியும் ஒரு மகன், மகள் உள்ளார்கள்.

கலக்கப் போவது யாரு உள்ளிட்ட பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று அதன்மூலம் புகழ்பெற்றவர் வடிவேல் பாலாஜி. நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் பாணியைப் பின்பற்றி நடித்ததால் அதிகக் கவனம் பெற்றார். பல படங்களிலும் அவர் நடித்துள்ளார்.

வடிவேல் பாலாஜியின் மறைவுக்குத் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.

Share this
தொடர்புடையவை:  உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *