நாங்குநேரி பெருமாள் கோவிலில் கோகுலாஷ்டமி விழா

நாங்குநேரி பெருமாள் கோவிலில் கோகுலாஷ்டமி விழா முன்னிட்டு வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது.

108 திவ்ய தேசங்களில் பெருமாள் ஆலயங்களில் ஒன்றான நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவிலில் நேற்று கோகுலாஷ்டமி விழா 31வது மடாதிபதியான மதுரகவி வானமாமலை ராமானுஜ ஜீயர் சுவாமிகள் ஆசிர்வாத்துடன் நடந்தது. இதில் ஆவணி மாத தேய்பிறை அஷ்டமி நாளான  நேற்று நடந்த கோகுலாஷ்டமி விழாவில் வானமாமலை பெருமாளுக்கும், திருவரமங்கை தாயாருக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன.

நேற்று மாலையில் உற்சவரான தெய்வநாயகனுடன், ஸ்ரீதேவியும் தோளுக்கினியன் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தனர்.  பின் கோவில் மண்டபம்  முன்பு வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது . இதில் அங்கு அமைக்கப்பட்டிருந்த வழுக்கு மரத்திலிருந்த பரிசு பொருட் களை எடுப்பதற்காக இளைஞர்கள் போட்டி போட்டு ஏறினார். அப்போது அவர்கள் மீது தண்ணீர் ஊற்றப்பட்டது. மேலும் வழுக்கு மரத்தில் பூசப்பட்டு இருந்த எண்ணெயால் இளைஞர்கள் மரத்தில் ஏற முடியாமல் வழுக்கி விழுந்தனர். 

இறுதியில் ஒருவர் மீது ஒருவர் ஏறி வழுக்கு மரத்தின் உச்சியில் இருந்த பரிசுப் பொருளை எடுத்துச் சென்றனர். அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்த பெருமாளுக்கு அங்கேயே சிறப்பு தீபாரதனை நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Share this
தொடர்புடையவை:  வாலீஸ்வரா் கோயிலில் நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *