நாளை நீட் தேர்வு; கரோனா தடுப்பு விதிகள் அமல்

மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு ‘நீட்’ எனும் நுழைவுத்தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை தேர்வு நடைபெற உள்ளது.

நாடு முழுவதும் 3 ஆயிரத்து 842 மையங்களில் 15 லட்சத்து 97 ஆயிரத்து 433 பேர் எழுத உள்ளனர். தமிழ்நாட்டில் 238 தேர்வு மையங்களில் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 990 பேர் எழுத இருக்கின்றனர். தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில், தமிழகத்தில், வேலூரில் 2 தேர்வு மையங்கள் மாற்றப்பட்டுள்ளன. இதுகுறித்த அறிவிப்பு அந்தந்த தேர்வர்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாக தெரிவிக்கப்பட்டுவிட்டதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

மேலும் கொரோனா நோய்த் தொற்று பரவி வரும் காரணத்தால் தேர்வர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கின்றன.

இதுதொடர்பாக மாணவர்களின் ஹால் டிக்கெட்டோடு கட்டுப்பாடுகள் மற்றும் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் இணைக்கப்பட்டு இருக்கின்றன. அதனை மாணவ-மாணவிகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) தெரிவித்துள்ளது.

Share this
தொடர்புடையவை:  சமூக இடைவெளியுடன் குமரியில் நடந்த திருமணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *