“படைப்பாளர் ஞாயிறு”

கக கவிதைகள் மற்றும் காக்கை பிரதிநிதிகள் இணைந்து கடந்த சில மாதங்களாக ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை “படைப்பாளர் ஞாயிறு” நிகழ்வினை இணையவழியில் நடந்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக இப்போது “இணையவழி ஹைக்கூ பயிற்சி பட்டறை” நிகழ்வு நடந்து வருகிறது. மூன்றாம் நாள் நிகழ்வாக கடந்த ஞாயிற்றுக்கிழமை 20/09/2020 அன்று கவிஞர்.சாரதா சந்தோஷ் அவர்கள் ” தமிழ் ஹைக்கூகளில் பெண்களின் பங்களிப்பு” என்ற தலைப்பில் பயிற்சி அளித்தார்.

கக கண்ணன் அவர்களின் வரவேற்புரையுடன் நிகழ்வு தொடங்கியது.

கவிஞர்.சாரதா சந்தோஷ் அவர்கள் தமிழ் ஹைக்கூ உலகில் பெண்களின் பங்களிப்பு பற்றிய தனது உரையில் சங்க இலக்கியக்காலம் தொட்டு இலக்கிய உலகில் பெண்களின் பங்களிப்பு குறித்து ஆரம்பித்து பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் ஆண்டுகளில் பயணித்து இருபதாம் ஆண்டின் கவிஞர்கள் வரை குறிப்பிட்டது சிறப்புற இருந்தது.

தமிழ் ஹைக்கூ பெண் கவிஞர்கள் டாக்டர் லீலாவதி அம்மா, முனைவர் மித்ரா அம்மா, கவிஞர் நிர்மலா சுரேஷ் தொடங்கி இன்றைய இளம் கவிஞர்கள் வரை அனைத்து கவிஞர்களின் பெயருடன் ஹைக்கூகளையும் அறிமுகப் படுத்தினார்.

மேலும் பெண் கவிஞர்கள் எழுதி வெளிவந்த ஹைக்கூ நூல்கள், தொகுப்பு நூல்களையும் அறிமுகப் படுத்தியதுடன் பார்வையாளர்கள் கேட்ட சந்தேகங்களையும் நிவர்த்தி செய்தார்.

கக கண்ணன் அவர்களின் நன்றியுரையுடன் இணையவழி பயிற்சி பட்டறை நிறைவடைந்தது.

அன்புச்செல்வி சுப்புராஜூ

Share this
தொடர்புடையவை:  ஒரு கண்ணீர் கதை…

One Comment

  • Saradha Santosh

    இணையதள நிகழ்ச்சியை நேரில் கண்டு இரசித்து.. பாராட்டியது மட்டுமல்லாமல்.. அதை அழகாக எழுத்தில் தொகுத்த அன்புச்செல்வி அக்காவை வாழ்த்தி வணங்குகிறேன்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *