பீகார் தேர்தல் அட்டவணை இன்று வெளியிடப்படும்!

தலைமை‌ தேர்‌தல் ஆணையர் சுனில் அரோரா, டெல்லியில் இன்று நண்பகல் செய்தியாளர்களை சந்திக்கிறார்.

அப்போது, பீகார் தேர்தல் அட்டவணையை வெளியிடுகிறார்.

பீகாரில் தற்போது நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. 243 உறுப்பினர்களை கொண்ட பேரவையின் பதவிக்காலம் அக்டோபர் 29 ஆம் தேதி நிறைவடைகிறது.

கொரோனா சூழலால் தேர்தலை நடத்துவது சவாலாக இருக்கும் ‌என்பதை கருத்தில் கொண்டு, பீகாருக்கு செ‌ன்று கள நிலவரம் குறித்து ஆய்வு செய்யப்படும் என சுனில் அரோரா கூறியிருந்தார்.

Share this
தொடர்புடையவை:  நவராத்திரி பண்டிகைக்காக திண்டுக்கல் அருகே கொலு பொம்மைகள் தயாரிப்பு மும்முரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *