புதுவயல் அருகே காரில் கடத்தப்பட்ட 34 கிலோ கஞ்சா பறிமுதல்

சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை அடுத்த ஜெயங்கொண்டான் கிராமத்தில் இருந்து, நாட்டுசேரி என்ற கிராமம் செல்லும் சாலையோரத்தில் நேற்று நள்ளிரவு காரை நிறுத்தி நான்கு பேர் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்பொழுது, அந்த வழியாக ரோந்து வந்த சாக்கோட்டை போலீசார் சந்தேகமடைந்து, அந்த 4 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

நான்கு பேரும் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்த நிலையில், காரை போலீசார் சோதனையிட்டனர். அப்போது அந்த 4 பேரும் போலீசாரின் பிடியில் இருந்து தப்பி ஓடியுள்ளனர். காரில் 34 கிலோ போதைப்பொருளான கஞ்சா இருப்பது தெரியவந்ததையடுத்து ,காரை சாக்கோட்டை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்த நிலையில், தப்பியோடிய நான்கு பேரையும் பிடிக்க போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே சம்பவ இடத்தை சிவகங்கை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சந்திஸ் ஆய்வாளர் சுந்தரி ஆகியோர் நேரில் ஆய்வு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this
தொடர்புடையவை:  தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *