வேறென்ன… ?

ஆதி இரகசிய சாயலொத்த
அகச் சலனமொன்று குறுகுறுக்கிறது!

தேக்கி வைக்கப்பட்ட நினைவுப் பிசிறுகளின் கிசுகிசுப்பால் நாளங்கள்
இறுகி மௌனிக்கின்றன!

ஆழ்ந்த பித்தொன்றின்
ஆர்ப்பரித்த வாதைகள்
விழியோர உதிரலின் மொழிபெயர்ப்பில்
அடங்கிச் சமனப்படுகின்றன!

அழுத்தத்தின் அதிர்வில்
அசையத் துவங்கிய
பேரண்ட ஒற்றைத்துளியின் உடைதல்
இயல்பாய் நடந்தேறியது!

இனி எஞ்சியிருப்பது
மாயத் தூக்கம் கொள்ளும்
அந்திமக் கனலின் அணைப்பேயன்றி வேறென்ன?

– அன்புச்செல்வி சுப்புராஜூ

Share this
தொடர்புடையவை:  சங்கத்தமிழ் இலக்கியப் பூங்கா கவிதைகள் - 04

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *