உள்ளம் திருடிவிட்டாய்..

உரலிலே கட்டி உள்ளம் திருடிவிட்டாய்
உன்னதச் செயலுக்கு உண்மை மறைத்தாய்

கோல விழிக்காட்டி கோவிந்தா புன்னகைத்தாய்
கூப்பிட்ட கோபியருக்கு கூடி நின்றாய்

கட்டினாலும் கட்டுக்கடங்காத கண்ணனே கவினாக
கட்டிப்போடுவாய் கருவிழி லீலையிலே கண்ணா

தாயவள் தந்த தண்டனை மாயவன்
பூரிக்கும் மகிழ் வினையான காரணசெயலே

நந்த கோபாலா யசோதை தயாபரா
நன்மைகள் நல்கவே நடம்புரிவாயே மாதவா!!!

இரா.விஜயகல்யாணி

Share this
தொடர்புடையவை:  பைரவர் ஆலயங்களில் சிறப்புப் பூஜை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *