கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு சளி, இருமல், வயிற்றுப்போக்கு ஆகியவை அறிகுறிகளாக இருந்தாலும் சுவை மற்றும் வாசனை அறியும் தன்மையை இழப்பதுதான் நம்பகமான அறிகுறி என்று இங்கிலாந்து விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து லண்டனில் இருந்து வெளியாகும் பிளாஸ் மெடிசன் என்ற மருத்துவ இதழில் வாசனை, சுவை திடீரென தெரியாவிட்டால் உடனடியாக தனிமைப்படுத்திக்கொண்டு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.