பாபநாசம் அணை நீர்மட்டம் 108 அடியாக உயர்ந்துள்ளது

மேற்குத் தொடர்ச்சி மலையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் பாபநாசம் அணை நீர்மட்டம் 108 அடியாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் நீர்மட்டம் மேலும் 2 அடி உயர்ந்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 1901 கன அடி நீர்வரத்து உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரு அடி உயர்ந்து 126.38 அடியானது.

இரு அணைகளுக்கும் விநாடிக்கு 1901 கன அடி நீர்வரத்து உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 304 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மணிமுத்தாறு அணையில் 72.80 அடியாக இருந்த நீர்மட்டம் மேலும் ஒரு அடி உயர்ந்து 73.80 அடியானது. அணைக்கு விநாடிக்கு 741 கன அடி நீர்வரத்து உள்ளது.

Share this
தொடர்புடையவை:  தமிழகத்தின் 27 மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்வு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *